3626. கண்டாரே சித்தொளிவைக்
கண்டபோது கண்காணா ஜோதிமயம்மென்னசொல்வோம்
அண்டசராசரங்களெல்லாம்
கிடுகிடுத்து அங்ஙனவே ஒளிதனிலே மயங்கிபோனார்
தெண்டமுடன்
கண்திறந்துபார்க்கும்போது தெளிவான ஸ்ரீசம்பாரனையுமப்பா
பாண்டுமிகப்பிரகாயந்தான்
பாரினிலே தோற்றமது காணலாச்சே
விளக்கவுரை :
3627. காணவே யூகிமுனி சித்துபாலன்
கண்டாரே ஸ்ரீசம்பாரனையர்தன்னை
தோணவே யவர்பாதம்
தொட்டுமேதான் தொல்லுலகில் கீர்த்தியுடன் அடிபணிந்து
வேணதொரு வரமெனக்குத்
தருகவென்று விருப்பமுடன் அஞ்சலிகள் செய்துகொண்டார்
பூணவே ரிஷியாரு
முனியாருக்குப் புகழாக ஞானோபதேசம் செய்தார்பாரே
விளக்கவுரை :
[ads-post]
3628. பாரேதான் ஞானோபதேசம்பெற்று
பாலகனும் சமாதிக்கு முன்னதாக
கூரேதான்
சிலகாலமிருக்கவென்று கொற்றவனும் வுறுதியது மிகவுமாகி
தேரேதான் லட்சணங்கள்
விதியேற்பாடு தெளிவான முறையோடு சமாதிக்கேக
நேரேதான் யூகிமுனி
சித்துதாமும் நெடுங்கால சமாதிதனி லிருந்தார்தாமே
விளக்கவுரை :
3629. இருக்கவே யூகிமுனி
சிலதுகாலம் எண்ணமுற்று சமாதிக்குப்போகும்போது
உருக்கலென்ற கல்லின்மேல்
வரைந்தரூபம் வுத்தமனே சொல்லுகிறேன் மைந்தாகேளு
பொருக்கவே சிலகாலம்
சமாதிருந்து புவிமீதில்வரும்போது வடையாளந்தான்
கருக்கலாய் பாலிரவு
மிரண்டுமொன்றாய் பாருலகமிருக்குமென்று எழுதலாச்சே
விளக்கவுரை :
3630. எழுதவே சீஷவர்க்கந்
தன்னைக்கேட்டு ஏற்றமுடன் சமாதிதனி லருகிருந்தார்
தொழுதுமே
சிலகாலமிருந்தாரங்கே தோற்றமுடன் சப்தமது கேட்கலாச்சு
பழுதுபடா தேகமது
என்னசொல்வேன் பாரினிலே வெகுகால மிருந்துமேதான்
விழுதுபோல் ரோமங்கள்
மிகவளர்ந்து விருப்பமுடன் மேதினியில் வந்தார்காணே
விளக்கவுரை :