3206. கீழான பதிதனிலே பிரதமையும்
நிற்க கீர்த்தியுடன் கேடகமுந் தழுவிவிளையாட
தாழான பூமிதனில்
கேடகமும்நின்று சட்டமுடன் பிரதமையும் யெகிரிகுத்த
சாழான கோட்டைக்குள்
சண்டைஅதிவேகம் சாங்கமுடன் பத்மயுகம் சரிமுறிதலாக
நீழான ஜெகஜால வித்தையிதுதானும்
நீணிலத்தில் அதிதமெனும் பதுமைவித்தைதானே
விளக்கவுரை :
3207. பதுமையாங் கோட்டைக்குள்
காவலதிகாரி பாங்குடனே எதிர்நின்று பேசும்படைதன்னை
புதுமையுடன் பிரதமைதான்
எழுந்து புகழ்ச்சியுடன் கேடகத்தின் கீழிருந்து
கதுமையுடன் கேடகத்தை
தலைமேல்கொண்டு களிவுடனே சதாகாலம் நடிக்கச்செய்யும்
மதுரமுடன் யெட்சிணியால்
பேசசெய்யும் மகாகோடி வினோதங்கள் இன்னங்கேளே
விளக்கவுரை :
[ads-post]
3208. கேட்கையிலே கன்னிகையாள்
பிரம்பெடுத்து கிருபையுடன் வசனிக்கும் போதுமங்கே
நீட்கமுடன் பிரதமையும் வாய்திறந்து
நிட்சயமாய் முன்னின்று பேசும்பாரு
வாட்கையுடன் கேடகத்தின்
உத்தம்கண்டு வளமையுடன் கைகொடுத்து வார்த்தைகூறும்
வேட்கமுடன் குறளியின்றன்
வசியத்தாலே வேடிக்கை வினோதவித்தை பேசும்பாரே
விளக்கவுரை :
3209. பேசுகையில் மாந்தரெல்லாம் பிரமைகொண்டு பேருலகில் செப்பிடைகை வித்தைபோல
வீசுதமிழ்க் கலிவாணர்
முனிவர்தாமும் விண்ணுலகில் இம்முறைபோல் சொன்னதில்லை
காசுபணஞ் செலவழித்தோர்
கோடியுண்டு காசினியில் என்முறைபோல் செய்ததில்லை
மாசுமறை யில்லாமல்
போகர்தாமும் வசனித்தோம் மானிடர்கள் பிழைக்கவென்றே
விளக்கவுரை :
3210. பிழைக்கவென்றால் இன்னமொரு
கருமானங்கேள் பேரான சீனபதி மாந்தருக்கு
தழைக்கவே காயாதி
கற்பஞ்சொன்னேன் தாரிணியில் திரேதாயினுகத்திலப்பா
முழக்கமுடன்
காலாங்கிநாதர்தாமும் முனிவருக்கு தானுறைத்த காயகற்பம்
வழக்கமது பிசகாமல் யானுமல்லோ
வசனித்தேன் கலியுகமாய் மதலிற்றானே
விளக்கவுரை :