1206. நாட்டவே எச்சிலைதான்
கொண்டபோது நாடுமே தாகவிடாய் தீருமோசொல்
மூட்டவே பச்சிலையில்
காசாரமுடிப்பதுவும் பொன்னல்லோ பொய்யுமாமே
காட்டவே திணையளவு
சூதம்விட்டால் காசினியில் வாதமென்ற யேமமில்லை
நீட்டவே போகரிஷி சொன்னநூலில்
நெடிதான பொன்கணக்கு யிந்நூலாமே
விளக்கவுரை :
1207. இந்நூலா
மேழாயிரக்காவியத்தில் யெழிலான குறுக்குடனே நெடுக்குப்பாதை
பந்நூலா
மநேகவிதக்காவியத்தில் பலப்பலவாம் பாடிவைத்தார் சித்தரானோர்
அந்நூலில் மறைத்ததொரு
கருவெல்லாந்தான் அப்பனேயாவுமிந்தக் காவியத்தில்
எந்நூலாமே ழாயிரச் சத்தகாண்ட
மெழிலாகத் தாமுரைத்ததுண்மையாமே
விளக்கவுரை :
[ads-post]
1208. உண்மையாஞ் சதகோடி
சூரியன்போல் வுத்தமனே தாமுறைப்போ முறுதியாக
தன்மையாய்
பாஷாணம்வீரந்தானும் பாங்கான ரசமுடனே காரந்தானும்
தண்மையாய்ப் பூநீறு
சுண்ணாம்போடு தாக்கியே தானரைப்பாய் உமிநீராலே
வண்மையாய் செம்பகலில்
வைத்துமூடி வாகாகப் புடம்போட வெளுக்கும்செம்பே
விளக்கவுரை :
1209. செம்பான களங்குடனே மதிசேரொக்க சேர்க்கவே வயமதுதா னெட்டதாகும்
செம்பான களங்கதுவும்
வெள்ளிசேர்ந்து செழிப்பான துய்யான்போல் சிவந்துமின்னும்
செம்பான செம்பதுதான் சிவப்புமாறி
சிறக்கவே வாளமது மாறிப்போகும்
செம்பான லோகமது
நிறமேகுன்றில் தேகமதில் வெகுவித்தையாடலாமே
விளக்கவுரை :
1210. ஆடலா முழக்கினிலே
கிழக்குமேற்கு அப்பனேநின்றநிலை விள்ளுவாறே
தேடவே பராபரத்தி னாதியந்தம்
சேர்ந்துரைப்பார் இவ்வுலகில் கூறப்போமோ
பாடலாம் போகரிஷி சொன்னநூலில்
பார்க்கவே யாதியந்தம் காணப்போமோ
நீடலாஞ் சித்தர்முதல்
கூட்டங்கூடி நேர்ப்பாக பாடிவைத்தார் பலநூலாமே
விளக்கவுரை :