3641. பாரேதான் சித்தொளிவு சப்தம்கேட்டு பாருலகில் மெத்தமதிசயந்தானப்பா
நேரேதான் சமாதிக்கு
முன்னேநிற்க நேறான சமாதியது திறந்துமங்கே
சீரேதான் நாதாந்த
சித்துதாமும் சிறப்புடனே வெளிப்பட்டார் ஜோதியாக
கூரேதான்
யவர்தன்னைக்கண்டபோது கொற்றவனார் திடுக்கிட்டு பயந்திட்டாரே
விளக்கவுரை :
3642. பயந்திட்ட புலிப்பாணி
முனிவர்தாமும் பாரினிலே சித்தொளிவைக்கண்டபோது
நயந்திட்ட நமஸ்கார
வஞ்சலிகள்செய்து நலமுடனே சித்தர்தாமும் எதிரேநின்று
சயந்திட்ட மனதோடு
வுபதேசங்கள் சாங்கமுடன் பெறுவதற்கு மனதிலெண்ணி
வயங்கவே சித்தருகில்
வந்துநின்று வன்மையுடன் கேள்விக்கு முன்னின்றாரே
விளக்கவுரை :
[ads-post]
3643. முன்னின்ற புலிப்பாணி
தன்னைநோக்கி முன்யுகத்தில் சமாதிதனிலிருந்த சித்து
தன்முகமாம் நின்றதொரு
புலிப்பாணிதம்மை தகமையுடன் சித்துமுனி யாரென்றென்ன
சொன்னமொழிகள் தனையேகேட்ட
பாணிசொரூபமென்ற சித்துக்குக்கூறலுற்றார்
மன்னவனார் முன்னாளில்
விறந்தசித்து கைலாசபோகரிஷி சீஷனானே
விளக்கவுரை :
3644. நானேதான் போகரிஷி
சீஷனென்றால் நன்மையுடன் சித்துமுனி மனதுவந்து
தானேதான் புலிப்பாணி
தம்மைநோக்கி சட்டமுடன் திருவாக்கு கூறலுற்றார்
வானோர்கள் துதிக்குமந்த
போகர்தன்னின் வளமான சீஷனென்று சொன்னதாலே
ஞானோபதேசமது செய்வேனென்று
வன்மையுடன் தாமுரைத்தார் சித்துதாமே
விளக்கவுரை :
3645. தாமான சித்தொளிவு
நாதர்தாமும் தன்மையுடன் புலிப்பாணிநாதருக்கு
வாமேதான் சொன்னபடி
உபசாரங்கள் நலமுடனே செய்துமல்லோ ஆசிர்மித்து
போமேதான் முன்யுகத்தில்
பிரம்மாவுக்கும் பொங்கமுடன் வரசனுக்கு நடந்தசாபம்
வேமேதான் மேதினியில்
எல்லாருந்தான் எழிலாகக் கண்டிருப்பார் முனிவர்தாமே
விளக்கவுரை :