போகர் சப்தகாண்டம் 3681 - 3685 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3681. செய்யவே தந்தேனான் சுவாமிநாதா ஜெகதலத்தில் உந்தனுட கீர்த்திகண்டு
எய்யதொரு சமாதிபுரம் யாகம்செய்தேன் வுத்தமனே எந்தனுக்கு கிருபைசெய்து
பெய்யவே மழையதனை வருட்சித்தேதான் பேரான வுலகுதனில் கீர்த்தியோங்க
தய்யதொரு கிருபையினா லுந்தனுக்கு துரைராஜ சுந்தரனே வரமீவாயே   

விளக்கவுரை :


3682. வரமெனக்குக் கொடுத்தல்லோ புண்ணியவானே வரமுடனே ஞானோபதேசஞ்செய்து
புரம்விட்டு எந்தனுட பதிபோகத்தான் பொங்கமுடன் வாழ்த்துதல் கூறுமென்ன
கரமெடுத்து கைபிடித்து கொங்கணார்க்கு கர்த்தாவாம் ரிஷியாரும் விடைகொடுத்து
தரமுடனே யனுப்பிவிட்டார் சாபந்தீர்ந்து சாங்கமுடன் கொங்கணரும் வந்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

3683. வந்திட்ட கொங்கணரைக் கௌதமரும்பார்த்து வண்மையுடன் ரெண்டாவது யாகஞ்செய்து
தந்திட்ட வரமதுவும் பெற்றுவந்த தகமையுள்ள கொங்கணர்க்குப் பின்னுஞ்சொல்வார்
முந்திட்ட சமாதியது சிலதுகாலம் முதன்மையுடன் தாமிருந்தீர் மைந்தாநீயும்   
பந்திட்ட மாகவல்லோ வுலகுதன்னில் பரிவுடனே சிகால மிருவென்றாரே

விளக்கவுரை :


3684. என்றுமே கோடான வுற்பதங்கள் எழிலாகக் கற்பித்தார் கொங்கணர்க்கு   
வென்றிடவே சித்தர்முனி காணாப்போக்கு வேணதொரு வதிசயங்கள் யாவுஞ்சொல்லி
துன்றிடவே பிரணாய கற்பந்தன்னை துறையோடும் முறையோடும் சொல்லிப்பின்பு
நன்றுடனே தேகமதைப் போக்கடிக்க நல்லவழியும் உபாயமது வருள்செய்தாரே

விளக்கவுரை :


3685. செய்யவே கொங்கணரு முனிவர்தாமும் செயலான பாக்கியமும் ஆசையற்று
பையவே உலகமதில் கற்பகோடிகாலம் பண்புடன்தானிருந்தாலு மென்னலாபம்
மெய்யதுவும் தானழிந்து போகுமல்லால் மேதினியில் யாதொன்றும் கண்டதில்லை
எய்யவே தேகமது நில்லாது யென்று நிலையவே சமாதிக்கு இறங்கிட்டாரே   

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3676 - 3680 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3676. ஆச்சப்பா சாபமது பெற்றுக்கொண்டு அப்பனே தில்லைவனம் போகவென்றார்
பாச்சலுடன் கொங்கணனார் முனிவர்தாமும் பரமரிஷியாரிடஞ் சாபம்பெற்று
வாச்சுவந்தானழிந்து வனமேயேகி வந்துவிட்டார் தில்லைவனம் நாட்டகத்தை
பாச்சலுடன் சிலகாலமங்கிருந்து மானிலத்தில் கொங்கணரும் ரிஷியானாரே

விளக்கவுரை :


3677. ஆனாரே கொங்கணனார் முனிவர்தாமும் அங்ஙனவே ரிஷிபோலே யிருந்துகொண்டு
போனாரே தவயோக நிலையில்நின்று பொங்கமுடன் யாகமது செய்யும்போது
ஞானோபதேசமது பெற்றிருக்கும் நலமான சித்தொருவர் அங்கிருந்தார்
தேனோடு தினைமாவும் பொசித்திருந்து தீரமுடன் யாகமதுக் கெதிர்நின்றாரே

விளக்கவுரை :

[ads-post]

3678. எதிர்நின்ற கொங்கணவர் தன்னைப்பார்த்து எழிலான ரிஷியாருங் கூறலுற்றார்
சதுருடனே யாகத்தைப் பார்த்துமேதான் சட்டமுடன் ரிஷியாருஞ் சொன்னதென்றால்
கதிரோன்போல் யாகமதுசெய்யுந்தீரா கனமான கொங்கணbரெ கேளுமென்றார்
மதிபோன்ற யாகமது செய்வதென்ன மன்னவனே எந்தனுக்கு வுரையென்றாரே

விளக்கவுரை :


3679. உறையென்ற போதையிலே முனிவர்தாமும் ஓகோகோ நாதாந்த சித்துவென்று
சிறையிட்ட சாபமது தீர்க்கவென்று சித்தொளிவு வந்தாரோயென்றுசொல்லி
முறையிட்டு அவரிடத்தில் குறைகள்சொல்லி முத்திபெரும் வழிதனையே அடையவென்றும்
குறையிட்டு கேட்பதற்கு மனதிலெண்ணி கொப்பெனவே கொங்கணருங்கூறுவாரே

விளக்கவுரை :


3680. கூறுவார் கொங்கணரும் வார்த்தைசொல்வார் கோடிசூரியப் பிரகாசமானதேவர்
மாறுடைய வெந்தனுக்கு சாபம்நேர்ந்து மானிலத்தில் கௌதமனார் ரிஷியார்தம்மால்
வேறுவினையாகவல்லோ வடியேனுக்கு வேகமுடன் சாபமதுநேர்ந்ததாலே
தஊறில்லா ருந்தனுட வாசீர்மத்தில் துப்புறவாய் யாகமது செயவந்தேனே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3671 - 3675 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3671. வந்திட்ட சித்தருக்கு வுபதேசங்கேள் வளமையுடன் தாமுரைத்தார் ரிஷியார்தாமும்
தந்திட்ட ஞானோபதேசத்தோடு தாரிணியில் சமாதிக்கு இடமுந்தந்தார்
நொந்திட்ட கொங்கணரும் விடையும்பெற்று நோக்கமுடன் சமாதிக்குப் போகும்போது
முந்திட்ட ரிஷியாரும் கூறும்வண்ணம் முதன்மையாய் கொங்கணரும் களிகொண்டாரே

விளக்கவுரை :


3672. களிகொண்ட கொங்கணனார் முனிவர்தாமும் கௌதமனார் ரிஷியிடத்தில் சாபம்நஈக்கி
யளிதனையே நிவர்த்திசெய்து முனிவர்தாமும் பட்சமுடன் சமாதிக்குச் சென்றபோது
வளியுடனே கௌதமனார் ரிஷியார்தாமும் வாக்குரைத்தார் சிலகாலமிருக்கவென்று
துளியுடனே மழைமாரி பொழிந்துமேதான் துப்புரவாய் சமாதியது மூடலாச்சே

விளக்கவுரை :

[ads-post]

3673. ஆச்சப்பா சமாதியது மூடிக்கொண்டு அங்ஙனவே கொங்கணரு முனிவர்தாமும்
மூச்சடங்கி சிலகால மிருந்தாரங்கே மூதுலகோர் தானடுங்க வந்தார்பின்னும்
பேச்சடங்கி பனிரெண்டு வருடகாலம் பேசாமல் தானிருந்த சித்துவப்பா
மாச்சலுடன் சமாதியது தான்வெடித்து மார்க்கமுடன் கொங்கணரும் வந்தார்பாரே

விளக்கவுரை :


3674. பாரேதான் கொங்கணவர் முனிவர்தாமும் பாரினிலே வந்துமல்லோ யாகஞ்செய்தார்
நேரேதான் யாகமது செய்யும்போது நேரான கௌதமனார் ரிஷியார்தாமும் 
சீரேதான் யாகமதுக் கெதிரேநின்று செப்புவார் கொங்கணர்க்கு உபதேசங்கள்
தீரேதான் கொங்கணவர் தன்னைப்பார்த்து தீரமுடன் சாபமது செப்புவாரே

விளக்கவுரை :


3675. செப்புவார் கொங்கணவர் முனிவர்தன்னை தீரமுடன் யாகமது செய்ததாலே
எப்படிநீ யாகமதுசெய்யலாகும் என்போலே ரிஷியாரும் செய்யும்பாகம்
ஒப்புடனே யாகமது செய்வதற்கு யுத்தமனே நீர்கொண்ட யுறுதியென்ன
தப்பான யாகமது செய்ததாலே தாரிணியில் உந்தனுக்கு சாபமாச்சே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3666 - 3670 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3666. கேட்டவுட னடியேனுங் கிடுகிடுத்து கிருபையுடன் சமாதியுடன் அருகில்வந்து
நீட்டமுடன் சமாதினில் இறங்கவென்று நீதியுடன் தடாகமதில் மூழ்கியேதான்
வாட்டமுடன் புட்பமலர் தானெடுத்து வளம்பெறவே சமாதியிடம் வந்தேன்யானும்
தேட்டமுடன் மனோன்மணியைத்தா நினைத்து தெளிவாக வட்சரத்தை யோதினேனே

விளக்கவுரை :


3667. ஓதவே சமாதியின்மேல் பாறைதானும் வுத்தமரே வெடிக்கவல்லோ தம்மைக்கண்டேன்
போதமுள்ள ரிஷியாரே யடியேனுக்கு பொங்கமுடன் காட்சிதர வேண்டுமென்று
நீதமுடன் கௌதமதிரிஷியர்தாமும் நீதியுள்ள கொங்கணனார் பாலனுக்கு
வேதமுதலாகமங்கள் விரிநூல்யாவும் விருப்பமுடன் போதித்தார் ரிஷியார்தாமே

விளக்கவுரை :

[ads-post]

3668. தாமான கௌதமனார் ரிஷியார்தாமும் சாங்கமுடன் கொங்கணர்க்கு கூறல்வண்ணம்
கோமானாம் ராஜாதிராஜர்தாமும் குவலயத்தில் கோடிபேரிருந்தாரப்பா
பூமான்களெத்தனையோ ஞானங்கற்று பொன்னுலகு நாட்டுக்குப் போனாரையா
சாமான்னியமானதொரு கொங்கணாரே சமாதிக்குட் சென்றாலும் ஒன்றுங்காணே

விளக்கவுரை :


3669. நாணவே யுலகுதனில் கற்பங்கொண்டு கைலாசமேருவுக்கு மிடமில்லாமல்
பூணவே ஞானசாகரத்தைப்பூண்டு பூவுலகுதன்னிலே இருந்துமென்ன 
வேணபடி கற்பமுறை யுண்டுநீரும் வேதாந்த மனோன்மணியைக் கண்டுமென்ன
தோணவே சமுசாரத்தொல்லைவிட்டு தோராமல் சமாதியிலே ஒன்றுங்காணே

விளக்கவுரை :


3670. ஒன்றுமே யில்லையப்பா வுலகுதனில் உயிரோடே சமாதியிலே இறங்கியென்ன
கன்றுதான் தாய்தேடுங் கதையைப்போல காசினியில் அவரவர்கள் சமாதிதேடி
தென்றிசையில் நதிமலையி லனேகஞ்சித்தர் சீருடனே யிப்படியே சமாதிகொண்டார்
வென்றிடவே கொங்கணரு நீருமிங்கே வேகமுடன் சமாதிக்கு வந்திட்டீரே

விளக்கவுரை :


Powered by Blogger.