3656. போனாரே வெகுகோடி
மாந்தர்தாமும் பொங்கமுடன் கொங்கணவர் நூல்கள்தன்னில்
ஆனாரே கருவிகாணாதியெல்லாம்
அப்பனே மறைத்துவைத்தார் என்றுசொல்லி
ஏனோதான் மதிமோசந்தானுமாகி
எழிலான சாஸ்திரத்தில் குற்றஞ்சொன்னார்
மானேகேள் மதிகெட்டு இப்படியே
நூலில் மகாதோஷஞ்சொன்னாரே மாந்தர்காணே
விளக்கவுரை :
3657. காணவே கொங்கணவ சித்துதாமும் கருவான முக்காண்டம் பாடிக்கொண்டு
நாணவே நாதாக்கள்
முனிவர்தாமும் நாணிலத்தில் நடுக்கமுடன் திடுக்கிட்டேங்க
வேணபடி நூலுக்குப்
பலமுங்கூட்டி வேகமுடன் கொண்டுமல்லோ வுருகும்போது
தோணவே மகாமேருதன் னிற்பக்கம்
தொடர்ந்தாரே கொங்கணவ முனிவர்தானே
விளக்கவுரை :
[ads-post]
3658. தானான கொங்கணவ முனிவர்தாமும்
தாக்கான மேருவிடந் தன்னிற்சென்று
மானான மலைபக்கல்
குகையிற்சென்று மயக்கமுடன் சமாதிக்கி யிடமுந்தேட
பானான பரமமுனி மனதிலெண்ணி
பட்சமுடன் சமாதிதனி லிறங்கவென்று
கோனான கொங்கணரும் எண்ணியல்லோ
கொப்பெனவே பாறைமேல் படுத்தார்தானே
விளக்கவுரை :
3659. படுத்துமே பாறையின்மேல்
நித்திரைசங்கம் பரிவாகப் பராபரியைநினைத்துக்கொண்டு
அடுத்துமே சுழுத்தியிலே
சொப்பனமுங்கொண்டு ஆண்டவனார் தேகமதை மறந்துவிட்டு
தொடுத்துமே பூரணத்தை
மனதிலெண்ணி தோற்றாமல் வாசியோகஞ்செய்துகொண்டு
விடுத்துமே நித்திரைகள்
நீங்கியேதான் விருத்தமுடன் கண்விழித்துப் பார்த்தானே
விளக்கவுரை :
3660. பார்க்கையிலே பலபலவாந்
தோற்றங்காணும் பாரினிலே வதிசயங்கள் மிகவாய்த்தோற்றும்
ஏர்க்கையிலே குன்றருகி
சப்தங்காணும் எழிலான வாத்தியங்கள் மிகவேகேட்கும்
தீர்க்கமுடன் தேவதா
கோஷ்டந்தானும் தீரமுடன் செவிதனிலே கேட்கும்பாரு
ஆர்க்கவே கொங்கணரு
மிகவேகேட்டு அப்பனே மதிமயங்கி நின்றார்பாரே
விளக்கவுரை :