3631. காணவே வதிசயங்கள்
சொல்லியேதான் காசினியில் வெளிப்பட்டார் யூகிதாமும்
பூணவே காயகற்பமுண்டுமல்லோ
புகழாகச் சமாதிதனிலிருந்துவந்தார்
வேணபடி வுபசாரமதிகமாகி
மேதினியில் தாமிருந்தார்கோடிகாலம்
தோணவே கூடுவிட்டு
கூடுபாய்ந்தார் தோறாமல் தேகமது வேறாய்த்தானே
விளக்கவுரை :
3632. வேறாகத் தானிருந்த
வன்மைசொல்வேன் வேண்டியே கைவேறாய்க் கால்வேறாய்
நேறாக வுடல்வேறாய் தலைவேறாய்
நேர்மையுடன் பூமிதனிலிருந்துதித்து
சீராக லோகமதில்
அனேகங்கூத்துகள் சிறப்புடனே யாடினதுமெத்தவுண்டு
பாராமல் கேட்டவரும்
பார்த்தோருண்டு பாரினிலே வதிசயங்கள் மெத்ததானே
விளக்கவுரை :
[ads-post]
3633. தானான வதிசயங்கள் சாற்றக்கேளும் தகமையுள்ள குருபரனார் வித்தைதேடி
தேனான நூல்கள்முதல்
யாவுந்தேர்ந்து தெளிவறவே யோகமுதல் வுளவுகற்று
கோனானயெனதையர் காலாங்கிநாதர்
குருபரனார் அருளுடனே பாஷங்கொண்டார்
வேனான வெகுசித்து
சொரூபசித்து வெளியான நாதவொளி யதீதமாமே
விளக்கவுரை :
3634. அதீதமாம் வதிசயங்கள்
மெத்தசெய்து அவனியிலே யிருந்தவர்கள் வுண்டோசொல்லும்
தீதமுடன் மண்கூறாய்ப்
போனாரப்பா துரைராஜர் வுலகுதனி லிருந்ததுண்டோ
கதீதமுள்ள தேகமது
நிலைநில்லாது காசினியில் யாரேனும் இருப்பாருண்டோ
பதீதமுள்ள பொய்வாழ்வு யெனலாம்
பாரினிலே யெல்லாமிப்படியேபாரே
விளக்கவுரை :
3635. பார்க்கையிலே தேகமது
நிலைநில்லாது பார்லோகமெல்லாம் இப்படிதானாகும்
தீர்க்கமுடன் தேகத்தை
நம்பியல்லோ திறமைகெட்டு மாண்டவர்கள்கோடாகோடி
ஊக்கமுடன் சித்ததமைக்
கடவுளென்று உத்தமர்கள் சோடித்தார் பலருமப்பா
நோக்கமலம் வீற்றிருக்கும்
வாணிபாதம் நேர்மையுடன் பாடிவைஃத்தகாண்டமாமே
விளக்கவுரை :