3011. சாத்தியே மூலங்கள்
என்னும்குழல்கள்தன்னை சட்டமுடன் தானிருந்து சாற்றக்கேளு
நேர்த்தியுடன் குழல்தனையே
பூமிதன்னில் நேர்மையுடன் தானிடித்து சில்லுபோடு
பூர்த்தியுடன் மூன்றாநாள்
வெடியச்சாமம் பொங்கமுடன் தான்திறந்து பார்க்கும்போது
காத்திரமாய் கதிர்கதிராய்
பூநீர்தாமும் கதிரவன்போல் பூர்த்திருக்கக் கண்டிட்டோமே
விளக்கவுரை :
3012. கண்டிட்டோம் வாதிகளு
மொன்றாய்க்கூடி கடுவே பூநீரையெடுத்துவந்து
அண்டமென்னும் கற்சுண்ணம்
முடிப்பதற்கு அரகரா பிண்டமென்ற செயநீர்தன்னால்
விண்டபடி மேகமென்ற
யந்நீர்தானும் விருப்பமுடன் தானெடுத்து பூநீர்தன்னை
கொண்டபடி பாண்டமதில்
இட்டுமைந்தா கூறுவேன் காச்சலென்ற விபரங்கேளே
விளக்கவுரை :
[ads-post]
3013. கேளேநீ பூநீரைக்காச்சவேதான் கெனிதமுடன்
தான்கரைத்து மைந்தாகேளு
மாளவே மறுபாண்டம்
தெளிவிருத்து மார்க்கமுடன் காய்ச்சடுவாய் பூநீர்தன்னை
மாளவே தசதீட்சை இப்படியே
சேயாகும் மானிலத்தில் செய்வார்கள் இந்தமார்க்கம்
சூளவே இன்னமொரு பாகங்கேளு
சுடரொளியாம் பரிதிமுகம் செய்வார்பாரே
விளக்கவுரை :
3014. செய்வாரே தினந்தினமும்
தீட்சையப்பா செம்மையுடன் பூநீரை ரவியில்வைத்து
பெய்யவே பனிநீரை
பூநீரில்விட்டு பேரான ரவிமுகத்தில் வைத்தபோது
துய்யவே பூநீராம்
பூவேபார்க்கும் துகளற்ற வெண்மையது கதிர்போலாகும்
மெய்யடனே
இப்பாகஞ்செய்வார்மாந்தர் மேதினியில் இன்னமொரு பாகங்கேளே
விளக்கவுரை :
3015. பாகமென்றால் பாகமது
சொல்லொண்ணாது பாவையுட கருவான செயநீராகும்
போமென்ற செயநீரும்
பிண்டமாகும் பொங்கமுடன் பனிக்குடமாஞ் சலமேயாகும்
வேகமென்ற பூநிரைவிட்டு
மைந்தா விருப்பமுடன் சலமதினில் கரைத்துநீயும்
சாகமுடன் தசதீட்சை
யிப்படியேயாகும் சட்டமுடன் செய்துவந்தால் பூர்க்கும்பாரே
விளக்கவுரை :