3736. சவமாகி பிணமாகி
மண்ணிற்றானும் சட்டமுடன் சிலகாலமிருந்துமேதான்
தவமொழிந்து காயாதிகற்பமுண்டு
சங்கமுடன் பூவுலகி லிருந்துகொண்டு
பவமகற்றி எந்நாளும்
வுறுதிபூண்டு பாரினிலே சித்தரைப்போல் நியமம்பூண்டு
நிதமுடனே பவமகற்றி
தேகந்தன்னை நிட்சயமாய் மறந்திட்டார் சிலதுபேரே
விளக்கவுரை :
3737. பேரான வாழ்வதுவும்
பொய்யேவாழ்வு பாருலகில் பொய்யல்லால் மெய்யொன்றில்லை
நேரான சாஸ்திரமும்
இப்படியேயாச்சு நிட்சயங்க ளொன்றில்லை பூலோகத்தில்
கூரான மண்ணுக்குள்
எல்லாம்போவார் கொற்றவர்கள் ஆருந்தானில்லையப்பா
தாரான சாத்திரங்கள்
பொய்யல்லாது தாரணியிலிருப்பார்கள் இல்லையாமே
விளக்கவுரை :
[ads-post]
3738. ஆமேதானின்னமொரு மார்க்கஞ்
சொல்வேன் அப்பனே சட்டமுனியென்ற சித்து
தாமேதா னொருவரப்பா
சித்துதாமும் தாரணியில் வெகுகாலமிருந்தாரப்பா
போமேதான் காவனத்தே
வெகுகாலந்தான் பொங்கமுடன் தானிருந்தார் தவத்தில்யாகம்
நாமேதான் சொன்னபடி
கற்பமுண்டு நாதாந்த சித்தொளிவு மிருந்தார்தாமே
விளக்கவுரை :
3739. தாமான சித்தொளிவு சிலதுகாலம்
திரினியில் சமுசார வாழ்க்கையற்று
காமான மானதொரு கற்பமுண்டு
காயத்தை எந்நாளும்நிறுத்தவென்று
வேமான மின்றியேதான் சமாதிபூண
வேகமுடன் கானகத்தை சென்றுதாமும்
பூமானா லோகமதிலிருக்கலாகா
புகழ்பெறவே சமாதிக்கு இடங்கொண்டாரே
விளக்கவுரை :
3740. கொண்டதொரு இடமேது
என்னவென்றால் நெடுந்தூரங் காசிக்குமேற்கேயப்பா
அண்டமெனுஞ் சூரியனுங்
காணாக்காடு அவ்விடமாம் டஅகினியாளிருக்குங்காடு
தொண்டருடன்
சீஷர்களாயிரம்பேர் தொடர்ந்துமே பின்வரத்தாநடந்தார்
தண்டுளப மாலையணி
பாத்திரங்கள் சட்டமுள்ள கமண்டலமும் செயகண்டியாமே
விளக்கவுரை :