3651. இல்லையே சித்துமுனி
பாலன்தானும் எழிலான மண்ணுக்கு இறையேயானார்
அல்லல்மிக பட்டுமல்லோ
அவனிதன்னில் அப்பனே அவருமல்லோ மாண்டுபோனார்
கல்லான தேகமிது
என்றிருந்தார் காசினியில் அவர்தேகம் மண்ணாய்ப்போச்சு
புல்லான புல்லோடே புழுதியாகி
பூதலத்தில் புலிப்பாணி மாண்டார்பாரே
விளக்கவுரை :
3652. பாரேதான் வுலகமிதில்
சித்துயாவும் பாங்காகக் கற்றறிந்து யிருந்துமென்ன
நேரான சிவயோகந்தன்னில்நின்று
நிஷ்டையிலே தானிருந்து பலனுமென்ன
கூரான குறிப்பறிந்து
குவலயத்தில் கொற்றவனே காயகற்பம் கொண்டுமென்ன
வீரான தேகமது
விழலாய்ப்போச்சு விருத்தமுட னிப்படியே மாண்டார்தானே
விளக்கவுரை :
[ads-post]
3653. மாண்டாரே வின்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் மகத்தான சித்தொளியின் வண்மைகேளும்
தாண்டவம்போல் கொங்கணவ
சித்துதாமும் தாரிணியில் ஒருமுனிவர் இருந்தாரப்பா
ஆண்டகையாம் எனதையர்
காலாங்கிநாதர் அவனியிலே சித்தொருவ ரிருந்தாருண்டு
பூண்டமனதுருதியினால்
சித்துதாமும் பொங்கமுடன் பொங்கமுடன் வெகுகால மிருந்தார்தாமே
விளக்கவுரை :
3654. தாமான கொங்கணவமுனிவர்தாமும்
தாரிணியில் சிலநூல்கள் செய்தாரென்றும்
நாமான கொங்கணவர்
முக்காண்டமப்பா நாட்டினிலே செய்துவைத்த தண்மைதன்னை
பாமானமாகவல்லோ பாடிவைத்த
பளிங்கான காண்டமென்னுஞ் சாத்திரத்தை
பூமானகள் எல்லவரும்
பாராமற்றான் புகழாக சாஸ்திரத்தில் மறைப்பென்றாரே
விளக்கவுரை :
3655. மறைந்தாரே கொங்கணவர்
சாஸ்திரத்தை மார்க்கமுடன் கருவெல்லாம் தெரியாமற்றான்
திறப்புடனே கொங்கணவர்
காண்டந்தன்னை தீராத சங்கைபிரமாண்டமென்றார்
முறைப்படியே முழுமக்கள்
பாராமற்றான் முனிசொன்ன நூதைனை சங்கையென்றார்
குறையகற்றி வுட்கருவை
யறிவதற்கு குவலயத்தில் யுத்தியில்லா மதிபோனாரே
விளக்கவுரை :