போகர் சப்தகாண்டம் 3576 - 3580 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3576 - 3580 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3576. பெற்றாரே சிலகாலம் மலைகள்மீது பேருலகில் கீர்த்தியுடன் வாழ்ந்திருந்தார்
புற்றருகில் சென்றுமல்லோ சித்தர்தாமும் புனிதமுள்ள நவரத்தின பாம்புதன்னை
வெற்றியுடன் தான்பிடிக்கப் போகும்போது வேதாந்த சட்டமுனி யங்கிருந்தார்
கற்றியே பாம்பாட்டி சித்தர்தாமும் சொரூபமுள்ள சித்தரைக் கண்டார்தாமே

விளக்கவுரை :


3577. கண்டாரே கைலாச சட்டர்தன்னை கருத்தினிலே யவர்பாதம்தொழுகவென்று
தெண்டமுடன் அடிபணிந்து சிரங்குவித்து தெளிவுடனே அஞ்சலிகள் மிகவுஞ்செய்து
பண்டுடனே காயாதிவர்க்கங்கொண்டு பாங்கான பாலுடனே பழமுங்கொண்டு
தண்டுளப மாலையணி துளசிகொண்டு சர்ப்பனையாயர் சித்துதமை கண்டார்தாமே

விளக்கவுரை :

[ads-post]

3578. தாமான நாதாந்த சித்துதம்மை தகமையுடன் பாம்பாட்டிக்கண்டபோது
நாமான கைலாசசட்டநாதர் நலமுடனே பாம்பாட்டி தனைநோக்கி
பூமான மானதொரு சித்தைக்கேளும் புகழுடனே காட்டகத்திலிருந்தீர்காலாம்
காமான கடியதொரு விஷத்தைத்தானும் கருமான மில்லாமல் கற்றீர்தாமே

விளக்கவுரை :


3579. கற்றீரே யுககோடி காலந்தானும் கருத்தினிலே பொய்மெய்கள் காணாமற்றான்
பெற்றீரே காட்டகத்தில் திரிந்துகொண்டு பேரான பாம்புகளை மடக்கியாட்டி
சுற்றிலுமே ஞானோபதேசப்பாலை சொரூபமுடன் சித்துதமைக் காணாமற்றான்
பற்றரவே சமுசார வாழ்க்கைதன்னில் பாருலகில் சிகாலம் இருந்திட்டாரே

விளக்கவுரை :


3580. இருந்துமே ஞானவானாகவேதான் எழிலான வுபதேசந்தன்னைநோக்கா
பொருந்துமே யுபதேசம் பெற்றீரானால் பூதலத்தில் வெகுகாலமிருக்கலாகும்
அருந்தியே ஞானப்பால் தானுமுண்டு அப்பனே உபதேசம் பெற்றுக்கொள்ள
வருந்தியே கைலாசசட்டநாதர் திறமுடனே வாக்களித்தார் பாம்பாட்டிக்கே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar