போகர் சப்தகாண்டம் 3661 - 3665 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3661 - 3665 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3661. நின்றாரே குன்றருகே மலையினோரம் நீடான சுனையுண்டு வுதகமுண்டு
குன்றான மலையோரங் குத்துக்கல்லுண்டு கூரான மண்டபமும ங்கொன்றுண்டு
வன்றான கானாறு தீர்த்தமுண்டு வகையான புலியுதங்கும் விடுதியுண்டு
தன்றான தடாகமது யிருக்கும்பாரு தண்மையுள்ள சமாதியொன்று கண்டார்பாரே

விளக்கவுரை :


3662. பார்த்துமே கொங்கணவர் முனிவர்தாமும் பரிவுடனே சமாதியிட மருகிற்சென்றார்
தீர்த்தமுடன் தடாகமது மூழ்கியேதான் திருப்பணிக்கு புட்பமது கையிலேந்தி
நார்கமலப் பட்டுடுத்தி வினையம்பூண்டு நமஸ்கார மஞ்சலிகள் மிகவுஞ்செய்து
ஏர்க்கமுடன் சமாதிக்கி முன்னேநின்று எழிலான கொங்கணரு மர்ச்சிப்பாரே

விளக்கவுரை :

[ads-post]

3663. அர்ச்சித்து கொங்கணவ முனிவர்தாமும் அஷ்டாங்க பூசையது மிகவுஞ்செய்து
உர்ச்சிதமாய் சிரங்குனிந்து கரங்குவித்து வுற்பனமாம் வட்சரத்தை யோதும்போது
தர்ப்பரனார் கௌதமரிஷியார்தாமும் தண்மையுடன் வுள்ளிருந்து சமாதிதானும்
கற்பதிந்த பாறையது வெடிக்கவேதான் கைலாச கௌதமரும் வெளிவந்தாரே

விளக்கவுரை :


3664. வந்தாரே ஜோதிரிஷி போலேயப்பா மகத்தான கௌதமரிஷியார்தாமும்
சொந்தமுடன் கொங்கணரைச் சீஷனென்று சோர்ந்துமே மனதுவந்து பட்சம்வைத்து
எந்தவிதந் தனிலப்பா யிந்தநாடு எழிலான காவனத்தே வந்ததென்ன
அந்தமுட னெந்தனுக்குச் சொல்லுமென்று அபயாஸ்தம்தான்கொடுத்தார் ரிஷியார்தாமே

விளக்கவுரை :


3665. கொடுத்தாரே வபயமது தந்தபின்பு கொப்பெனவே கொங்கணருங் கூறலுற்றார்
அடுத்தேனே சமாதியிடம் அடியேன்றானும் அய்யனே பள்ளிகொண்ட பாறைமீதில்
படுத்தேனே சடுச்சாம வேளைதன்னில் பராபரியைத்தானினைத்து ஏங்கும்போது
எடுத்ததொரு கோஷ்டங்கள் வாத்தியங்கள் எழிலாகச் செவிதனக்கு கேட்கலாச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar