போகர் சப்தகாண்டம் 3216 - 3220 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3216. வகையான காரமது பலம்பத்தாகும் வளமுடனே செவ்வல்லிப் பூச்சாற்றாலே
தொகையுடனே பத்துநாளறைத்தபோது துறையோடு வெண்எஅர மெழுகுமாகும்
பகையான எரிகாலன் பாலினாலே பாகமுடன் தானரைக்க விவரங்கேளு
சிகையுடனே வரைப்பொடியு மொன்றேயாகும் சீரான காரமது நேர்தான்சேரே

விளக்கவுரை :


3217. சேர்த்துமே எரிகாலன்பாலினாலே சிறப்புடனே தானரைப்பாய் நாலுசாமம்
பார்த்துமே வஜ்ஜிரமாங்குகையில்தானும் பாங்குடனே பாங்குடனே தானெடுத்து சீலைசெய்து
பூர்த்தியுடன் ரவிதனிலே காயவைத்து புகழாக சரவுலையில் வைத்துவூது
தீர்த்துமே அயமதுவும் வுருகியல்லோ திறமான சத்ததுவும் ஆகுந்தானே

விளக்கவுரை :

[ads-post]

3218. தானான சத்துக்கு இன்னங்கேளு தகமையுடன் வெங்காரம் கூடச்சேர்த்து
பானான முன்சொன்ன தந்தைதானும் பாகமுடன் தானரைப்பாய் எரிகாலன்தான்
தேனான தேனதுவும் கூடச்சேர்த்து தெளிவாக முன்போல வரைப்பாயப்பா
கோனான எனதையர் காலாங்கிநாதர் குருசொன்ன சொற்படியே செய்திடாயே

விளக்கவுரை :


3219. செய்யவே வஜ்ஜிரமாங் குகையில்வைத்து செம்மையுடன் ஓட்டைவைத்து சீலைசெய்து
பையவே ரவிதனிலே காயவைத்து பான்மையுடன் சரவுலையில் வைத்துவூது 
துய்யவே வயமதுவுங் களங்குமாகும் துப்புரவாய் மூசைதனை யுடைத்துப்பாரு
பொய்யல்லா வயமதுவும் மணிபோல்நிற்கும் பொலிவான சத்தென்ற மணியைவாங்கே

விளக்கவுரை :


3220. வாங்கியே மணியெடுத்து யலையவேண்டாம் வளமுடனே மணிதனையே வுடைத்துப்பாரு
தூங்கியே திரியாதே மாண்பாகேளு துய்யநல்ல வயமதுவும் சத்தேயாச்சு
ஓங்கியே மணிதனையே பதனம்பண்ணு உத்தமனே யின்னமொரு மார்க்கம்பாரு
ஏங்கியே நிற்காதே யின்னஞ்சொல்வேன் எழிலான வப்ரேக சத்தைவாங்கே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3211 - 3215 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3211. தானான கலியுகத்தில் அடியேன்தானும் தகமையுடன் குளிகையது பூண்டுகொண்டு
கோனான எனதையர் காலாங்கிதம்மை குருபதத்தை எந்நாளு மனதிலெண்ணி
தேனான சீனபதிமார்க்கஞ்சென்று தஎளிவுடனே யாமுரைத்தேன் முறைமையோடு
வேனான வெளியரங்க மாகவல்லோ விருப்பமுடன் பாடிவைத்தேன் போகர்தாமே

விளக்கவுரை :


3212. தாமான சீனபதி மார்க்கத்தோர்கள் தாரிணியில் இவ்வேதை யதிகமென்று
பூமானாம் யோகிகளும் ரிஷிகள்தாமும் பொங்கமுடன் செய்வதற்கு மனதிலுன்னி
காமானமாகவேதான் சத்துருவைக்கண்டு கவனமுடன் மித்துருவை ஒன்றாய்ச்சேர்த்து
நாமேதான் சொன்னபடி சோதித்தல்லோ நலமுடனே சீனத்தார் கண்டார்காணே

விளக்கவுரை :

[ads-post]

3213. காணவென்றால் வெகுகோடி காலந்தானும் கருவான நூலெல்லாம் வுளவுபார்த்து
தோணவே சரக்கெல்லாம் கண்டாராய்ந்து தோற்றமுடன் சோதித்தார் மித்துருதன்னால்
நாணவே குகைதோறும் சோதித்தல்லோ நலமுடனே சத்துருக்கள் மிகவாராய்ந்து
பூணவே யோரளமாய் சத்தையெல்லாம் புகழுடனே தானெடுக்கும் விபரங்கேளே

விளக்கவுரை :


3214. கேளேதான் அயத்தினுட சத்துசொல்வேன் கெவனமுடன் அயமதுதான் சேர்தானொன்று
பாளேதான் போகாமல் லோகந்தன்னை பக்குவமாய் பொடியாக எடுத்துக்கொண்டு
கோளேதான் நேராமல் நிம்பழத்தால் கொற்றவனே நாற்சாமமரைத்தபோது
வீனேதான் களிம்பற்று வெளுக்கும்பாரு விருப்பமுடன் அமுறியினால் கழுவிப்போடே

விளக்கவுரை :


3215. போடேதான் அயப்பொடிக்குத் திரட்டிமைந்தா பொங்கமுடன் சாரமது காரமாகும்
நீடேதான் சீனமது கல்லுப்பாகும் நெடிதாம் சம்பழத்தின் சாற்றினாலே
கூடேதான் தானரைப்பாய் ரெண்டுசாமம் குமரவே ஜலமதினாற் கழுவிப்போடு
பாடவே அயமதுவும் சுத்தியாச்சு பாலகனே சத்தெடுக்க வகையைத்தேடே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3206 - 3210 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3206. கீழான பதிதனிலே பிரதமையும் நிற்க கீர்த்தியுடன் கேடகமுந் தழுவிவிளையாட
தாழான பூமிதனில் கேடகமும்நின்று சட்டமுடன் பிரதமையும் யெகிரிகுத்த 
சாழான கோட்டைக்குள் சண்டைஅதிவேகம் சாங்கமுடன் பத்மயுகம் சரிமுறிதலாக
நீழான ஜெகஜால வித்தையிதுதானும் நீணிலத்தில் அதிதமெனும் பதுமைவித்தைதானே

விளக்கவுரை :


3207. பதுமையாங் கோட்டைக்குள் காவலதிகாரி பாங்குடனே எதிர்நின்று பேசும்படைதன்னை
புதுமையுடன் பிரதமைதான் எழுந்து புகழ்ச்சியுடன் கேடகத்தின் கீழிருந்து  
கதுமையுடன் கேடகத்தை தலைமேல்கொண்டு களிவுடனே சதாகாலம் நடிக்கச்செய்யும்
மதுரமுடன் யெட்சிணியால் பேசசெய்யும் மகாகோடி வினோதங்கள் இன்னங்கேளே

விளக்கவுரை :

[ads-post]

3208. கேட்கையிலே கன்னிகையாள் பிரம்பெடுத்து கிருபையுடன் வசனிக்கும் போதுமங்கே
நீட்கமுடன் பிரதமையும் வாய்திறந்து நிட்சயமாய் முன்னின்று பேசும்பாரு
வாட்கையுடன் கேடகத்தின் உத்தம்கண்டு வளமையுடன் கைகொடுத்து வார்த்தைகூறும்
வேட்கமுடன் குறளியின்றன் வசியத்தாலே வேடிக்கை வினோதவித்தை பேசும்பாரே

விளக்கவுரை :


3209. பேசுகையில் மாந்தரெல்லாம் பிரமைகொண்டு பேருலகில் செப்பிடைகை வித்தைபோல
வீசுதமிழ்க் கலிவாணர் முனிவர்தாமும் விண்ணுலகில் இம்முறைபோல் சொன்னதில்லை
காசுபணஞ் செலவழித்தோர் கோடியுண்டு காசினியில் என்முறைபோல் செய்ததில்லை
மாசுமறை யில்லாமல் போகர்தாமும் வசனித்தோம் மானிடர்கள் பிழைக்கவென்றே  

விளக்கவுரை :


3210. பிழைக்கவென்றால் இன்னமொரு கருமானங்கேள் பேரான சீனபதி மாந்தருக்கு
தழைக்கவே காயாதி கற்பஞ்சொன்னேன் தாரிணியில் திரேதாயினுகத்திலப்பா
முழக்கமுடன் காலாங்கிநாதர்தாமும் முனிவருக்கு தானுறைத்த காயகற்பம்
வழக்கமது பிசகாமல் யானுமல்லோ வசனித்தேன் கலியுகமாய் மதலிற்றானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3201 - 3205 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3201. சக்கரமாம் வாளுதனை கேடகத்திலேந்தி சட்டமுடட் முன்பின்னாய் பிரட்டியேதான்
மிக்கவுடல் கீழ்விழலே வாளும்மேலே மேலான வாளுமது பதுமைகீழே
தொக்கவுடல் பதுமையது மேலேயாகும் தொல்லஉலகில் வாளுமது கீழேயாகும்
தக்கபடி செப்பிடுமாம் ஜாலந்தன்னில் சட்டமுடன் பதுமையது தோரொண்ணாதே

விளக்கவுரை :


3202. தோர்க்காது பதுமையது வாளினாலே தொல்லுலகில் பதுமையது மேலேநோக்கும்
பார்க்கவே லோகத்து மாந்தருக்கு பாங்கான செப்பிடு ஜெகஜாலந்தான்
ஏர்க்கவே வதிசயத்தை மிகவேகாட்டும் எழிலாக பிடிப்பார் மாந்தர்கண்டீர்
மார்க்கமுடன் மாந்திரீகம் மென்பார்காணீர் என்மகனே ஜாலமென்ற வித்தைதானே

விளக்கவுரை :

[ads-post]

3203. வித்தான வித்தையிது ஜாலவித்தை மேதினியில் ஜெகஜால வித்தையப்பா
சித்தான சித்தர்முனி ரிஷிகள்தாமும் சிறப்புடனே பூவுலகில் ஆடும்வித்தை
சத்தான கோத்தையிது யின்னஞ்சொல்வேன் சுரூபமென்ற காந்தமது கோட்டையப்பா
குத்தான கல்லதுதான் நடுமையத்தில் கொற்றவனே சங்கிகள் அணியாய்மாட்டே

விளக்கவுரை :


3204. மாட்டையிலே நடுக்கம்பம் மீதிருந்து நடுவான குத்துக்கால் மீதிறங்கி
கோட்டையது வாசலது காந்தக்கோட்டை கொப்பெனவே நடுவாசல் வந்துநின்று
நீட்டமுடன் கன்னிகையில் வாள்கொடுத்து நீளமுடன் நெடுக்குவரை சுத்திவந்து
மூட்டமுடன் கேடகத்தை கோட்டைமீதில் முனைநடுவாம் மத்திபத்தில் முன்னேவையே

விளக்கவுரை :


3205. வைத்துமே தலைகீழாய் சுத்திவந்து வளமுடனே குத்துக்கல் மீதிருந்து
குத்துடனே பிரதமையை கேடகத்தால் குறிப்புடனே நேர்பார்த்து பாரின்மிது
ஏத்தலுடன் கேடகத்தை கையிலேந்தி எழிலான பிரதமையை மேலேவைத்து
சுத்திய கோட்டைவழி தான்கடந்து சூட்சமுடன் பிரதமையை கீழேவையே

விளக்கவுரை :


Powered by Blogger.