போகர் சப்தகாண்டம் 3216 - 3220 of 7000 பாடல்கள்
3216. வகையான காரமது பலம்பத்தாகும்
வளமுடனே செவ்வல்லிப் பூச்சாற்றாலே
தொகையுடனே பத்துநாளறைத்தபோது
துறையோடு வெண்எஅர மெழுகுமாகும்
பகையான எரிகாலன் பாலினாலே
பாகமுடன் தானரைக்க விவரங்கேளு
சிகையுடனே வரைப்பொடியு
மொன்றேயாகும் சீரான காரமது நேர்தான்சேரே
விளக்கவுரை :
3217. சேர்த்துமே எரிகாலன்பாலினாலே சிறப்புடனே தானரைப்பாய் நாலுசாமம்
பார்த்துமே
வஜ்ஜிரமாங்குகையில்தானும் பாங்குடனே பாங்குடனே தானெடுத்து சீலைசெய்து
பூர்த்தியுடன் ரவிதனிலே
காயவைத்து புகழாக சரவுலையில் வைத்துவூது
தீர்த்துமே அயமதுவும்
வுருகியல்லோ திறமான சத்ததுவும் ஆகுந்தானே
விளக்கவுரை :
[ads-post]
3218. தானான சத்துக்கு இன்னங்கேளு
தகமையுடன் வெங்காரம் கூடச்சேர்த்து
பானான முன்சொன்ன தந்தைதானும்
பாகமுடன் தானரைப்பாய் எரிகாலன்தான்
தேனான தேனதுவும்
கூடச்சேர்த்து தெளிவாக முன்போல வரைப்பாயப்பா
கோனான எனதையர் காலாங்கிநாதர்
குருசொன்ன சொற்படியே செய்திடாயே
விளக்கவுரை :
3219. செய்யவே வஜ்ஜிரமாங்
குகையில்வைத்து செம்மையுடன் ஓட்டைவைத்து சீலைசெய்து
பையவே ரவிதனிலே காயவைத்து
பான்மையுடன் சரவுலையில் வைத்துவூது
துய்யவே வயமதுவுங்
களங்குமாகும் துப்புரவாய் மூசைதனை யுடைத்துப்பாரு
பொய்யல்லா வயமதுவும்
மணிபோல்நிற்கும் பொலிவான சத்தென்ற மணியைவாங்கே
விளக்கவுரை :
3220. வாங்கியே மணியெடுத்து
யலையவேண்டாம் வளமுடனே மணிதனையே வுடைத்துப்பாரு
தூங்கியே திரியாதே
மாண்பாகேளு துய்யநல்ல வயமதுவும் சத்தேயாச்சு
ஓங்கியே மணிதனையே பதனம்பண்ணு
உத்தமனே யின்னமொரு மார்க்கம்பாரு
ஏங்கியே நிற்காதே
யின்னஞ்சொல்வேன் எழிலான வப்ரேக சத்தைவாங்கே
விளக்கவுரை :