போகர் சப்தகாண்டம் 3586 - 3590 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3586 - 3590 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3586. தானான வின்னமொரு கருமானங்கேள் தாரணியில் மானிடர்கள் அறியவென்று
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் குருவினது கடாட்சத்தாலே
தேனான வடிவேலர் சுப்பராயர் தேசத்தில் பிறந்ததோர்வன்மையாவும்
பானான சாத்திராயுத்தம்பார்த்து பகருகிறேன் மாணாக்கள் பிழைக்கவென்றே

விளக்கவுரை :


3587. பிழைக்கவே வடிவேலர் தம்மைத்தானும் பெரான வுலகில்தேவனென்றும்
வழக்கமுடன் சாத்திரங்கள் இதிகாசங்கள் வளமாகப்பாடிவைத்தார் வினயம்யாவும்
முழக்கமுடன் வடிவேலர் முருகன்தானும் முற்பிறப்பில் பஞ்தாக்கியனாக
தழக்கமுடன் பிறந்ததாய் சாத்திரங்கள் தாரிணியில் கவிவானர் கட்டினாரே  

விளக்கவுரை :

[ads-post]

3588. கட்டினார் வடிவேலர் முருகன்தானும் காசினியில் ஆறுமுக சொரூபமாகி
திட்டமுடன் பள்ளியிலே யோதும்போது தீரமுடன் அரிநமோவென்றுகூறி
இட்டமுடன் சொல்லெனவே பிரமன்தானும் எழிலான வடிவேலர் சொல்வேனென்றார்
சட்டமுடன் அரிக்குத்தான் பரியஞ்சொன்னால் சாங்கமுடன் யானுரைப்பேன் சத்தியவானே

விளக்கவுரை :


3589. சத்தியமாய் சொல்லுகையில் இந்திரன்தானும் சந்தோஷமாகவல்லோ தாமழைத்து
வெத்தியுடன் அசுரர்களைத்தான்ஜெயிக்க விருப்பமுடன் தானழைத்துசென்றபோது
புத்தியுடன் பகவானை நமஸ்கரித்து புகழாக அரக்கர்களை சங்கரித்து
நித்தியமுஞ் சூரசங்காரனாக நீணிலத்தில் வெகுகால மிருந்திட்டாரே

விளக்கவுரை :


3590. இருந்திட்டார் வள்ளிதனை சிறையெடுத்து எழிலான கலவதனிலிருந்தாரென்று
பொருந்தவே வுலகுதனில் சாமியாக பொங்கமுடன் வீற்றிருந்தார் சதாகாலந்தான்
வருந்தியே கோடிமனு பேர்களெல்லாம் வையகத்தில் மகாதேவனென்றுசொல்லி
திருந்தியே நமஸ்கரித்து தலைகுனிந்து திகழுடனே கோடியுகமிருந்தார்தாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar