போகர் சப்தகாண்டம் 3566 - 3570 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3566. கூட்டியந்த குழம்பதனை கிண்ணமதிலுள்ளுங் குவிந்தபுறந்தனிலு மரைசாந்துபோல்பூசி
நாட்டியல்பாய் கட்டிவைத்த மூன்றுபடியுப்பை நாகவடம்போல் குளிர்ந்தசட்டிக்குள்ளிட்டு
வீட்டிமையாய் சட்டியதின் மேலாகக்கிண்ணம் விளும்புசற்றே கண்காண வெள்ளிநடுவில் பதித்து
தாட்டிகமாய்க் கிண்ணத்தின் விளிம்புதான் மறைச்சார்வாக சீலைமண்ணஞ்செய் தடுப்பிலேற்றே

விளக்கவுரை :


3567. அடுப்பிலே வைத்தபின்பு ஐங்கரர்க்குப்பூசை அன்பாகச்செய்துகொண்டு நலத்தேக்கினிலையை
கடுகவே யிடித்ததிலே நவாச்சாரமிட்டு கசப்பில்லா தனிச்சாறு மூன்றுபடி யெடுத்து
தொடுப்பாக வனல்மூட்டி எரியிடுமவ்வேளை சுறுக்காகப்படிமூன்றுஞ் சிலவறுத்தபின்பு
மெடுப்பாத யெரியிடுநீ பதினஞ்சுநாழிகைக்குநன்றாக ஆறியபின்னெடுத்திடச் செந்தூரம்

விளக்கவுரை :

[ads-post]

3568. செந்தூரந் தனையெடுத்து முன்னால்வைத்து சிவகாமிபூசையும் அர்ச்சனையுஞ்செய்து
அந்தரங்கமாக வொன்றிலடைத்துவைத்து கொண்டையறவைத்து வெள்ளீரேழு பணவிடையுங்கூட்டி
சிந்தனையாய் சுற்றிசெய்த செம்பினிலே மூன்றுசேர்த்தொரு களஞ்சியொன்றாய் உருக்குமுன்பெடுத்து
பின்னுமதையுருக்கி நிறந்தெளிந்தால் வைத்திருக்கும் மஞ்சாடிசேரே

விளக்கவுரை :


3569. மஞ்சாடி சேத்திடமாத்தேழரையுங்காணும் மாதவத்தோன் சூதமுனிவாக்கியம் பொய்யாது
அஞ்சாதே பரமகுரு ஆணையுண்டு நிசமேஅறிவதுபின் துருசுசெம்பாகும் வகைகேளு
மிஞ்சவே வெண்காரந் துரியொன்றாய்க் கூட்டி வெண்ணைதனிலேயரைத்து குடக்கரியில்வைத்து
துஞ்சவே யுருக்கவந்த துரிசியிலே பாதிசுற்றி யுள்ளசெம்பிருக்குஞ் சொல்லயின்னங்கேளே

விளக்கவுரை :


3570. கேளப்பா இன்னமந்த னாகமதில்வகையே கோதறவே இலுப்பையெண்ணைதனை
வைத்துக்கொண்டு நாளொப்பயிருக்குமந்த நாகத்தையுருக்கி நாலுவட்டம்சாய்த்தபின்பு எடுத்தால்
தூளப்பாலேகடந்து நாகமெழுகதுபோல சுத்தியாயிருக்குமது தினஞ்சுகளஞ்சால்
ஆளப்பா வில்லையின் காய்குடுக்கைமூடியுமாய் அளவாக செய்யிரதமிடை யொப்பாயடையே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3561 - 3565 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3561. ஒப்பரிய சூதமுனி நந்தியுரைகேட்டு வுளமகிழ்ந்தங்கவ னுரைப்பாள்வுப்பைநீகட்ட
அப்புமிகுங்கடல்துறையை பொடியாக்கி யதிலே அரைப்பொடிக்கு மூன்றுபடி வுப்பதனைக் கூட்டி
செப்பரிய வெள்ளாட்டு நீரதனைவிட்டு சேர்த்தரைத்தோர் கட்டியிற் குள்ளாக்கியே பின்புதப்பாமல்
மறுவோடு தான்கவிழ்த்து மூடிதட்டெருவில் புடம்போட்டு யெடுப்பதுவுமாமே

விளக்கவுரை :


3562. எடுத்திடுபின் செம்பதனைச்சுற்றி செய்யும்வாறு யெப்படியென்றெண்ணாதே நீலப்பூவின்
கடுத்தாக்கணாத்தி நிலையரைத்துவாங்கி களங்குபோல திரண்டசெம்மைபொதிவுதனை
அடுத்தயீரஞ் சுதிர்முருக்கிப்பின்பு அதியபுங்கன்வேரரைத்து அதிலுமுன்போல் கொடுத்துருக்க
யீரஞ்சு சுதிரத்திலே செம்புசுத்தியென்று சொன்னவகை சொல்லவும் ஒண்ணாதே 

விளக்கவுரை :

[ads-post]

3563. சொல்லாதே கெந்தகத்தை கட்டும்வாறு தோகையாகையுகிரி தனிலவன்மேறும்
நல்லமயிலா கஞ்சியிலை தனையரைத்து காட்டாவின் தயிர்தனிலே கலவைசெய்து
வில்லையைப்போ லொருமேட்டில் வட்டஞ்செய்து வெளிநடுவில் நாலாறு துவாரமிட்டு
கொல்லவே கெந்தகமு மோட்டிலிட்டு குளிதனிலே ஒருகலசம் வைத்துக்காணே

விளக்கவுரை :


3564. காணவே வைத்ததனை கலவைசெய்த கதையில் குறையவிட்டு கலசவாயில்
தோணவைத்த கந்தகோட்டைவைத்து கோணாமல் மறுஓடு கவிழ்த்துமூடி
வேணபடி சீலையது வலுவாகச்செய்து வேகமுடன் குழிவெட்டிப் புடத்தைப்போடு
பூணவைத்து யிப்படிநீ ரஞ்சுவட்டம் புடத்திலிட்டு கட்டிய கெந்தகத்தைச்சேரே

விளக்கவுரை :


3565. சேரப்பா நாகமஞ்சு களஞ்சைகொண்டு செப்பெனவே கிண்ணமொன்று செய்தபின்பு
பாரப்பா மரிதாரஞ் சாதிலிங்கம் பச்சைநிறமாக வுத்த துருசுடனேயிரதம்
காரப்பா கட்டிவைத்த கெந்தகத்தைக்கூட்டிக்கொண்டு கொள்ளும்வகைதனக்கு ஒவ்வொருகளஞ்சி
சாரப்பா களஞ்சி குளிக்கல்லிலேயிட்டு தளவாய்நீர்விட்டரைத்து குழம்பாய்க்கூட்டே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3556 - 3560 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3556. கலந்துசமன்கூட்டி யதுயிடித்ததில் சாரெடுத்து கைசேரவொருசாம் பின்னுமரைத்து
பலந்தநிழற்குள்ளுணர்த்தி பொடியாக்கி கங்காசல குப்பிதனக்குள்ளே
நிலந்தெளியாதே யேழுசிலைமண்ணுஞ்செய்து நேரான வெய்யிலிலேயுலர்த்தி
பிளந்தவராதே மண்பூசி மெழுகிட்டு பேதமறக் குப்பிதனைப் பேணிமருந்தடையே

விளக்கவுரை :


3557. மருந்தான பொடிவகையை குப்பியரைவாகாக அடைத்தந்தவாய்வலப்பக்கலில்
திருந்தவே மூடியதின்மேலுமடைமண்ணை திறமாக மூடியொரு தாளிதனையெடுத்து
பொருந்தியதற்குள்ளே நாலுவிரலக்கனந்தான் பொடிமணலையிட்டதன் மேல்குப்புதனை வைத்து
குருந்தமால்ப் பின்னுமந்த மணல்தனையேபோட்டு குப்பிகுடமரைமதில் கொட்டியடுப்பாக்கே

விளக்கவுரை :

[ads-post]

3558. ஒட்டியதோரடுப்புமிட்டு தாளியதன்மேலேயுள்ளாக புதையவைத்து முன்னவர்க்குப்பூசை
கிட்டியன்பாய் செய்தபின்பு தீபமொருசாமம் யெரியிடும்தன்கமலம்போல் இருசாமமெரித்தால்
கெட்டியாக் கடுயெரிவொரு சாமந்தனக்கு பேதமுடனிப்படியே சாமமாரெறித்து
விட்டடின்பு ஆறவைத்து மறுநாளிலிங்கே யிடுமோக வயிரவனைப் பூசைபண்ணிக் கொள்ளே

விளக்கவுரை :


3559. வயிரவனைப் பூசைசெய்து குப்பிதனையெடுத்து வாகாக வுடைத்துள்ளே பார்க்கவே செந்தூரம்
ஒயிலான முருக்கம்பூ நிறமாகயிருக்கும் ஒன்றிலே பத்திரமாய் அடைத்துவைத்துக்கொண்டு
கயிலாசகிரிதனிலே களஞ்சிதனிலுருக்கி கடுகவதில் மஞ்சாடி செந்தூரங்கொடுக்க
பயிலறிய நின்மாற்று ஒன்பதையுங்காணும் பற்றாறவைற்ற செம்புக்காறு குறையாதே

விளக்கவுரை :


3560. குறையாது செந்தூரம் விளைவதியங்கண்டால் குறிப்பதுதான் கண்டறிந்து குறைவுசெய்ய வேண்டும்
நிறையான விளைவுசற்றே குறைந்துவிட்டு தானாநிறைவிலே கால்மஞ்சாடி கூட்டுவது நலமாம்
மறைநாளும் ஆராயும்நந்திவகையுரைத்தான் வாக்கிது தப்பாது நிஜமானாணை வன்மை
திறமானஜெகத்தினிலே வாதியென்றுவாராமல் ஜெகத்தினிலே செய்வதுநற்கருமமென்று செப்பினதொப்பிணையே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3551 - 3555 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3551. பாகந்தா னறியும்வகை எப்படியோகேளு பலபிண்க்கு தக்காதுநீ யனுபானமெடுத்து
வேகஞ்சேர் யிரதபற்பம் பணவிடைகள் கூட்டி விதமாக யிருபொழுது ஏழுநாள்கொடுக்க
தாகந்தாறையொழிந்து சகலவியாதிகளுந் தணியுமே பற்றிபத்திலின்னவகைகேளு
தேகந்தான் பழுப்பேறி தளர்ந்து மானிடர்கள் சிறுவாலை மதன்போலே சிறப்பதற்குமாமே

விளக்கவுரை :


3552. மதனாகவாவென்றால் சமாதியிலே யிருந்து வளமான இரதபற்பம் பணவிடைதான்கொள்ள
அதமீறும் பளவுடனே கசப்பெல்லாம்நீங்கி ஆவின்பாலுடன் குருவையரிசி சோருண்ணு
நிதம்பெறவே ரெழுந்ததிரை மாறிவாலையாம் நீணிலத்தில் நூறுகற்பகாலம் வரையிருப்பார்
சுதன்போலே யிருநூறு யானைவலுவுண்டாம் சோதிதிருவானை நந்தி சொன்னபடிசெய்யே

விளக்கவுரை :

[ads-post]

3553. செய்யவென்று நந்தியின்னும் வேதமுனிதனக்கு செப்புவான் ஸ்ரீராமன் செந்தூரம் வகைதான்
வையகமெல்லாஞ் சுத்திசெய்த யிரவதம்கையாக அறுபது களஞ்சியதுபோலே  
வெய்யதோர் கெந்தகமும் மிடைமுன்போலே கூட்டுமேலான சாதிலிங்கம் பதினஞ்சுகளஞ்சி
அய்யமெனும் நினையாதே பொன்னரிதாரத்தை அன்பாக அன்பதுகளஞ்சியதுசேரே   

விளக்கவுரை :


3554. களஞ்சிரண்டு தனித்தயிடை மனோசிலையுங்கூட்டு கடிதான நாதத்தை ஈரஞ்சுவட்டம்
வளஞ்செய்து இதுப்பையென்ணை தனிலுருக்கிச்சாய்த்து வகையாக நாற்பதுகளஞ்சி யதில்சேர்த்து
உளஞ்செய்த தங்கத்தில் ஒருகளஞ்சியாக ஒக்கயிருநூத்திருபத் தென்களஞ்சியெல்லாம்
தளஞ்செய்த எருக்கம்பால் தன்னிலொருசாமம் கசடறவே யரைத்து மறுசாறு புரசிலையே

விளக்கவுரை :


3555. புரசிலை தும்பையுடன் செருப்படி செம்முள்ளி புகழான மாதலையின் இலையுடனேஅஞ்சும்
வரமுறவே கொண்டுவந்து வெவ்வேறேயிடித்து வகையாகத் தனிச்சாறுயெடுத்துவைத்துக் கொண்டு
திரமுறவே யிச்சாறு வொருசாமந் தீர்க்கமுற்ற சொல்முறையாய் சாமமஞ்சரைத்து
கரமறவே பின்னுமந்த மாதளையின் பூவுங்காண முருக்கம்பூவும்கலந்து சமன்கூட்டே

விளக்கவுரை :


Powered by Blogger.