3676. ஆச்சப்பா சாபமது
பெற்றுக்கொண்டு அப்பனே தில்லைவனம் போகவென்றார்
பாச்சலுடன் கொங்கணனார்
முனிவர்தாமும் பரமரிஷியாரிடஞ் சாபம்பெற்று
வாச்சுவந்தானழிந்து வனமேயேகி
வந்துவிட்டார் தில்லைவனம் நாட்டகத்தை
பாச்சலுடன்
சிலகாலமங்கிருந்து மானிலத்தில் கொங்கணரும் ரிஷியானாரே
விளக்கவுரை :
3677. ஆனாரே கொங்கணனார்
முனிவர்தாமும் அங்ஙனவே ரிஷிபோலே யிருந்துகொண்டு
போனாரே தவயோக நிலையில்நின்று
பொங்கமுடன் யாகமது செய்யும்போது
ஞானோபதேசமது பெற்றிருக்கும்
நலமான சித்தொருவர் அங்கிருந்தார்
தேனோடு தினைமாவும்
பொசித்திருந்து தீரமுடன் யாகமதுக் கெதிர்நின்றாரே
விளக்கவுரை :
[ads-post]
3678. எதிர்நின்ற கொங்கணவர்
தன்னைப்பார்த்து எழிலான ரிஷியாருங் கூறலுற்றார்
சதுருடனே யாகத்தைப்
பார்த்துமேதான் சட்டமுடன் ரிஷியாருஞ் சொன்னதென்றால்
கதிரோன்போல்
யாகமதுசெய்யுந்தீரா கனமான கொங்கணbரெ கேளுமென்றார்
மதிபோன்ற யாகமது செய்வதென்ன
மன்னவனே எந்தனுக்கு வுரையென்றாரே
விளக்கவுரை :
3679. உறையென்ற போதையிலே முனிவர்தாமும்
ஓகோகோ நாதாந்த சித்துவென்று
சிறையிட்ட சாபமது
தீர்க்கவென்று சித்தொளிவு வந்தாரோயென்றுசொல்லி
முறையிட்டு அவரிடத்தில்
குறைகள்சொல்லி முத்திபெரும் வழிதனையே அடையவென்றும்
குறையிட்டு கேட்பதற்கு
மனதிலெண்ணி கொப்பெனவே கொங்கணருங்கூறுவாரே
விளக்கவுரை :
3680. கூறுவார் கொங்கணரும்
வார்த்தைசொல்வார் கோடிசூரியப் பிரகாசமானதேவர்
மாறுடைய வெந்தனுக்கு
சாபம்நேர்ந்து மானிலத்தில் கௌதமனார் ரிஷியார்தம்மால்
வேறுவினையாகவல்லோ
வடியேனுக்கு வேகமுடன் சாபமதுநேர்ந்ததாலே
தஊறில்லா ருந்தனுட
வாசீர்மத்தில் துப்புறவாய் யாகமது செயவந்தேனே
விளக்கவுரை :