3666. கேட்டவுட னடியேனுங்
கிடுகிடுத்து கிருபையுடன் சமாதியுடன் அருகில்வந்து
நீட்டமுடன் சமாதினில்
இறங்கவென்று நீதியுடன் தடாகமதில் மூழ்கியேதான்
வாட்டமுடன் புட்பமலர்
தானெடுத்து வளம்பெறவே சமாதியிடம் வந்தேன்யானும்
தேட்டமுடன் மனோன்மணியைத்தா
நினைத்து தெளிவாக வட்சரத்தை யோதினேனே
விளக்கவுரை :
3667. ஓதவே சமாதியின்மேல்
பாறைதானும் வுத்தமரே வெடிக்கவல்லோ தம்மைக்கண்டேன்
போதமுள்ள ரிஷியாரே
யடியேனுக்கு பொங்கமுடன் காட்சிதர வேண்டுமென்று
நீதமுடன்
கௌதமதிரிஷியர்தாமும் நீதியுள்ள கொங்கணனார் பாலனுக்கு
வேதமுதலாகமங்கள்
விரிநூல்யாவும் விருப்பமுடன் போதித்தார் ரிஷியார்தாமே
விளக்கவுரை :
[ads-post]
3668. தாமான கௌதமனார்
ரிஷியார்தாமும் சாங்கமுடன் கொங்கணர்க்கு கூறல்வண்ணம்
கோமானாம் ராஜாதிராஜர்தாமும்
குவலயத்தில் கோடிபேரிருந்தாரப்பா
பூமான்களெத்தனையோ ஞானங்கற்று
பொன்னுலகு நாட்டுக்குப் போனாரையா
சாமான்னியமானதொரு கொங்கணாரே
சமாதிக்குட் சென்றாலும் ஒன்றுங்காணே
விளக்கவுரை :
3669. நாணவே யுலகுதனில்
கற்பங்கொண்டு கைலாசமேருவுக்கு மிடமில்லாமல்
பூணவே ஞானசாகரத்தைப்பூண்டு
பூவுலகுதன்னிலே இருந்துமென்ன
வேணபடி கற்பமுறை
யுண்டுநீரும் வேதாந்த மனோன்மணியைக் கண்டுமென்ன
தோணவே சமுசாரத்தொல்லைவிட்டு
தோராமல் சமாதியிலே ஒன்றுங்காணே
விளக்கவுரை :
3670. ஒன்றுமே யில்லையப்பா
வுலகுதனில் உயிரோடே சமாதியிலே இறங்கியென்ன
கன்றுதான் தாய்தேடுங்
கதையைப்போல காசினியில் அவரவர்கள் சமாதிதேடி
தென்றிசையில் நதிமலையி
லனேகஞ்சித்தர் சீருடனே யிப்படியே சமாதிகொண்டார்
வென்றிடவே கொங்கணரு
நீருமிங்கே வேகமுடன் சமாதிக்கு வந்திட்டீரே
விளக்கவுரை :