3616. கோடியாம் இருகோடி
வெகுநாள்காலம் கொற்றவனார் சமாதிதனிலிருந்ததுண்டு
நீடியே சிலகாலமிருந்துமேதான்
நீதியுடன் பூமிதனிலெழுந்ததுண்டு
தேடியே அனேகம்பேர்
சித்துதாமும் தெளிவான சிவவாக்கிய சித்துதம்மை
கூடியே கூட்டமிட்டு
வதிகஞ்சொல்லி குவலயத்தில் சித்தரெல்லாம் மதிப்பிட்டாரே
விளக்கவுரை :
3617. மதிக்கவே சிவவாக்கிய சித்துதாமும் மார்க்கமுடன் மண்மீதிலெழுந்தபின்பு
துதிக்கவே பலபேரும்
அஞ்சலித்து துறையுடனே மூன்றுமுறை சமாதிசென்று
கதிக்கவே யவர்மனது
துடிக்கக்கூறி காசினியில் சமாதிதன்னில் பின்னுஞ்சென்றார்
பதிக்கவே சிலகாலம்
சமாதியிருந்து பட்சமுடன் பின்னுமல்லோ எழுந்தார்பாரே
விளக்கவுரை :
[ads-post]
3618. பாரேதான் சிவவாக்கிய
சித்துதாமும் பாருலகில் சித்தனாய்ப் பிறந்துமென்ன
சீரேதான் சமாதிதனில்
போயுமென்ன சிறப்புடனே யங்கிருந்து வந்துமென்ன
நேரேதான் காயாதிகற்பங்கொண்டு
நேர்மையுடன் பூவுலகில் இருந்துமென்ன
தீரேதான் சித்தர்முனி
கூட்டம்யாவும் திறமான சித்தனென்று சொன்னார்பாரே
விளக்கவுரை :
3619. சொன்னாரே சிவவாக்கியர்
வல்லபம்போல் தொல்லுலகில் யாரேனுமிருந்ததுண்டோ
மன்னாகேள் சிவவாக்கிய
சித்துதம்மை மானிலத்தில் மதிப்பார் ரிஷிகள்தாமும்
பன்னவே சிவவாக்கிய
நாதர்தம்மை பட்சமுடன் அஞ்சலிகள்மிகவுஞ்செய்தார்
என்னவே நாதாந்தசித்துதாமும்
எழிலான பூமிதன்னில் பிறந்தார்பாரே
விளக்கவுரை :
3620. இறந்தாரே கற்பாதிகற்பங்கொண்ட
எழிலான சித்துமுனிநாதர்தாமும்
மறந்தாரே தன்தேகம்
மண்ணிலப்பா மானிலத்தில் அவர்தேகம் மண்ணாய்ப்போச்சு
துறந்தாரே சகலகலைக்
கியானமெல்லாம் துப்புரவாய்த் தானறிந்துமாண்டார்தாமும்
சிறந்ததொரு சிவவாக்கிய
தேகந்தானும் சீரழிந்து மண்தனிலே மக்கலாச்சே
விளக்கவுரை :