1211. தாமேதான் வழலையைத்தான்
மறைத்துவிட்டார் சதகோடிரிஷிகள்முதல் முனிவர்தாமும்
நாமேதான் வழலையுட
மார்க்கந்தன்னை நாதாக்கள் தானறிய வெளியாய் சொன்னேன்
போமேதான் வென்பேரிற்
கோபங்கொண்டு புறங்கூறி தூஷனைகள் மிகவுஞ்சொன்னார்
வேமேதான் திஷிகளுட சாபத்தாலே
வெளிப்பட்டேன் சீனபதி சென்றேன்தானே
விளக்கவுரை :
1212. தானான அயமதுதான்
பொடிதான்பத்து தாக்கான செம்பதுவும் விராகனொன்று
வேனான தாளகம்விராகனொன்று
வியர்வான பாஷாணம் விராகனொன்று
கோனான லிங்கமது விராகனொன்று
கொடிதான பூரமது விராகனொன்று
கானான வீரமது விராகனொன்று
கடிதான சீனமும்விராகனொன்றே
விளக்கவுரை :
[ads-post]
1213. ஒன்றான வெடியுப்பு
விராகனொன்று வுறுதியாந்துருசுடனே விராகனொன்று
நன்றான துத்தமது விராகனொன்று
நலமான காரமது விராகனொன்று
பன்றான கெவுரியது
விராகனொன்று பாங்கான ரசமதுதான் விராகனொன்று
தன்றான விவையெல்லாம்
வொன்றாய்ச்சேர்த்து தாக்குனே யெரியாலன் பாலாலாட்டே
விளக்கவுரை :
1214. ஆட்டியே
நாற்சாமமரைத்துத்தீரு வன்பாக குகைதனிலே சீலைசெய்து
மாட்டியே யுலையில்வைத்து
வூதித்தீரு மகத்தான களங்கமது சொல்லப்போமோ
தாட்டிகமாய் களங்கொன்று
செம்புவொன்று கருவான வெள்ளியது வொன்றதாகும்
பூட்டியே தானுருக்கி
வூதிப்போடு போக்கான வெள்ளியது கட்டிப்போச்சே
விளக்கவுரை :
1215. போச்சென்று விடுகாதே
மைந்தாகேளு பொங்கமுடன் நாலிலொன்று தங்கஞ்சேர்த்து
காய்ச்சியே தகடடித்துப்
புடத்தைப்போடு கலங்காமல் மாற்றதுவுங் காணும்பாரு
காய்ச்சியே
வுருக்குமுகந்தன்னிலேதான் சார்வான செந்தூர முப்புமாகும்
பாய்ச்சவே மாற்றதுவு
மிருவதாகும் பாடினார் போகரிஷி பாடினாரே
விளக்கவுரை :