போகர் சப்தகாண்டம் 3021 - 3025 of 7000 பாடல்கள்
3021. நாலான சாமமது எரித்தபோது
நலமான பில்லையது பூர்க்கும்பாரு
காலான பில்லையது காரமெத்த
கடுக்காரச் சுண்ணமென்றே செய்யலாகும்
பாலான சுண்ணமதை
மஞ்சள்தன்னில் பாச்சினால் மஞ்சளது சிவந்துபோகும்
மேலான சரக்குக்கு காலனாகும்
மேன்மையுடன் சரக்கனைத்தும் கொல்லுந்தானே
விளக்கவுரை :
3022. கொல்லுமே
பாஷாணமுப்பத்திரண்டும் கொடிதான சரக்கனைத்தும் நீற்றுப்பாரு
வெல்லுமே நவலோகம்
நீறிப்போகும் வேகமுடன் சூதமது துடித்துக்கொல்லும்
புல்லுமே காரசாரங்கள் தானும்
புகழான முப்புவால் மடிந்துபோகும்
கல்லைகளும் முப்புவால்
நீறிப்போகும் காடெல்லாந்தான் விளையும் மூலியாமே
விளக்கவுரை :
[ads-post]
3023. மூலியாம் சாறுவரா
தழைகளெல்லாம் முப்பூவி லணுவளவு பட்டாக்கால்
கேலியாம் தழைகளெல்லாம்
சலமாய்ப்போகும் கெவனமுடன் குளிகைக்கு முப்புவாகும்
வாலிபப்பெண்ருதுவாவால்
முப்புவாலே வளமுடனே காயமது கற்றூணாகும்
சாலியனாம் வண்ணானும்
காணமாட்டான் சட்டமுடன் முப்பூவின் வளமைபாரே
விளக்கவுரை :
3024. வளமுடனே முப்பூவைக் கண்டபோது
வாகுடனே யேமத்துக் குறுதியாச்சு
பளமையுடன் வயித்தியமும்
வாதயோகம் பலிக்குமடா முப்பூவின் மார்க்கத்தாலே
இளமையுடன் முப்பகலும்
முப்புவாலே எழிலுடனே நீயுமொரு சித்தனாவாய்
நளபதியும் முப்பூவையுண்டபோது
நரைதிரையு மற்றுமல்லோ ராஜனாமே
விளக்கவுரை :
3025. ராஜனாம் ராஜாதிராசனாவான் நலமான முப்பூவின்தன்மார்க்கத்தால்
போஜனுமே விவர்க்கீடு
சொல்லப்போமோ பொங்கமுடன் முப்புவின் பெருமையாலே
கோஜபீஜங்களது முப்பூவாலே
குவலயத்தில் காயகற்பம் முப்பூவாலே
பாசமுடன் சித்தர்முனி
ரிஷிகள்தாமும் பாரிலே கர்ப்பமுண்டு இருந்தார்தாமே
விளக்கவுரை :