போகர் சப்தகாண்டம் 1216 - 1220 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1216. பாடியே தாளகமோர் பலந்தானாகும் பாங்கான துருசுடனே காரந்தானும்
கூடியே சரியிடையா யெடுத்துக்கொண்டு குணமாக தாளகத்துக் கங்கிபூட்டி
நாடியே முலைப்பாலி லரைத்துமேதான் நலமாக மூன்றுபுடந் தானேபோடு
நீடியே மண்மறைவில் புடமேபோடு நேர்ப்பாகத் தாளகமும் கட்டிப்போமே

விளக்கவுரை :


1217. கட்டியதோர் தாளகமும் விராகனொன்று கருவான வெள்ளியது விராகனொன்று
திட்டமுடன் செம்பதுவும் விராகநாலு திறமாகத் தானுருக்கி குருதானீய
கிட்டமா மோடதனி லூதிப்போடு கொடிதான வெள்ளியது மாற்றாறாகும்
வட்டமுடன் தங்கமது நேரேசேர்த்து வளமாகத் தகடடித்தப் புடத்தைப்போடே

விளக்கவுரை :

[ads-post]

1218. போடவே மாற்றதுமிறங்கியேதான் போகாது முப்புக்கு காவிக்குந்தான்
தீடவே சொர்ணமது மதிகவன்னம் திறமான வாதவித்தை யிதினாலாச்சு
கூடவே சிவயோகந்தன்னில்நின்று கும்பகத்தை மேல்நோக்கி மேவிப்பாரு
பாடவே போகரிஷி தேவர்தாமும் பாடிவைத்தார் லோகத்து மாண்பருக்கே

விளக்கவுரை :


1219. மாண்பான மின்னமொரு கருவைக்கேளு மகத்தான வேதையிது சுளுக்குவேதை
கான்பான வயமதுதான் ராவிமைந்தா கணக்குடனே பொடியதுவும் பலந்தானொன்று
நாண்பான துருசதுவும் பலந்தானாலு நலமான சீனமது பலந்தானாலு
வீண்பான சாரமது பலந்தானாலு வெடியான யுப்பதுவும் பலந்தானாலே

விளக்கவுரை :


1220. நாலான படிகாரந் தன்னைத்தானும் நலமாகப் பங்கிட்டு வதிலோர்பாகம்
மாலான வயப்படியில் போட்டரைத்து வளமாக வமுரியினால் கழுவிப்போடு
சேலான விந்தமுறை நாலுபாகஞ் சிறப்பாகக் கழுவிடவே வயமுந்தானும்
காலான கசடதுதான் நீங்கியல்லோ காரான பொடியாக விருக்குந்தானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1211 - 1215 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1211. தாமேதான் வழலையைத்தான் மறைத்துவிட்டார் சதகோடிரிஷிகள்முதல் முனிவர்தாமும்
நாமேதான் வழலையுட மார்க்கந்தன்னை நாதாக்கள் தானறிய வெளியாய் சொன்னேன்
போமேதான் வென்பேரிற் கோபங்கொண்டு புறங்கூறி தூஷனைகள் மிகவுஞ்சொன்னார்
வேமேதான் திஷிகளுட சாபத்தாலே வெளிப்பட்டேன் சீனபதி சென்றேன்தானே

விளக்கவுரை :


1212. தானான அயமதுதான் பொடிதான்பத்து தாக்கான செம்பதுவும் விராகனொன்று
வேனான தாளகம்விராகனொன்று வியர்வான பாஷாணம் விராகனொன்று
கோனான லிங்கமது விராகனொன்று கொடிதான பூரமது விராகனொன்று
கானான வீரமது விராகனொன்று கடிதான சீனமும்விராகனொன்றே

விளக்கவுரை :

[ads-post]

1213. ஒன்றான வெடியுப்பு விராகனொன்று வுறுதியாந்துருசுடனே விராகனொன்று
நன்றான துத்தமது விராகனொன்று நலமான காரமது விராகனொன்று
பன்றான கெவுரியது விராகனொன்று பாங்கான ரசமதுதான் விராகனொன்று
தன்றான விவையெல்லாம் வொன்றாய்ச்சேர்த்து தாக்குனே யெரியாலன் பாலாலாட்டே

விளக்கவுரை :


1214. ஆட்டியே நாற்சாமமரைத்துத்தீரு வன்பாக குகைதனிலே சீலைசெய்து
மாட்டியே யுலையில்வைத்து வூதித்தீரு மகத்தான களங்கமது சொல்லப்போமோ
தாட்டிகமாய் களங்கொன்று செம்புவொன்று கருவான வெள்ளியது வொன்றதாகும்
பூட்டியே தானுருக்கி வூதிப்போடு போக்கான வெள்ளியது கட்டிப்போச்சே

விளக்கவுரை :


1215. போச்சென்று விடுகாதே மைந்தாகேளு பொங்கமுடன் நாலிலொன்று தங்கஞ்சேர்த்து
காய்ச்சியே தகடடித்துப் புடத்தைப்போடு கலங்காமல் மாற்றதுவுங் காணும்பாரு
காய்ச்சியே வுருக்குமுகந்தன்னிலேதான் சார்வான செந்தூர முப்புமாகும்
பாய்ச்சவே மாற்றதுவு மிருவதாகும் பாடினார் போகரிஷி பாடினாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1206 - 1210 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1206. நாட்டவே எச்சிலைதான் கொண்டபோது நாடுமே தாகவிடாய் தீருமோசொல்
மூட்டவே பச்சிலையில் காசாரமுடிப்பதுவும் பொன்னல்லோ பொய்யுமாமே
காட்டவே திணையளவு சூதம்விட்டால் காசினியில் வாதமென்ற யேமமில்லை
நீட்டவே போகரிஷி சொன்னநூலில் நெடிதான பொன்கணக்கு யிந்நூலாமே

விளக்கவுரை :


1207. இந்நூலா மேழாயிரக்காவியத்தில் யெழிலான குறுக்குடனே நெடுக்குப்பாதை
பந்நூலா மநேகவிதக்காவியத்தில் பலப்பலவாம் பாடிவைத்தார் சித்தரானோர்
அந்நூலில் மறைத்ததொரு கருவெல்லாந்தான் அப்பனேயாவுமிந்தக் காவியத்தில்
எந்நூலாமே ழாயிரச் சத்தகாண்ட மெழிலாகத் தாமுரைத்ததுண்மையாமே    

விளக்கவுரை :

[ads-post]

1208. உண்மையாஞ் சதகோடி சூரியன்போல் வுத்தமனே தாமுறைப்போ முறுதியாக
தன்மையாய் பாஷாணம்வீரந்தானும் பாங்கான ரசமுடனே காரந்தானும்
தண்மையாய்ப் பூநீறு சுண்ணாம்போடு தாக்கியே தானரைப்பாய் உமிநீராலே
வண்மையாய் செம்பகலில் வைத்துமூடி வாகாகப் புடம்போட வெளுக்கும்செம்பே

விளக்கவுரை :


1209. செம்பான களங்குடனே மதிசேரொக்க சேர்க்கவே வயமதுதா னெட்டதாகும்
செம்பான களங்கதுவும் வெள்ளிசேர்ந்து செழிப்பான துய்யான்போல் சிவந்துமின்னும்
செம்பான செம்பதுதான் சிவப்புமாறி சிறக்கவே வாளமது மாறிப்போகும்
செம்பான லோகமது நிறமேகுன்றில் தேகமதில் வெகுவித்தையாடலாமே

விளக்கவுரை :


1210. ஆடலா முழக்கினிலே கிழக்குமேற்கு அப்பனேநின்றநிலை விள்ளுவாறே
தேடவே பராபரத்தி னாதியந்தம் சேர்ந்துரைப்பார் இவ்வுலகில் கூறப்போமோ
பாடலாம் போகரிஷி சொன்னநூலில் பார்க்கவே யாதியந்தம் காணப்போமோ
நீடலாஞ் சித்தர்முதல் கூட்டங்கூடி நேர்ப்பாக பாடிவைத்தார் பலநூலாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1201 - 1205 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1201. பாரேதான் லோகமதில் பஞ்சமானால் படுவுரலுங் கல்லுமது பஞ்சமாமோ
சீரேதான் குகைதனிலே வாழுஞ்சித்தர் சிறப்பான தெரிசினைக்குறவுமுண்டோ
காரேதான் சித்தர்செய்யும் வேதைமார்க்கம் கடிதான செம்பொன்று செப்பக்கேளும்
கூரேதான் செம்பதுவும் பலமேவாங்கிக் குறிப்பாகத் தானுருக்கிகிராசமீயே

விளக்கவுரை :


1202. ஈயவே வீரமதுகாலதாகும் இயலான சிற்றண்டங்காலதாகும்
கையவே மதியுப்புக் காலதாகும் நலமான சாரமது காலதாகும்
பையவே விதுவெல்லாமொன்றாய்ச்சேர்த்து பரிவாக செம்புக்கு கிராசமீவாய்
கொய்யவே செம்பதுவும் கசடுநீங்கி நுணுக்கமாய்ச் சவளைபோலாகுந்தானே

விளக்கவுரை :

[ads-post]

1203. தானான செம்பதனைத் தகடடித்து தாழ்ச்சியாய் புடம்போட மருந்தைக்கேளும்
தேனான மனோன்மணியாள் சத்தரூபி தெளிவான செம்புதனிற் கவசம்பூசி
வேனான சீலையது வலுவாய்ச்செய்து விருப்பமுடன் குக்குடமாம் புடத்தைப்போடு
பானான புடமாறி யெடுத்துப்பாரு பாங்கான செம்பதுவுஞ் சுத்தியாச்சே

விளக்கவுரை :


1204. ஆச்சப்பா செம்பதுவு மொன்றேயாகும் அப்பனே வெள்ளியது மூன்றேயாகும்
காச்சப்பா தங்கமது வொன்றேயாகும் கருவாகத் தானுருக்கி யெடுத்துப்பாரு
பேச்சப்பா பேசுதற்கு யிடமேயில்லை பேரான பொன்னதுவு மாற்றானாகும்
மூச்சப்பா தானொடுங்கி யண்டுநீயும் முனையான பராபரியை தியானம்பண்ணே

விளக்கவுரை :


1205. பண்ணவே நிர்வாணி நிர்த்தஞ்செய்வாள் பாங்கான வாறுதலங் காணலாகும்
எண்ணவே யுகாந்தவரைக் காணலாகும் யெளிதான கும்பகத்தை நிறுத்தவேண்டும்
திண்ணவே பதாம்புயத்தை நண்ணவேண்டும் தெளிவான ரேசகத்தை யறியவேண்டும்
கண்ணவே கால்மாடு தலைமாடெல்லாம் கருத்தினிலே யெப்போதும் நாட்டுவீரே  

விளக்கவுரை :


Powered by Blogger.