போகர் சப்தகாண்டம் 3751 - 3755 of 7000 பாடல்கள்
3751. சித்தான சட்டமுனி
நாதர்தாமும் ஜெகஜோதி காயமது வுலகிற்றுன்ன
பத்தியுடன் காயாதி
கற்பங்கொண்ட பாங்கான தேகமது ஜோதிமின்ன
வெத்தியுடன் மேதினியில்
வந்துதாமும் விருப்பமுடன் சீஷர்களை யாசீர்மஇத்து
புத்தியது மிகவாகச்சீஷருக்கு
போதித்தார் சட்டமுனி நாதர்தாமே
விளக்கவுரை :
3752. போதித்த வசரீரிவாக்குதன்னை
பொங்கமுடன் தாள்கேட்டு தாள்பணிந்து
ஆதித்தன் போலுதித்த
சித்துதம்மை அடியார்கள் கூட்டமெல்லாம் சிரங்குனிந்து
சோதித்த சட்டமுனி நாதர்தம்மை
சொரூபமுடன் முன்னின்று வினயங்கேட்க
பேதித்த கைலாசநாதர்தாமும்
பேரான சீஷருக்கு வுறைப்பார்தானே
விளக்கவுரை :
[ads-post]
3753. தானேதான் சீஷவர்க்கந்
தனையழைத்து தகமையுள்ள லேகாவதிசயங்களெல்லாம்
மானேதான் யான்கண்ட
வரைக்குஞ்சொல்வேன் மகத்தான வாழ்வதுவும் பொய்யேவாழ்வு
தேனான சீஷர்களே
யின்னஞ்சொல்வேன் தேகமது வுலகுதனில் நிலைநில்லாது
போனவர்கள் மண்தனிலே
மடிந்தபேர்கள் பொங்கமுடன் பூமிதனில் வருவார்தாமே
விளக்கவுரை :
3754. வருவாரே காயாதி கற்பங்கொண்ட
வரமுடைய ரிஷியாரும் வருவாருண்டோ
குருவான எனதையர்
கடாட்சத்தாலே கொற்றவனே வுபதேசம் பெற்றேன்யானும்
அருளான வுபதேசங் கொண்டதாலே
அவனியிலே மறுபடியும் வந்தேனென்று
திருவான மனோன்மணியாள்
கடாட்சம்பெற்று திரும்பி வந்தேன் மாணாக்காள் என்றிட்டாரே
விளக்கவுரை :
3755. என்றுமே சட்டமுனி
நாதர்தாமும் எழிலாகத்தாமுரைப்பார் சீஷருக்கு
தென்றிசைக்கு சிலகாலம்
போரேனென்று தேர்வேந்த சீஷருக்கு விடையுஞ்சொல்ல
நன்றதென்று சீஷவர்க்க
மாயிரம்பேர் நலமுடனே யாம்கூட வருவோமென்று
அன்றலுடன் பின்தொடர்ந்தார்
மாய்கைவிட்டு அடர்ந்துமே பின்தொடர்ந்தார் சீஷர்தாமே
விளக்கவுரை :