போகர் சப்தகாண்டம் 3366 - 3370 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3366. மீளுவது யின்னமொரு கருமானங்கேள் மிக்கான வெள்வங்க பற்பஞ்சொல்வேன்
தாளுமையாய் வெள்வங்கஞ் சேர்தானொன்று தகமையுடன் சவுட்டுப்பு சேர்தான்பாதி
கோளகற்றி தகடடித்து மேலேபூசி கொற்றவனே யாவாரை பஞ்சாங்கத்தில்
மாளுறையாய் வெள்வங்கம் நீற்றுதற்கு மானிலத்தில் பஞ்சாங்கப் புடத்தைப்போடே

விளக்கவுரை :


3367. போடவே வெள்வங்கம் பொருமிநிற்கும் பொலிவான சோனமது போலேயாகும்
நீடவே சோனமென்ற பொறியெடுத்து நீட்சியுடன் கல்வமதிலிட்டு மைந்தா
கூடவே யாறுவகை செயநீர்தன்னால் கொற்றவனே தானரைப்பாய் சாமம்நாலு
சாடவே மைபோல வெண்ணையாக்கி சட்டமுடன் தானரைத்து பில்லைதட்டே

விளக்கவுரை :

[ads-post]

3368. தட்டியே ரவிதனிலே காயவைத்து சதுராக வோட்டிலிட்டுச் சீலைசெய்து
திட்டமுடன் குழிவெட்டிப் புடத்தைப்போடு திரமான புமதுதான் கெஜமேயாகும்
மட்டமென்ற புடமதுவும் ஒன்றேயாகும் மறவாமல் மூன்றாநாள் பொறுத்தபின்பு
சட்டமுடன் தானெடுத்துப் பார்க்கும்போது தவளநிறம் போலாக யிருக்கும்பாரே

விளக்கவுரை :


3369. பாரேதான் பற்பமதை தனையெடுத்து பாகமுடன் கல்மதிலிட்டுப் பின்பு
நேரேதான் கிளிமூக்கு கிழங்குதன்னை நேர்புடனே சார்பிழிந்து சொல்லக்கேளு
சீறேதான் வெள்வங்க பற்பந்தன்னை சிறப்புடனே தானரைப்பாய் நாலுசாமம்
கூரேதான் வெண்ணையது போலேமைந்தா குறிப்பாக தானரைத்து பில்லைதட்டே

விளக்கவுரை :


3370. பில்லையென்றால் பில்லையது காசதாக பொறுமையுடன் தட்டியல்லோ ரவியில்போடு
கல்லுபோல் தானுலர்த்தி எடுத்துக்கொண்டு கருவாக வோட்டிலிட்டுச் சீலைசெய்து
அல்லன்றி கெஜபுடத்தில் போட்டாயானால் அப்பனே பற்பமது தவளம்போலாம்
வெல்லவே பற்பமதை எடுத்துக்கொண்டு விருப்பமுடன் கிழங்குசார் தன்னாலாட்டே

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம் 3361 - 3365 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3361. ஆச்சென்று விடுகாதே யின்னங்கேளு அருமையுள்ள பாலகனே பின்னுஞ்சொல்வேன்
மாச்சலென்ற கற்பமதை வனுபானத்தில் மார்க்கமுடன் பணவிடைதான் கொண்டபோது
மேச்சலென்ற மேகமது இருபத்தொன்று மேதினியில் கண்காணாதோடும்பாரு
வீச்சலென்ற வீரவீச்சு சன்னிபோகும் வீரமுடன் தாதுவிர்த்தி யதிகமாமே

விளக்கவுரை :


3362. அதிகமாங் குன்மமென்ற தெட்டும்போகும் ஆண்மையுடன் குறிநோய்கள் அணைத்தும் போகும்
சதிரான குஷ்டமது பதினெட்டும்போம் சட்டமுடன் நீரிழிவு மாறும்போகும்
மதிமேகமென்றதொரு ரோகம்போகும் மாசற்ற தேகமது வன்னிமீறும்
துதியுடனே தாரணியில் சதாகாலந்தான் துப்புரவாய் யோகநிலை சமாதிதேடே

விளக்கவுரை :

[ads-post]

3363. தேடையிலே சமாதிநிலை தன்னைக்கண்டு தெளிவாக கேள்விகளில் னேமங்கேட்டு
கூடயிலே சிவயோக நிலையில்நின்று குணமான வழிபாடு தனையெடுத்து
மாடையிலே சினமென்ற கோபந்தள்ள மதிப்புடனே தாரிணியிலிருந்துகொண்டு
நீடையிலே கரிவங்க பற்பந்தன்னை நீனிலத்திலுண்பவனே சித்தனாமே

விளக்கவுரை :


3364. சித்தனாய் பிறந்தாலும் மதிகள்வேண்டும் சீறலென்ற சினமதுவைத் தள்ளவேண்டும்
பத்தியுடன் பதாம்புயத்தை எந்தநாளும் பட்சமுடன் மனந்தனிலே நினைக்கவேண்டும்
நித்தியமும் பரவெளியில் நிற்கவேண்டும் நீடாழி யுலகாசை யொழிக்கவேண்டும்
முத்தியுடன் அஷ்டமா சித்திதன்னை மூவுலகில் பெறுபவனே யோகியாமே

விளக்கவுரை :


3365. யோகமென்றால் போகமதைத் தள்ளவேண்டும் யொருவருடன் வீண்வார்த்தைக் கூறலாகா
போகமதை நீக்கிவிட்டு பூமிதன்னில் புகழாக வாசியோகந் தன்னிற்சென்று
தாகமுடன் கானப்பால் தன்னைக்கொண்டு சதாகாலம் நிஷ்டையிலே யனுமானித்து
வேகமுடன் விட்டகுறை வந்தபோது வெறுப்பன்றி பொறுப்பலுடன் மீள்வீர்தாமே

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம் 3356 - 3360 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3356. விளையுமே சகலவித ரூபாபேதம் வேகமுடன் தோன்றுவது வுண்மைபாரு  
களையுடனே சூதத்தால் யெல்லாந்தோற்றும் காமரூப வடிவமெல்லாம் இதிலேதோன்றும்
தளைவுடனே தாளகத்தின் புகையினாலே தகமையுள்ள கெந்தியது காரத்தாலும்
சுளையுடனே பூத்ததுபோல் புகையெழும்பி சொர்ணமென்னு வேகமென்ற வர்ணமாமே
விளக்கவுரை :


3357. வர்ணமாயின்னமொரு போக்குசொல்வேன் வாகான கருவங்க பற்பங்கேளு
கர்ணமாங் கருவங்கஞ் சேர்தானொன்று தகமையுடன் தகடடித்து செப்பக்கேளு
மூரணமாங் கருங்காலி கிழங்குதன்னை முதன்மையுடன் தானரைத்து மூசைசெய்து
திரணமாங் குகைக்குள்ளே தகடைவைத்து தீர்க்கமுடன் முன்சொன்ன முப்புபோடே

விளக்கவுரை :

[ads-post]

3358. போட்டுமே சில்லிட்டுச் சீலைசெய்து பொங்கமுடன் ரவிதனிலே காயவைத்து
காட்டென்ற எருவுதனை எஜமதாக்கி கருவாகக் குழிவெட்டிப் புடத்தைப்போடு
மூட்டென்ற புடமாறி மூன்றாநாள்தான் முக்கியமாய் நிருவாணி பூசைசெய்து
தாட்டிகமாய் புடந்தனையே திறந்துபாரு தளுக்கற்ற கருவங்க பற்பமாமே

விளக்கவுரை :


3359. ஆமேதான் பற்பமதை எடுத்துக்கொண்டு அப்பனே சிற்றண்டம் சவ்வுபோக்கி
தாமேதான் பற்பமெடை சரியாய்தூக்கி தகைமையுள்ள சிற்றண்டங் கூடச்சேர்த்து
போமேதான் வெண்கருவால் மிகவேயாட்டி பொங்கமுடன் தானரைப்பாய் நாலுசாமம்
நாமேதான் சொன்னபடி பில்லைதட்டி நலமாக ரவிதனிலே காயவையே

விளக்கவுரை :


3360. வைத்ததொரு பில்லைதனை யோட்டிலிட்டுச் வண்மையுடன் சீலையது வலுவாய்ச்செய்து
நைத்ததொரு குழிதனிலே புடமே போடு நலமான கெஜபுடத்தில் வெந்துநீறும்
தைத்ததொரு புடமாறி யெடுத்துப்பாரு தளர்ச்சியுள்ள பற்பமது சொல்லப்போமோ
மெத்திடவே பற்பமதை பதனம்பண்ணு மேதினியில் சித்தர்செய்யும் வேதையாச்சே  

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம் 3351 - 3355 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3351. திண்ணமா மின்னமொரு கருமானங்கேள் திகழான வர்ணமென்ற போக்குசொல்வோம்
வண்ணமுடன் பஞ்சவர்ண விதங்கள் சொல்வோம் வகுப்புடனே யதிற்பிறந்த வர்ணம் நான்காம்
நண்ணமுடன் வாயுவென்ற இரும்புதன்னில் நலமான வர்ணமது ரூபபேதம்
கண்ணபிரான் வர்ணமது போலேயாகும் காசினியில் சித்தர்செய்யும் வேதையாச்சே

விளக்கவுரை :


3352. வேதையிலே இன்னமொரு போக்கைக்கேளும் வீறான சிறியகண்ணாகந்தானு
தீதையிலே தானுருக்கி மதியுப்போடு திகழான களங்குபோல் உருகும்பாரு
போகமுடன் சூதமதைக் கூடச்சேர்த்து பொங்கமுடன் தானரைப்பாய் நாலுசாமம்
நாகமுடன் சாரமென்ற செயநீர்தன்னால் நளினமுடன் தானரைத்து செப்பக்கேளே

விளக்கவுரை :

[ads-post]

3353. செப்பவென்றால் வளையலுப்பு கூடச்சேர்த்து சிறப்புடனே நிம்பழச்சார் தானும்விட்டு
ஒப்பமுடன் வெந்நீரில் கலக்கிக்கொண்டு ஓங்குபெற செம்பென்ற கட்டைதானும்
நெப்பமுடன் தகடடித்து சலத்திற்போடே நேரான வர்ணமது மேலேதாவி துப்புரவாய்
ஒளிவீசுந் தகட்டின்மேலே சூரியன்போல் தங்கமென்ற வர்ணமாமே

விளக்கவுரை :


3354. ஆமேதான் வர்ணமொடு சிவப்புபச்சை அப்பனே நீலமென்ற கருப்புதானும்
தாமேதான் ரசமதனைக் கூடச்சேர்த்து தன்மையுடன் சீசாவிலடைத்து மைந்தா
வேமேதான் தகடதனைத் தோய்க்கும்போது விதமான சஞ்சாயவர்ணங்காணும்
நாமேதான் சொன்னபடி ரூபவர்ணம் நயமுடனே தகடதனில் ஏறும்பாரே

விளக்கவுரை :


3355. பாரேதான் இரும்புக்கு இந்தமார்க்கம் பாகமுடன் செய்துவந்தால் பண்பதாகும்
நேரேதான் வங்கமது தகடடித்து நேரான முன்சொன்ன சரக்கிலேதான்
வாரேதான் வங்கமதை யுருக்கியேதான் வளமுடனே காய்ச்சியல்லோ தோய்ச்சிப்பாரு
கூரேதான் துரிசியிட காரத்தாலே கொற்றவனே பலபேதம் விளையுந்தானே

விளக்கவுரை :


Powered by Blogger.