போகர் சப்தகாண்டம் 3196 - 3200 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3196. பண்பான சாஸ்திரத்தை பாடிவைத்தேன் பாரினிலே மாண்பரெல்லாம் மறந்துபோனார்
தின்பான சீனபதி மார்க்கத்தோர்கள் திறமுடனே கண்டறிந்து எடுத்துக்கொண்டார்
நண்பான சாஸ்திரத்தை மெய்யென்றெண்ணி நயமுடன் பலன்விளையும் என்றுகந்து
கண்பான நூற்கோர்வை யாவுங்கண்டு காசினியில் மாந்தருக்கு கருதினோமே

விளக்கவுரை :


3197. கருதவே யின்னமொரு கருமானங்கேள் காசினியில் மானிடர்கள் பிழைக்கவென்று
துருதமுடன் ஜாலமென்ற வித்தைசொல்வேன் தொல்லுலகில் செப்பிடு வித்தைகண்டீர்
பருவமுடன் கன்னியென்ற பெண்ணைத்தானும் பாங்குடனே ஜோடனைகள் மிகவேசெய்து
உருவமுடன் கைச்சிலையாங் கையிலிந்து உத்தமனே வாளுமொரு கையிலீயே

விளக்கவுரை :

[ads-post]

3198. ஈயவே லோகமென்ற வாய்வினாலே எழிலான பிரதமைகளொன்றுசெய்து
மெய்யுடனே ரூபமதைத் தானமைத்து மேன்மையுடன் காந்தமென்ற சத்தைத்தானும்
கைதனிலே தானுருக்கி சேர்வைகொண்டு கசடறவே இரும்புக்கு காரமேத்தி
பெய்யவே யிடைகண்டு யினமுங்கண்டு பாரான கருக்குருவுந் தானுங்காணே 

விளக்கவுரை :


3199. காணவென்றால் பிரதமைக்கு உயிரேயில்லை காசினியில் வாவென்ற ரூபமப்பா
தோணவே ரூபமது வார்த்தையில்லை தோற்றமுடன் பார்வையிலும் ஒளியேயில்லை
மேணவே கண்ணுக்கு வினோதவித்தை வேடிக்கைப் பார்த்தவர்க்கு பகடியாகும்
ஊணவே வடகரத்தில் பதுமையேந்தி வுத்தமனே இடகரத்தில் வாளையீயே

விளக்கவுரை :


3200. வாளுடனே கேட்கமுங்கையிலேந்தி வளமையுடன் இடப்புறத்தில் மாளினாலே
தாளுடனே பூமிதனிலிருந்துகொண்டு தகமையுடன் கேட்கத்தை பதுமைமீதில்
மாளுவது போலாக வாளைவீசி வல்லஉயிரை வாங்குகின்ற வீரனைப்போல
கோளுகளு நேராமல் குமரிதன்னால் கொற்றவனே வாளுதனை சக்கரத்திலீயே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3191 - 3195 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3191. நிறுத்துகையில் அஷ்டாங்க யோகம்வேண்டும் நிலையான சமாதிதன்னிலிருக்க வேண்டும்
பொருந்துமே சிவயோகந்தன்னிற்சென்று போக்கான வாசியைத்தான் நிறுத்தவேண்டும்
கலுத்துமே வாத்துமத்தின் நிலையைக்காண கலியுகத்தில் வெகுகால மிருந்தார்தாமும்
மறுப்புடனே பிறவியது காணாமற்றான் மாநிலத்தில் மடிந்தவர்கள் கோடியாமே

விளக்கவுரை :


3192. கோடியாஞ் சித்தர்களும் முனிவர்தாமும் குவலயத்தே கற்பமுண்டு இருந்தார்தாமும்
பேடியாம் சிலமாந்தர் அவரைப்பார்த்து பேரின்ப நிலைதனையே யொழித்தார்போலும்
நாடியஏ யவர்களிடம் சென்றுமேதான் நயனமுடன் லகுவார்த்தை மிகவும்பேசி
வாடியே யவர்பதத்தில் கிட்டிநின்று வாகுடனே கற்பமதை முறைகேட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

3193. முறையுடனே கற்பமதை வாங்கிக்கொண்டு மூதுலகில் வெகுபேர்கள் செய்யவெண்ணி
கறைகண்ட வயித்தியன்போல் மனதிலெண்ணி காசினியில் முறைகெட்டு தாறுமாறாய்
திரைமருவு தெரியாமல் தேர்ந்தோன்போல திறமையுடன் அனுபோகந் தெரியாமற்றான்
குறையனதாய் சூரணத்தை செய்துமேதான் குவலயத்தில் கெட்டவர்கள் கோடியாமே

விளக்கவுரை :


3194. கெட்டலைந்து போனவர்கள் கோடாகோடி கெவனமுடன் செய்யாதார் கோடாகோடி
சுட்டலைந்து போனவர்கள் கோடாகோடி சூட்சமுடன் வயித்தியத்தை காணார்கோடி
பட்டலைந்து கெட்டவர்கள் பாடுபட்டு பதமிழந்து போனவர்கள் கோடாகோடி
திட்டமுடன் சாத்திரத்தை பாராமற்றான் திடங்குலைந்து நலிந்துபோனார்தாமே 

விளக்கவுரை :


3195. போனாரே மூதுலகில் பெரியோர்யாவும் பொலிவான சாத்திரத்தை பொய்யென்றெண்ணி
ஏனோதான் மாநிலத்தில் சுட்டுக்கெட்டு யேளிதங்களாகவல்லோ மாண்டுபோனார்
நானேதான் கண்டமட்டுஞ் சாத்திரத்தை நன்குடனே யாராய்ந்து பலநூல்கண்டு
பானுமதி சுடர்போலே திரட்டியல்லோ பாடிவைத்தேன் சத்தகாண்டம் பண்பாய்த்தானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3186 - 3190 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3186. தூக்கையிலே தூக்கமது வதிகங்காணா தொல்லுலகில் மூலிவகைசமனதாக
ஏக்கமுடன் மூலவகை ரெட்டிப்பாக எழிலான சூரணமாய் செய்துகொள்ள
நோக்கமுடன் ரவிதனிலே காயப்போடு நுணுக்கமுடன் கல்லுரலில் மாவதாக்கி
பாக்கவேதான் சூரணத்தை சுத்திசெய்து பசும்பாலில் புட்டாவி செய்திடாயே

விளக்கவுரை :


3187. செய்யவென்றால் கைபாகம் செய்பாகங்கேளு செப்புகிறேன் தளவாயாஞ் சட்டிதன்னில்
பையவே யாவியின்பால் பாண்டுமிட்ள பாகமுடன் சூரணத்தை சீலைமேலே 
மொய்யவே புட்போல பிசறிவைத்து முசியாமல் மேல்சட்டிகொண்டுமூட
வெய்யவே தானெரிப்பாய் கண்டமட்டும் என்மகனே தானெரிப்பாய் புகலக்கேளே

விளக்கவுரை :

[ads-post]

3188. கேளேதான் ரவிதனிலே காயப்போடு கெணிதமுடன் இப்பாகம்பத்துப்போடு
கோளேதான் வாராமல் சூரணத்தை கொப்பஎனவே தானெடுத்து செப்பக்கேளு
பாளேதான் நேராமல் சீனிசேர்த்து பதமுடனே மண்டலந்தான் கொண்டாயானால்
நாளேதான் தேகமது கற்றூணாகும் நளினமுடன் போகரிஷி நவின்றவாரே

விளக்கவுரை :


3189. வாறான கற்பமென்ற சூரணத்தை வாகுடனே கொள்பனுஞ் சித்தனாவார்
நேறான சீனபதி மாந்தருக்கு நேர்மையுடன் தானுரைத்த கற்பமாகும்
சீறான கற்பமது வுண்டபேர்க்கு தேசத்தில் வயதல்லோ லக்கோயில்லை
காரான கடந்தமுனி சித்தனென்பார் காயாதிகற்பத்தின் பான்மைதானே

விளக்கவுரை :


3190. தானான கற்பமது வுண்ணும்போது சதாகாலம் நிஷ்டையிலே இருக்கலாகும் 
வேனான கற்பத்திற் குறுதிசொல்வேன் வெளியங்க மாகவல்லோ திரியவேண்டாம்
பானுமதி சூரியனும் பார்க்கவொண்ணா பாலகனே யொடுக்கமதில் இருக்கவேண்டும்
தேனான புளிபுகையுந் தள்ளவேண்டும் தேசமதில் காயத்தை நிறுத்துவாயே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3181 - 3185 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3181. வேறான வெட்டிவேர் துத்திமூலம் வெளியான வாவாரை பஞ்சமூலம்
கூறானதாது மாதுளையின்வேறும் குணமான செங்கொட்டை சிவனார்வேம்பு
நாறான செங்காலி வேறினோடு நறுங்கந்தம் பீனாறி பட்டைதானும்
பாறான பூதமாம் விருட்சத்தோடு பாங்கான கருங்குன்றி வேறுமாமே

விளக்கவுரை :


3182. ஆமேபிரன் கருங்காலி பட்டைதானும் அப்பனே செனாமறைவேறினோடு
தாமேதான் வெம்பாடை பட்டைதானும் தாக்கான கொழிஞ்சியிட பட்டைமூலம்
வேமேதான் வராலியிட மூலந்தானும் விரையான பேய்மிரட்டி பட்டைமூலம்
நாமேதான் சொன்னபடி வகிற்கட்டைதானும் நலமான சந்தனமும் செஞ்சாந்துமாமே

விளக்கவுரை :

[ads-post]

3183. சந்தான பூவந்திபட்டைதானும் சதுரான வெண்ணாவல் பட்டையோடு
காந்தமெனும் வேய்கையுட பட்டைதானும் கருவான வுதிரமாம் மூலத்தோடு
பாந்தலெனும் கொங்கலவன் மூலத்தோடு பளிங்கான விராலியிட மூலந்தானும்
வேந்தர்கைக் கோலூன்றி விருட்சமூலம் விரைவான பட்சையுட மூலந்தானே

விளக்கவுரை :


3184. மூலமொடு கரும்பசளை செம்பசளைதானும் முஷ்டியுடன் கருவாகை பெருவாகைதானும்
சீலமுடன் பற்பாடம் யிம்புராவும் சிறியாளின் நங்கையொடு பெரியாநங்கை
காலமெனும் புளியாரை சிறியாரைதானும் தகமையுள்ள நிலவேம்பு கருவேம்புதானும்
பாலமெனும் பொடுதலையாம் சீந்திலோடு பசுமையாப் பொற்சீந்தியாமே

விளக்கவுரை :


3185. சீந்திலொடு செவ்வாழை கருவாழையானும் சிறப்பான வுப்பதுவும் தானுமாகும்
சாந்திமலர் நந்தியாவட்டமூலம் சார்புடனே கொன்றைவேர் புன்னைவேறும்
தாந்திகழும் செங்கழுநீர் பூண்டுதானும் தகமையுள்ள வட்டாரி துத்திமூலம்
ஏந்தலெனும் மயிர்கொன்றை இருவாட்சிதானும் என்மகனே வகைக்குவொரு பலமாய்த்தூக்கே

விளக்கவுரை :


Powered by Blogger.