3636. காண்டமா மிந்நூல்தான்
சத்தகாண்டம் கருவான சித்தருட மரபுமார்க்கம்
ஆண்டவனார் நாதாந்த
சித்தனென்றும் வவனியிலே பொய்ஞானி மெய்ஞானியென்றும்
தூண்டியே
கருவிகாணாதியென்றும் துரையான சமாதியுட பீடந்தானும்
வேண்டியே சித்தருட
சொரூபம்யாவும் வினையமுடன் பாடினதோர் காண்டமாமே
விளக்கவுரை :
3637. காண்டமா மிக்காண்டம்
நான்காம்காண்டம் காசினியிலி லிருந்ததொரு சித்துதாமும்
வேண்டியதோர் அற்புதங்கள்
மகிமையாவும் மேன்மையுடன் பாடிவைத்தேன் இக்காண்டத்துள்
தாண்டவம் இன்னம்வெகு
சித்துமார்க்கம் சாற்றுகிறேன் காலாங்கி நாதர்தம்மால்
மாண்டதோர் மானிடர்கள்
சித்துதாமும் மார்க்கமுடன் அறியலாமிதற்குள்தானே
விளக்கவுரை :
[ads-post]
3638. மானான யின்னமொரு
மார்க்கம்பாரு தன்மையுள்ள என்சீஷன் ஒருவனப்பா
தேனான புலிப்பாணி
யென்னுஞ்சித்தன் தேசத்தில் வேங்கையதை வாகனமாக்கி
கோனான எனதையர் காலாங்கிநாதர்
கொற்றவனார் தன்னிடத்தில் சென்றுமேதான்
மானான வுபதேசம்
பெற்றுக்கொண்டு மானிலத்தில் செய்ததொரு வன்மைபாரே
விளக்கவுரை :
3639. வண்மையுடன் வெகுகாலம்
லோகந்தன்னில் வளமையுடன் வேங்கையின் மேலேறிக்கொண்டு
திண்மையுடன் வலசாரியா
இடசாரியாக திறமுடனே சுத்திவந்த சித்தனப்பா
கண்மையாய் சிலகாலம்
வுபதேசம்பெற்று காலாங்கிநாதருட கிருபையாலே
உண்மையாய் சமாதிக்கு
ஏகவென்று வுத்தமனும் மனவுறுதி கொண்டான்காணே
விளக்கவுரை :
3640. காணவே காடுமலை சுத்திவந்து
கடிதான கிக்கிந்தா மலையினோரம்
பூணவே சமாதிக்கு இடமுந்தேட
புண்ணியனார் போகுமந்த காலந்தன்னில்
வேணபடி சித்துவொரு
சமாதிகண்டார் விருப்பமுடன் சமாதிக்கு வருகேசென்று
சாணளவு தூரமது நிற்கும்போது
சப்தமொன்று கேட்கலுற்றார் சித்துபாரே
விளக்கவுரை :