3621. ஆச்சுதப்பா தேகமது மண்ணாய்ப்போச்சு
அவனியிலே யிருந்தவர்கள் யாருமில்லை
பாச்சலுடன் பிரிதீவுதான்
மண்ணாய்ப்போச்சு பாங்கான தேகமது நிலைநில்லாது
மாச்சலென்ற வாழ்வதுவு
மிவ்வளவேயாச்சு மானிலத்தில் வாத்துமமும் பிரிந்துபோச்சு
ஏச்சலென்ற பிரிதீவா
மண்கூறாச்சு எல்லாரு மிப்படியே போகலாச்சே
விளக்கவுரை :
3622. போகலா மின்னமொரு
மார்க்கம்பாரு பூதலத்தி லதிசயங்கள் இன்னஞ்சொல்வேன்
வேகமுடன் சித்தர்களில்
ஒருவனப்பாவுலகுதனிலிருந்தாரே யூகிதாமும்
சோகமுடன் சமுசார
வாழ்க்கைதன்னில் செருக்குடனே வெகுகால மிருந்தாரப்பா
சாகமுடன் ஜமதக்கினி
முனிவருக்கும் சார்பான திரனாக்கிய முனிவர்தாமே
விளக்கவுரை :
[ads-post]
3623. தாமான முனிவருக்கு
குருவேயாகும் தன்மையுள்ள குருவினது கீர்த்திதன்னை
கோமானாங்
காலாங்கிநாதர்தாமும் கொப்பெனவே யடியேனும் குரைத்ததுண்டு
நாமான மாகவல்லோ
யறிந்தமட்டும் நாதாக்கள் வரலாறை நாமுரைப்போம்
தீமானமில்லாமல்
அடியேன்தானும் திறமுடனே சொல்லுகிறேன் பண்பாய்க்கேளே
விளக்கவுரை :
3624. பண்பான யூகிமுனி
யென்போர்தாமும் பாருலகில் தட்சணப்பிரவேசத்தில்
மணபான மலைவளம் சுத்தும்போது
கண்டாரே வராககிரி யென்றமேரு
தின்பான மலைவளத்தை
சுற்றியேதான் திரமுடன்நடுமத்தி காடதன்னில்
வன்பான குத்துக்கல்
கண்டாரங்கே வாகுடனே வதிசயமொன் றிருக்கலாச்சே
விளக்கவுரை :
3625. இருந்ததொரு வதிசயத்தை கண்டாரப்பா எழிலான யூகிமுனி சித்தர்தாமும்
பொருந்தவே மலையோரம்
சமாதிகண்டு பொங்கமுடன் தானிருக்கும் காலந்தன்னில்
திருந்தமுடன் சமாதிபுரம்
சத்தம்கேட்டு திடுக்கிட்டு மெய்மறந்து நிற்கும்போது
அருந்துதி போல்ஜோதியொன்று
காணலாச்சு அப்போது சித்தொளிவைக் கண்டார்பாரே
விளக்கவுரை :