போகர் சப்தகாண்டம் 3406 - 3410 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3406 - 3410 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3406. உண்ணையிலே சேத்துமங்கள் தொண்ணூற்றாறும் வுத்தமனே பித்தமது நாற்பதும்போம்
நண்ணமுடன் வாயுவென்ற தெண்பதும்போம் நயமான மேகவகை இருபத்தொன்றும்
குண்ணவே குன்மமென்ற தெட்டும்போகும் கூரான கிரந்தி பதினெட்டும்போகும்
வாகாக நீரிழிவு யாறும்போமே

விளக்கவுரை :


3407. ஆறான கலமேகம் அகன்றுபோகும் அப்பனே வுளமாந்தை கவுசிபோகும்
வாரான குஷ்டம் பதினெட்டும்போகும் வாகான வண்டத்தின் வாயுபோகும்
தூறான மேலிளைப்பு தீர்ந்துபோகும் துடியான நரம்பெல்லாம் முறுக்கேபோகும்
சாறான மூலிகைகள் இதற்கொவ்வாது சட்டமுடன் போகரிஷி வுரைத்ததாமே

விளக்கவுரை :

[ads-post]

3408. உரைத்தோமே சீனபதிமாந்தருக்கு வுத்தமனே கண்காணா வுணவையெல்லாம்
நிரைத்துவிட்டேன் வெள்ளையென்ற மாந்தருக்கு நிறையான கைமுறையும் முழுதும் சொன்னேன்
கரைத்துவிட்டேன் காயாதி கற்பந்தன்னை கருவாக வுளவுதனை யறிந்துகொண்டார்
மரைத்துமே கற்பமது வுண்டபோது பறக்குமடா நோயேது பிணிதானேதே

விளக்கவுரை :


3409. ஏதான தங்கபற்பமுண்டபோது எழிலான தேகமது கற்றூணாகும்
வாதான நமனுக்கு அருதியில்லை வந்தநோய் தீர்ந்துவிடும் வசனித்தேனான்
சூதான தங்கமதையுண்டபேர்கள் துரைகோடி காலம்வரை இருக்கலாகும்
தீதான பிணிகளது இதிலேதோயும் திரளான நோய்பிணியும் பறக்கும்பாரே

விளக்கவுரை :


3410. பாரேதான் தங்கமதை கொண்டபோது பாரினிலே நீயுமொரு சித்தனாவாய்
வேறேதான் சாத்திரத்தின் வுளவுபார்த்து தெளிவான கைமுறைகள் அறியவேண்டும்
நேரேதான் அறிந்தாலும் வுன்றுமில்லை நேர்பான வழியோடு செய்தால்சுத்தி
கூரேதான் குணங்கண்டு குறியுங்கண்டு கொப்பெனவே செய்பவனே ஞானியாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar