போகர் சப்தகாண்டம் 3416 - 3420 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3416. தானான பிணிகளது சொல்லக்கேளும் சார்பான யீளையுடன் இருமல்போகும்
வேனான குஷ்டம்பதினெட்டும்போகும் வேகமுடன் தழுவணையும் மாறிப்போகும்
தேனான தேனதனில்கொண்டபோது தேற்றமுடன் சொரிசிரங்கு பௌத்திரம்போம்
ஊனான கசரோகம் தீரும்தீரும் வுத்தமனே சில்விஷங்க ளற்றுப்போமே

விளக்கவுரை :


3417. போகுமே சூலையொடு காப்பன்போகும் பொல்லாத சிலவிஷங்க ளனைத்தும்போகும்
ஏகமே தேகமது கற்றூணாகும் எழிலான சட்டையது தள்ளும்பாரே
சாகுமே குழிச்சிலந்தி பிளவையாவும் சண்ணுமடா வுடலைவிட்டுக் காடேபோகும்
பாகுடனே மேவிளைப்பு தீர்ந்துபோகும் பாரினிலே இதுவுமொரு கற்பமாமே

விளக்கவுரை :

[ads-post]

3418. கற்பமா மின்னமொரு பாகஞ்சொல்வேன் கருவாகத்தான் கேட்பீர் கருத்துளப்பா
அற்பமென்று நினையாதே இந்தபாகம் அப்பனே சூரியென்ற நத்தைசூரி
பொற்பமுடன் வெள்ளிநாள் வேர்பிடுங்கி சுத்தமுடன் பூசைதனில் குளிசமாடி
சற்பமென்ற ராஜனிட மையைத்தீட்டி சட்டமுடன் வுருவேற்றித்தீபம்போடே  

விளக்கவுரை :


3419. போடவே மாடனுமே எதிரேநிற்பான் பொங்கமுடன் வுருவதுதான் லட்சமாகும்
நீடவே யங் சிங் வங் கென்றபோது நிலைக்குமடா மாரணமு மிதனாலாகும்
கூடவே நமசியென்றேயோது குடியோட்டிப் பூண்டுக்குக் காப்புகட்டி  
தேடவே லட்சமுரு தன்னைப்போடு தெளிவான சித்திமுத லாகும்பாரே 

விளக்கவுரை :


3420. பாரேதான் வட்சரத்து எழுதியோதி பாகமுடன் குளிசமதில் கட்டுவாய்நீ
நேரேதான் லட்சமுரு வோதிப்பின்பு நேர்மையுடன் தலைதனிலே நீரைவாரு
தேடேதான் லலாடமதில் கருமையைத்தான் தேற்றமுடன் தீட்டியல்லோ குந்தவைத்து
ஊரேதான் கிழக்குமுகந் தனிலிருத்தி வுத்தமனே செபித்திடுவாய் பூதந்தானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3411 - 3415 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3411. ஆமேதான் தங்கபற்பமுண்ணும்போது அப்பனே பத்திங்கள் உரைக்கக்கேளும்
நாமேதான் சொன்னபடி புளியுப்பாகா நலமுடனே பாலன்னங்கொள்ளநன்று
தாமேதான் பத்துநாள் இப்படியேகொண்டு தெளிவாக மண்டலந்தான் சொல்லக்கேளு
வேமேதான் சுட்டபுளி வறுத்துப்பாகும் வேகமுடன் மண்டலந்தான் வுண்டுகொள்ளே

விளக்கவுரை :


3412. கொள்ளவே பற்பமதுவுண்டுகொண்டு கோடான கோடிமுறை சித்துசெய்வீர்
விள்ளவே கன்னியென்ற மாயாகற்பம் வீணிலே யனுபோகம் மிகவுந்தள்ளு  
மெள்ளவே கைபாகம் செய்பாகத்தை மேதினியில் கண்டறிந்து பின்னுங்கேளு
எள்ளளவு பிசகதுதான் வாராவண்ணம் எழிலுடனே செய்துமல்லோ வருள்தான்காணே

விளக்கவுரை :

[ads-post]

3413. காணவே யின்னமொரு கருமானங்கேள் கவனமுடன் யானுரைப்பேன் கடியமூலி
நாணவே பொன்னாவாரைதன்னை நலமாகச் சமூலமதைக்கொண்டுவந்து
பாணமெனும் ரவிதனிலே காயவைத்து பாகமுடன் சூரணித்து வடிறான்கொண்டு
தோணவே பாண்டமதில் பாலைவிட்டு துப்புரவாய் வேடுகட்டி சீலைமூடே

விளக்கவுரை :


3414. மூடியதோர் சீலைதனில் சூரணத்தை முதிராமல் பதமுடனே தானமைத்து
நீடியே மேற்பாண்டந்தன்னைஐமூடி நினைவாகத் தானெரிப்பாய் கண்டுமட்டும்
சாடியே பாண்டமதை திறந்துபார்த்து சட்டமுடன் சூரணத்தை எடுத்துக்கொண்டு
வாடியே திரியாமல் ரவியிற்றானும் அவளுடனே சூரணத்தைக் கொட்டியாற்றே

விளக்கவுரை :


3415. ஆற்றியே சூரணத்தை ரவியிற்போட்டு அப்பனே காய்ந்தபின்பு எடுத்துக்கொண்டு
நேற்றியுடன் முன்சொன்ன முப்புசிண்ணம் நெடிதான களஞ்சியது கூடச்சேர்த்து
தூற்றியே சீனியது சரியாய்க்கொண்டு துப்புரவாய் திரிகடிகைதன்னையப்பா
மாற்றியே வெண்ணைதனில் கொண்டாயானால் மண்டலத்தில் போகுமடா பிணிகள்தானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3406 - 3410 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3406. உண்ணையிலே சேத்துமங்கள் தொண்ணூற்றாறும் வுத்தமனே பித்தமது நாற்பதும்போம்
நண்ணமுடன் வாயுவென்ற தெண்பதும்போம் நயமான மேகவகை இருபத்தொன்றும்
குண்ணவே குன்மமென்ற தெட்டும்போகும் கூரான கிரந்தி பதினெட்டும்போகும்
வாகாக நீரிழிவு யாறும்போமே

விளக்கவுரை :


3407. ஆறான கலமேகம் அகன்றுபோகும் அப்பனே வுளமாந்தை கவுசிபோகும்
வாரான குஷ்டம் பதினெட்டும்போகும் வாகான வண்டத்தின் வாயுபோகும்
தூறான மேலிளைப்பு தீர்ந்துபோகும் துடியான நரம்பெல்லாம் முறுக்கேபோகும்
சாறான மூலிகைகள் இதற்கொவ்வாது சட்டமுடன் போகரிஷி வுரைத்ததாமே

விளக்கவுரை :

[ads-post]

3408. உரைத்தோமே சீனபதிமாந்தருக்கு வுத்தமனே கண்காணா வுணவையெல்லாம்
நிரைத்துவிட்டேன் வெள்ளையென்ற மாந்தருக்கு நிறையான கைமுறையும் முழுதும் சொன்னேன்
கரைத்துவிட்டேன் காயாதி கற்பந்தன்னை கருவாக வுளவுதனை யறிந்துகொண்டார்
மரைத்துமே கற்பமது வுண்டபோது பறக்குமடா நோயேது பிணிதானேதே

விளக்கவுரை :


3409. ஏதான தங்கபற்பமுண்டபோது எழிலான தேகமது கற்றூணாகும்
வாதான நமனுக்கு அருதியில்லை வந்தநோய் தீர்ந்துவிடும் வசனித்தேனான்
சூதான தங்கமதையுண்டபேர்கள் துரைகோடி காலம்வரை இருக்கலாகும்
தீதான பிணிகளது இதிலேதோயும் திரளான நோய்பிணியும் பறக்கும்பாரே

விளக்கவுரை :


3410. பாரேதான் தங்கமதை கொண்டபோது பாரினிலே நீயுமொரு சித்தனாவாய்
வேறேதான் சாத்திரத்தின் வுளவுபார்த்து தெளிவான கைமுறைகள் அறியவேண்டும்
நேரேதான் அறிந்தாலும் வுன்றுமில்லை நேர்பான வழியோடு செய்தால்சுத்தி
கூரேதான் குணங்கண்டு குறியுங்கண்டு கொப்பெனவே செய்பவனே ஞானியாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3401 - 3405 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3401. ஆதியாம் பூமியிட நாகத்தாலே அப்பனே தங்கமது பற்பமாகும்
ஜொதியாம் தங்கமென்ற வெண்ணைதன்னை சுருதியுடன் பில்லையது லகுவாய்த்தட்டி
வாதிகள் செய்பாகம் போல மனதிலுன்னி மயங்காமல் ரவிதனிலே காயவைத்து
சாதியாம் ஓரெருவிற் புடத்தைப்போடு தப்பாது கெஜபுடத்தில் நீறுமாமே

விளக்கவுரை :


3402. நீறியதோர் பற்பமதை பின்னுங்கேளு நேர்மையுடன் தானெடுத்து கல்வமிட்டு
கூறியதோர் வாக்கதுவும் பிசகாமற்றான் குணமாகத் தானரைப்பாய் செயநீர்தன்னால்
மாறியதோர் சாரமென்ற கெந்திநீறு மார்க்கமுடன் தானரைப்பாய் மைபோலாக 
மீறியே போகாமல் வெண்ணையாக்கி மிதியுடன் பில்லைதட்டிக் காயப்போடே

விளக்கவுரை :

[ads-post]

3403. போடேதான் ரவிதனிலே காயவைத்து பொங்கமுடன் வோட்டிலிட்டுச் சீலைசெய்து
நாடேதான் குழிவெட்டிப் புடத்தைப்போடு நலமுடனெ கெஜபுடத்தில் தீரும்பாரு
கூடேதான் புடமதுவைத் திறந்துபார்க்க குணமான பற்பமது தவளம்போலாம்
தேடேதான் பற்பமதைத் பதனம்பண்ணு தேசத்தில் கிட்டாது சிவயோகிக்கே 

விளக்கவுரை :


3404. கிட்டாது பாவிகட்கும் கருமிகட்கும் கீர்த்தியுள்ள யுத்தமர்க்குகப் பலிக்கும்பாரு
எட்டாத பொருளெல்லாம் இதிலே தேற்றும் எழிலான உடலாவிப் பொருள்களெல்லாம்
விட்டாலும் விடுகுறைகளெல்லாம் காணும் எழிலான விதியிருந்தால் லபிக்கும்பாரு
முட்டாளாயிருக்காமல் முடிமன்னாநீ முறையோடே செய்துமல்லோ முடிவுகாணே

விளக்கவுரை :


3405. காணவென்றால் பற்பமதை வுண்ணக்கேளு கருவான லேகியங்கள் கிரதமாகும்
தோணவே நெய்தேனும் வெண்ணையாகும் தோற்றமுடன் இஞ்சிரசம் முலைப்பாலாகும்
பூணவே இந்தவித வனுபானங்கள் புகட்டினால் காயகற்பமாகும்
நாணவே கைபாகம் செய்பாகங்கள் நலமுடனே தாமறிந்து வுண்ணுவீரே

விளக்கவுரை :


Powered by Blogger.