3361. ஆச்சென்று விடுகாதே
யின்னங்கேளு அருமையுள்ள பாலகனே பின்னுஞ்சொல்வேன்
மாச்சலென்ற கற்பமதை
வனுபானத்தில் மார்க்கமுடன் பணவிடைதான் கொண்டபோது
மேச்சலென்ற மேகமது
இருபத்தொன்று மேதினியில் கண்காணாதோடும்பாரு
வீச்சலென்ற வீரவீச்சு
சன்னிபோகும் வீரமுடன் தாதுவிர்த்தி யதிகமாமே
விளக்கவுரை :
3362. அதிகமாங் குன்மமென்ற
தெட்டும்போகும் ஆண்மையுடன் குறிநோய்கள் அணைத்தும் போகும்
சதிரான குஷ்டமது
பதினெட்டும்போம் சட்டமுடன் நீரிழிவு மாறும்போகும்
மதிமேகமென்றதொரு ரோகம்போகும்
மாசற்ற தேகமது வன்னிமீறும்
துதியுடனே தாரணியில்
சதாகாலந்தான் துப்புரவாய் யோகநிலை சமாதிதேடே
விளக்கவுரை :
[ads-post]
3363. தேடையிலே சமாதிநிலை
தன்னைக்கண்டு தெளிவாக கேள்விகளில் னேமங்கேட்டு
கூடயிலே சிவயோக
நிலையில்நின்று குணமான வழிபாடு தனையெடுத்து
மாடையிலே சினமென்ற கோபந்தள்ள
மதிப்புடனே தாரிணியிலிருந்துகொண்டு
நீடையிலே கரிவங்க
பற்பந்தன்னை நீனிலத்திலுண்பவனே சித்தனாமே
விளக்கவுரை :
3364. சித்தனாய் பிறந்தாலும்
மதிகள்வேண்டும் சீறலென்ற சினமதுவைத் தள்ளவேண்டும்
பத்தியுடன் பதாம்புயத்தை
எந்தநாளும் பட்சமுடன் மனந்தனிலே நினைக்கவேண்டும்
நித்தியமும் பரவெளியில்
நிற்கவேண்டும் நீடாழி யுலகாசை யொழிக்கவேண்டும்
முத்தியுடன் அஷ்டமா
சித்திதன்னை மூவுலகில் பெறுபவனே யோகியாமே
விளக்கவுரை :
3365. யோகமென்றால் போகமதைத் தள்ளவேண்டும் யொருவருடன் வீண்வார்த்தைக் கூறலாகா
போகமதை நீக்கிவிட்டு
பூமிதன்னில் புகழாக வாசியோகந் தன்னிற்சென்று
தாகமுடன் கானப்பால்
தன்னைக்கொண்டு சதாகாலம் நிஷ்டையிலே யனுமானித்து
வேகமுடன் விட்டகுறை வந்தபோது
வெறுப்பன்றி பொறுப்பலுடன் மீள்வீர்தாமே
விளக்கவுரை :