3566. கூட்டியந்த குழம்பதனை
கிண்ணமதிலுள்ளுங் குவிந்தபுறந்தனிலு மரைசாந்துபோல்பூசி
நாட்டியல்பாய் கட்டிவைத்த
மூன்றுபடியுப்பை நாகவடம்போல் குளிர்ந்தசட்டிக்குள்ளிட்டு
வீட்டிமையாய் சட்டியதின்
மேலாகக்கிண்ணம் விளும்புசற்றே கண்காண வெள்ளிநடுவில் பதித்து
தாட்டிகமாய்க் கிண்ணத்தின்
விளிம்புதான் மறைச்சார்வாக சீலைமண்ணஞ்செய் தடுப்பிலேற்றே
விளக்கவுரை :
3567. அடுப்பிலே வைத்தபின்பு
ஐங்கரர்க்குப்பூசை அன்பாகச்செய்துகொண்டு நலத்தேக்கினிலையை
கடுகவே யிடித்ததிலே
நவாச்சாரமிட்டு கசப்பில்லா தனிச்சாறு மூன்றுபடி யெடுத்து
தொடுப்பாக வனல்மூட்டி
எரியிடுமவ்வேளை சுறுக்காகப்படிமூன்றுஞ் சிலவறுத்தபின்பு
மெடுப்பாத யெரியிடுநீ
பதினஞ்சுநாழிகைக்குநன்றாக ஆறியபின்னெடுத்திடச் செந்தூரம்
விளக்கவுரை :
[ads-post]
3568. செந்தூரந் தனையெடுத்து
முன்னால்வைத்து சிவகாமிபூசையும் அர்ச்சனையுஞ்செய்து
அந்தரங்கமாக வொன்றிலடைத்துவைத்து
கொண்டையறவைத்து வெள்ளீரேழு பணவிடையுங்கூட்டி
சிந்தனையாய் சுற்றிசெய்த
செம்பினிலே மூன்றுசேர்த்தொரு களஞ்சியொன்றாய் உருக்குமுன்பெடுத்து
பின்னுமதையுருக்கி
நிறந்தெளிந்தால் வைத்திருக்கும் மஞ்சாடிசேரே
விளக்கவுரை :
3569. மஞ்சாடி
சேத்திடமாத்தேழரையுங்காணும் மாதவத்தோன் சூதமுனிவாக்கியம் பொய்யாது
அஞ்சாதே பரமகுரு ஆணையுண்டு
நிசமேஅறிவதுபின் துருசுசெம்பாகும் வகைகேளு
மிஞ்சவே வெண்காரந்
துரியொன்றாய்க் கூட்டி வெண்ணைதனிலேயரைத்து குடக்கரியில்வைத்து
துஞ்சவே யுருக்கவந்த
துரிசியிலே பாதிசுற்றி யுள்ளசெம்பிருக்குஞ் சொல்லயின்னங்கேளே
விளக்கவுரை :
3570. கேளப்பா இன்னமந்த
னாகமதில்வகையே கோதறவே இலுப்பையெண்ணைதனை
வைத்துக்கொண்டு
நாளொப்பயிருக்குமந்த நாகத்தையுருக்கி நாலுவட்டம்சாய்த்தபின்பு எடுத்தால்
தூளப்பாலேகடந்து
நாகமெழுகதுபோல சுத்தியாயிருக்குமது தினஞ்சுகளஞ்சால்
ஆளப்பா வில்லையின்
காய்குடுக்கைமூடியுமாய் அளவாக செய்யிரதமிடை யொப்பாயடையே
விளக்கவுரை :