போகர் சப்தகாண்டம் 3586 - 3590 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3586. தானான வின்னமொரு கருமானங்கேள் தாரணியில் மானிடர்கள் அறியவென்று
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் குருவினது கடாட்சத்தாலே
தேனான வடிவேலர் சுப்பராயர் தேசத்தில் பிறந்ததோர்வன்மையாவும்
பானான சாத்திராயுத்தம்பார்த்து பகருகிறேன் மாணாக்கள் பிழைக்கவென்றே

விளக்கவுரை :


3587. பிழைக்கவே வடிவேலர் தம்மைத்தானும் பெரான வுலகில்தேவனென்றும்
வழக்கமுடன் சாத்திரங்கள் இதிகாசங்கள் வளமாகப்பாடிவைத்தார் வினயம்யாவும்
முழக்கமுடன் வடிவேலர் முருகன்தானும் முற்பிறப்பில் பஞ்தாக்கியனாக
தழக்கமுடன் பிறந்ததாய் சாத்திரங்கள் தாரிணியில் கவிவானர் கட்டினாரே  

விளக்கவுரை :

[ads-post]

3588. கட்டினார் வடிவேலர் முருகன்தானும் காசினியில் ஆறுமுக சொரூபமாகி
திட்டமுடன் பள்ளியிலே யோதும்போது தீரமுடன் அரிநமோவென்றுகூறி
இட்டமுடன் சொல்லெனவே பிரமன்தானும் எழிலான வடிவேலர் சொல்வேனென்றார்
சட்டமுடன் அரிக்குத்தான் பரியஞ்சொன்னால் சாங்கமுடன் யானுரைப்பேன் சத்தியவானே

விளக்கவுரை :


3589. சத்தியமாய் சொல்லுகையில் இந்திரன்தானும் சந்தோஷமாகவல்லோ தாமழைத்து
வெத்தியுடன் அசுரர்களைத்தான்ஜெயிக்க விருப்பமுடன் தானழைத்துசென்றபோது
புத்தியுடன் பகவானை நமஸ்கரித்து புகழாக அரக்கர்களை சங்கரித்து
நித்தியமுஞ் சூரசங்காரனாக நீணிலத்தில் வெகுகால மிருந்திட்டாரே

விளக்கவுரை :


3590. இருந்திட்டார் வள்ளிதனை சிறையெடுத்து எழிலான கலவதனிலிருந்தாரென்று
பொருந்தவே வுலகுதனில் சாமியாக பொங்கமுடன் வீற்றிருந்தார் சதாகாலந்தான்
வருந்தியே கோடிமனு பேர்களெல்லாம் வையகத்தில் மகாதேவனென்றுசொல்லி
திருந்தியே நமஸ்கரித்து தலைகுனிந்து திகழுடனே கோடியுகமிருந்தார்தாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3581 - 3585 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3581. ஆட்டவென்றால் சித்தருமே ஞானம்பெற்று அவனியிலே வெகுகாலமிருப்பாரப்பா
கூட்டமுடன் பாம்பாட்டி சித்தர்தாமும் குவலயத்தில் மாந்தரிருசீஷனாகி
நாட்டமுடன் தாமறிந்த ஞானமெல்லாம் தன்மையுடன் சீஷருக்கு உபதேசித்தார்
வாட்டமுடன் சீஷருக்கு உபதேசித்து வாகாகச் சமாதியிலே யடைந்தார்பாரே

விளக்கவுரை :


3582. பாரேதான் சமாதியிலே யடைந்தபின்பு பாலகனே சிலகாலமங்கிருந்து
நேரேதான் திருஷ்டாந்திர மிகவுங்காட்டி நேர்மையுடன் கற்பகாலம் இருப்பேனென்றும்
ஊரேதான் குடிப்படைகள் எல்லாருந்தான் வுத்தமர்க்குத் தொண்டுமிக வதிகஞ்செய்து
சீரேதான் சமாதியிடம் பூசைமார்க்கம் தெளிவாகச் செய்தார்கள் கோடியாமே

விளக்கவுரை :

[ads-post]

3583. கோடியாமின்னமொரு மார்க்கம்கேளு கூறுகிறேன் பாம்பாட்டி மகிமைதன்னை
நீடியே பாம்பாட்டி நாதர்தானும் நெடுங்காலம் சமாதியிலே இருந்துபின்னும்
நாடியே பூமிதனில் வெளியில்வந்து நாதாந்தக் கூத்துகளு மிகவுமாடி
தேடியே வரைகோடி காலமப்பா தேசத்திலிருந்தாரே சித்துதாமே

விளக்கவுரை :


3584. தாமான பாம்பாட்டி சித்தர்தாமும் தாரிணியில் சாகாமலிருந்தாரோதான்
நாமேதானறிந்தவரை யின்னஞ்சொல்வோம் நாதாந்த சித்ததுவும் மடிந்துபோனார்
போமேதான் சித்ததுவுந் தேகந்தன்னை பொங்கமுடன் சிலகாலம் மண்ணிற்சென்று
தூமானமாகவேதான் வெளியில்வந்து துப்புறவாய் தேகமதை மறந்திட்டாரே

விளக்கவுரை :


3585. மறந்திட்டார் தேகமதுநிலைநில்லாது மண்டலத்திலாரேனும் இருந்ததில்லை
துறந்திட்டார் நாதமுனிசித்துதாமும் துறையான வுலகுதனில் மாண்டுபோனார்
புறந்திட்ட சித்தர்முனி ரிஷிகள்யாவும் பேருலகில் மடிந்துமல்லோ மண்ணாய்ப்போனார்
இறந்துமே லோகமெல்லாம் மடிந்தார்கண்டீர் எழிலாக இருந்தவர்கள் இல்லைகாணே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3576 - 3580 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3576. பெற்றாரே சிலகாலம் மலைகள்மீது பேருலகில் கீர்த்தியுடன் வாழ்ந்திருந்தார்
புற்றருகில் சென்றுமல்லோ சித்தர்தாமும் புனிதமுள்ள நவரத்தின பாம்புதன்னை
வெற்றியுடன் தான்பிடிக்கப் போகும்போது வேதாந்த சட்டமுனி யங்கிருந்தார்
கற்றியே பாம்பாட்டி சித்தர்தாமும் சொரூபமுள்ள சித்தரைக் கண்டார்தாமே

விளக்கவுரை :


3577. கண்டாரே கைலாச சட்டர்தன்னை கருத்தினிலே யவர்பாதம்தொழுகவென்று
தெண்டமுடன் அடிபணிந்து சிரங்குவித்து தெளிவுடனே அஞ்சலிகள் மிகவுஞ்செய்து
பண்டுடனே காயாதிவர்க்கங்கொண்டு பாங்கான பாலுடனே பழமுங்கொண்டு
தண்டுளப மாலையணி துளசிகொண்டு சர்ப்பனையாயர் சித்துதமை கண்டார்தாமே

விளக்கவுரை :

[ads-post]

3578. தாமான நாதாந்த சித்துதம்மை தகமையுடன் பாம்பாட்டிக்கண்டபோது
நாமான கைலாசசட்டநாதர் நலமுடனே பாம்பாட்டி தனைநோக்கி
பூமான மானதொரு சித்தைக்கேளும் புகழுடனே காட்டகத்திலிருந்தீர்காலாம்
காமான கடியதொரு விஷத்தைத்தானும் கருமான மில்லாமல் கற்றீர்தாமே

விளக்கவுரை :


3579. கற்றீரே யுககோடி காலந்தானும் கருத்தினிலே பொய்மெய்கள் காணாமற்றான்
பெற்றீரே காட்டகத்தில் திரிந்துகொண்டு பேரான பாம்புகளை மடக்கியாட்டி
சுற்றிலுமே ஞானோபதேசப்பாலை சொரூபமுடன் சித்துதமைக் காணாமற்றான்
பற்றரவே சமுசார வாழ்க்கைதன்னில் பாருலகில் சிகாலம் இருந்திட்டாரே

விளக்கவுரை :


3580. இருந்துமே ஞானவானாகவேதான் எழிலான வுபதேசந்தன்னைநோக்கா
பொருந்துமே யுபதேசம் பெற்றீரானால் பூதலத்தில் வெகுகாலமிருக்கலாகும்
அருந்தியே ஞானப்பால் தானுமுண்டு அப்பனே உபதேசம் பெற்றுக்கொள்ள
வருந்தியே கைலாசசட்டநாதர் திறமுடனே வாக்களித்தார் பாம்பாட்டிக்கே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3571 - 3575 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3571. அடைத்திய ரூபத்திலொன்று தங்கந்தான்கூட்டி யதற்கிணங்க குகைதனையுண்டாக்கி யந்தகுகைக்குள்
உடைத்தகல்லுப்புந் துப்புநவாச்சாரந்தானும் முள்ளுறவே முன்னிடையுஞ்சமனாக கொண்டு
படைமுந்த எலுமிச்சம்பழச்சாற்றாலரைத்து பூணவே யொருபங்கு குகைக்குள்ளேபூசி
சடைத்திடச் சந்தேகுகையை வெய்யலிலேவைத்து தப்பாமலொருபங்கு வேறுவைத்துணர்த்தே

விளக்கவுரை :


3572. உணர்த்தியெடுத்த மருந்தை பொடியாக்கி குகைக்குள் ஒருவிரலரலின் கனமாகப் பொதிபாதியிட்டு
யிணக்கமுற குடுக்கைதனை பொடிமீதில்வைத்து யிரையளவு கண்மேலும் பொடிதனையேபரப்பி
வணக்கமுடன் மண்சில்லால் குகைவாயைமூடி வகையாக்குகையே சீலைமண்ணுஞ்செய்து
புணக்காதேயுணர்த்தி வெடித்தயிடந்தனக்கு பின்னும்மண்பூசிப் புடத்தினிடஞ்செய்யே

விளக்கவுரை :

[ads-post]

3573. இடமாக ஒருமுழத்திலத்தினிவாக்கிநீளயெத்தாதே குளிநெடுத்துப்பாதிமட்டும்
பெருவையிடமாக அடக்கியதின்மேல் அக்குகையைவைத்து பாங்காக குளிமறைய மேலும்யெருப்பொதிந்து
அடவாக ஏழுநாள்வரைக்கும் பீடத்திலிட்டு ஆத்திநீயெடுத்தால்
திடமாகச்செந்தூரம் இருக்குமதையெடுத்து தீர்க்கமுள்ள வயிரவனைப் பூசனையுஞ்செய்யே

விளக்கவுரை :


3574. தீர்க்கமுள்ள வயிரவனை பூசைசெய்தபின்பு செந்தூரமதனை சிமிளில்வைத்துக்கொண்டு
ஆரமுள்ள ஒருகளஞ்சி வெள்ளிதனையுருக்கி யதுநிறமாய்த்தெளிவினிலே பணவிடைசெந்தூரம்
ஏகமாய்க்கொடுக்க மாத்தெட்டரையுங்காணும் ஈசனாராணையிது தப்பாதுண்டாகும்
நீர்த்தமென்று நினையாதே சூதமுனியுரைத்தான் நிசமாகவுண்டாகும் இன்னவரைசொல்லே

விளக்கவுரை :


3575. சொல்லவேயின்னமொரு மார்க்கங்கேளு சொரூபமென்ற பாம்பாட்டி சித்தனப்பா
வெல்லவே வெகுகாலம் வனாந்திரத்தில் வினோதமுடன் சித்துமிகவாடிவந்தார்
கொல்லவே அரவங்கள்தான்பிடித்து கொற்றவனார் சமூகமது சென்றேயேகி
வெல்லவே அரவமதையாட்டியேதான் மேன்மையுடன் பரிசுமிக பெற்றார்தாமே

விளக்கவுரை :


Powered by Blogger.