போகர் சப்தகாண்டம் 3621 - 3625 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3621. ஆச்சுதப்பா தேகமது மண்ணாய்ப்போச்சு அவனியிலே யிருந்தவர்கள் யாருமில்லை
பாச்சலுடன் பிரிதீவுதான் மண்ணாய்ப்போச்சு பாங்கான தேகமது நிலைநில்லாது
மாச்சலென்ற வாழ்வதுவு மிவ்வளவேயாச்சு மானிலத்தில் வாத்துமமும் பிரிந்துபோச்சு
ஏச்சலென்ற பிரிதீவா மண்கூறாச்சு எல்லாரு மிப்படியே போகலாச்சே

விளக்கவுரை :


3622. போகலா மின்னமொரு மார்க்கம்பாரு பூதலத்தி லதிசயங்கள் இன்னஞ்சொல்வேன்
வேகமுடன் சித்தர்களில் ஒருவனப்பாவுலகுதனிலிருந்தாரே யூகிதாமும்
சோகமுடன் சமுசார வாழ்க்கைதன்னில் செருக்குடனே வெகுகால மிருந்தாரப்பா
சாகமுடன் ஜமதக்கினி முனிவருக்கும் சார்பான திரனாக்கிய முனிவர்தாமே 

விளக்கவுரை :

[ads-post]

3623. தாமான முனிவருக்கு குருவேயாகும் தன்மையுள்ள குருவினது கீர்த்திதன்னை
கோமானாங் காலாங்கிநாதர்தாமும் கொப்பெனவே யடியேனும் குரைத்ததுண்டு
நாமான மாகவல்லோ யறிந்தமட்டும் நாதாக்கள் வரலாறை நாமுரைப்போம்
தீமானமில்லாமல் அடியேன்தானும் திறமுடனே சொல்லுகிறேன் பண்பாய்க்கேளே

விளக்கவுரை :


3624. பண்பான யூகிமுனி யென்போர்தாமும் பாருலகில் தட்சணப்பிரவேசத்தில்
மணபான மலைவளம் சுத்தும்போது கண்டாரே வராககிரி யென்றமேரு
தின்பான மலைவளத்தை சுற்றியேதான் திரமுடன்நடுமத்தி காடதன்னில்
வன்பான குத்துக்கல் கண்டாரங்கே வாகுடனே வதிசயமொன் றிருக்கலாச்சே

விளக்கவுரை :


3625. இருந்ததொரு வதிசயத்தை கண்டாரப்பா எழிலான யூகிமுனி சித்தர்தாமும்
பொருந்தவே மலையோரம் சமாதிகண்டு பொங்கமுடன் தானிருக்கும் காலந்தன்னில்
திருந்தமுடன் சமாதிபுரம் சத்தம்கேட்டு திடுக்கிட்டு மெய்மறந்து நிற்கும்போது
அருந்துதி போல்ஜோதியொன்று காணலாச்சு அப்போது சித்தொளிவைக் கண்டார்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3616 - 3620 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3616. கோடியாம் இருகோடி வெகுநாள்காலம் கொற்றவனார் சமாதிதனிலிருந்ததுண்டு
நீடியே சிலகாலமிருந்துமேதான் நீதியுடன் பூமிதனிலெழுந்ததுண்டு
தேடியே அனேகம்பேர் சித்துதாமும் தெளிவான சிவவாக்கிய சித்துதம்மை
கூடியே கூட்டமிட்டு வதிகஞ்சொல்லி குவலயத்தில் சித்தரெல்லாம் மதிப்பிட்டாரே

விளக்கவுரை :


3617. மதிக்கவே சிவவாக்கிய சித்துதாமும் மார்க்கமுடன் மண்மீதிலெழுந்தபின்பு
துதிக்கவே பலபேரும் அஞ்சலித்து துறையுடனே மூன்றுமுறை சமாதிசென்று
கதிக்கவே யவர்மனது துடிக்கக்கூறி காசினியில் சமாதிதன்னில் பின்னுஞ்சென்றார்
பதிக்கவே சிலகாலம் சமாதியிருந்து பட்சமுடன் பின்னுமல்லோ எழுந்தார்பாரே 

விளக்கவுரை :

[ads-post]

3618. பாரேதான் சிவவாக்கிய சித்துதாமும் பாருலகில் சித்தனாய்ப் பிறந்துமென்ன
சீரேதான் சமாதிதனில் போயுமென்ன சிறப்புடனே யங்கிருந்து வந்துமென்ன
நேரேதான் காயாதிகற்பங்கொண்டு நேர்மையுடன் பூவுலகில் இருந்துமென்ன
தீரேதான் சித்தர்முனி கூட்டம்யாவும் திறமான சித்தனென்று சொன்னார்பாரே

விளக்கவுரை :


3619. சொன்னாரே சிவவாக்கியர் வல்லபம்போல் தொல்லுலகில் யாரேனுமிருந்ததுண்டோ
மன்னாகேள் சிவவாக்கிய சித்துதம்மை மானிலத்தில் மதிப்பார் ரிஷிகள்தாமும்
பன்னவே சிவவாக்கிய நாதர்தம்மை பட்சமுடன் அஞ்சலிகள்மிகவுஞ்செய்தார்
என்னவே நாதாந்தசித்துதாமும் எழிலான பூமிதன்னில் பிறந்தார்பாரே

விளக்கவுரை :


3620. இறந்தாரே கற்பாதிகற்பங்கொண்ட எழிலான சித்துமுனிநாதர்தாமும்
மறந்தாரே தன்தேகம் மண்ணிலப்பா மானிலத்தில் அவர்தேகம் மண்ணாய்ப்போச்சு
துறந்தாரே சகலகலைக் கியானமெல்லாம் துப்புரவாய்த் தானறிந்துமாண்டார்தாமும்
சிறந்ததொரு சிவவாக்கிய தேகந்தானும் சீரழிந்து மண்தனிலே மக்கலாச்சே  

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3611 - 3615 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3611. இல்லையே யின்னமொரு மார்க்கங்கேளு எழிலான சீனபதி பக்கந்தன்னில்
கொள்ளவே கோடானகோடி சூழ்ந்தகொடுந்தவசி தில்லைவனம் அங்கொன்றுண்டு
எல்லைநகர் சுற்றிலுமே காணார்தாமும் எழிலான வோடைகளும் நதிகளுண்டு
புல்லவே ஐராவதங்கள்போல புகழான மலையுண்டு குகைகளுண்டே

விளக்கவுரை :


3612. உண்டான மல்லிகார் சனையொன்றுண்டு வுத்தமனே ரிஷிக்கூட்டம் முனிவர்சஇத்தர்
திண்டான கானாறுமத்திபத்தில் திறளான வாய்க்கால் மண்டபந்தான்
வண்டுடனே கூட்டங்கள் கலந்துமெத்த வாகான மண்டபத்தைச் சுற்றியேதான்
திண்டுபோல் குளவிகளும் ஓடிவந்து திரளான கூட்டமதை சேர்க்கொண்ணாதே

விளக்கவுரை :

[ads-post]

3613. ஒண்ணாது ரிஷிகூட்டம் முனிகள்கூட்டம் வுத்தமனார் சிவவாக்கியர் சித்தர்பக்கல்
கண்ணவிந்த பேர்களுக்கோ ருண்டல்போல கைக்குதவியாயிருந்தார் சித்தரெல்லாம்
நண்ணமுடன் ஆயக்கால் பக்கல்நின்று நளினமுடன் சிவவாக்கியர்சித்தருக்கு
வண்ணமுடன் சோடவுபசாரமெத்த வாகுடனே செய்துமல்லோ யிருந்தார்பாரே   

விளக்கவுரை :


3614. இருந்தாரே வெகுகோடிகாலமப்பா எழிலாக சிவவாக்கியசித்துதாமும்
பொருந்தமுடன் சீஷவர்க்கமார்க்கத்தோர்க்கு பொங்கமுடன் தானுரைத்த வதிசயங்கேள்
திருந்தமுடன் தேகமது கற்றூணாகும் தெளிவான சித்தர்முனி கேளுமென்று
குருந்தமாம் தன்னருகில் பக்கல்சென்று கூறினார் வுபதேசங்கூறினாரே

விளக்கவுரை :


3615. கூறினார் சிலகாலம் சமாதிதன்னில் குவலயத்தையான்மறந்து இருப்பேனென்று
தேறியதோர் சித்தர்முனிரிஷிகளுக்கு தேற்றமுடன் கூறியதோர் வண்ணங்கேளிர்
பீறியதோர் மூன்றுயுகம் இருப்பேனென்று மேன்மையுடன் தானுரைத்து சமாதிதன்னில்
சீறியே தானிருந்து சித்தர்தாமும் சிறப்புடனே தாமிருந்தார் கோடியாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3606 - 3610 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3606. பொய்யாகப் பிடாரனவன் பாம்புதன்னை பொங்கமுடன் ஆட்டிவைத்த கதையைப்போல
மெய்யாக ஸ்ரீராமர் அனுமார்தன்னை மேனமையுடன் கைப்பழக்கம் செய்திருப்பார்
கையுடனே ஆயுதங்கள் தடிகொடுத்து காசினியில் யுத்தமது பழக்கஞ்செய்து  
பையவே வானரத்தை வசமதாக்கி பாருலகில் பழக்கமது செய்தார்காணே

விளக்கவுரை :


3607. காணவே யுலகமதில் இருந்தோருண்டு காசினியி லொருவருந்தா னிருந்ததில்லை
பூணவே பூதலத்தில் பொய்யேவாழ்வு புகழான மெய்வாழ்வு யாதொன்றில்லை
தோணவே தொல்லுலகில் எல்லாமாண்டார் தோற்றமுடன் தேகமது மண்ணாய்ப்போச்சு
வேணவே கற்பாதி கற்பங்கொண்டும் விண்ணுலகில் மடிந்ததுவும் மெய்யுமாச்சே 

விளக்கவுரை :

[ads-post]

3608. ஆச்சப்பா காணவென்றா லொன்றுமில்லை அப்பனே கோடானகோடிசெம்பொன்
மூச்சப்பா தேகமதை வருந்தியல்லோ முனையான கோடிபொருள் படைத்துமென்ன
பேச்சப்பா பேசுமுன்னே வாசியோகம் பேரான மகத்துவங்கள் கொண்டுமென்ன
பாச்சலுடன் கூடுவிட்டு கூடுபாய்ந்து பாருலகில் இருந்தாலும் ஒன்றுங்காணே

விளக்கவுரை :


3609. ஒன்றுமே காணாமல் வுடலாவிதன்னை ஒழுக்கமுடன் கருவிகரணாதியெல்லாம்
சென்றுமே நவத்துவாரங்களெல்லாம் சேகரமாய்த் தானடைத்து இருந்துமென்ன
கன்றுதான் பால்தேடித் தாயைக்கண்டகதையைப்போல வாச்சுதுபாருள்வாழ்வு
வென்றுமே யுபவாசமிருந்துமென்ன வேதாந்தக் கற்பமதைக் கொண்டார்பாரே

விளக்கவுரை :


3610. கொண்டுமே காயாதிகற்பந்தன்னை குவலயத்தில் கோடிவரையுண்டுமென்ன
பண்டான மேனியது பாழாய்ப்போகும் பாருலகில் உயிர்தனையே காண்பதில்லை
அண்டர்முனி ராட்சதர்கள் எவரானாலும் அவனிதனிலிருந்தவரும் மெய்யோ சொல்வீர்
கண்டபடி சாஸ்திரங்கள் மெய்போல்கூறி காசினியில் ஒருவருந்தானில்லைதானே

விளக்கவுரை :


Powered by Blogger.