3741. செயமுடனே வீரமணி வீரசங்கு செம்மையுடன் கமண்டலமும் திருவோடுதானும்
பயமில்லாக் குளிகையது
கையிலேந்தி பாரினிலே தானடந்தார் கூட்டத்தோடு
தயவுடனே சீஷவர்க்க
மனேகம்பேர்கள் தாரிணியில் பின்னடந்து தயவாய்சென்று
வயலுடனே குன்றொன்று
இருக்கப்பார்த்து வளமுடைய சுனையென்று தங்கிட்டாரே
விளக்கவுரை :
3742. தங்கியே குகையாறு
நதியுங்கண்டு தகைமையுடன் குன்றருகே வநதுசென்று
மங்கியே மனம்வாடி
சித்துதாமும் மார்க்கமுடன் சமாதிக்கு இடமுங்கொண்டு
அங்கமுடன் இவ்வூறு
நல்லவூறாம் அத்வான கானகமாம் சித்துதாமும்
ஆங்கமுடன் சீஷர்களை
தானழைத்து துறையான குழியதுவும் தோண்டென்றாரே
விளக்கவுரை :
[ads-post]
3743. தோண்டியே சமாதியது
கட்டுமென்றார் தொல்லுலகில் ஆசையது விட்டேனென்றார்
வேண்டியதோருடைமானம்
மறந்தேனென்றார் வேகமுடன் மனைவியைத் துறந்தேனென்றார்
தூண்டியதோர் மண்ணாசை
அற்றேனென்றார் துனையான சோதரருமிழந்தேனென்றார்
பூண்டிருந்த
வாபரணபிட்டேனென்றார் பூதலத்தில் தனயர்களை மறந்திட்டேனே
விளக்கவுரை :
3744. மறந்தேனே வையகத்து
வாசையெல்லாம் மார்க்கமுடன் தானிழந்து மண்ணிற்சாய
துறந்தேனே காவிகஷாயந்தன்னை
துப்புறவாய் விட்டெறிந்தேன் மண்ணின்மேலே
கறந்ததொரு பால்போல வாசையற்று
கயிலாசங் காணுகிற இடமுங்கண்டு
பறந்திடவே எண்ணமது
கொண்டுமல்லோ பட்சமுடன் சமாதிக்கு போறேன்தானே
விளக்கவுரை :
3745. தானேதான் சமாதியிலே
சென்றபின்பு தகமையுள்ள சட்டமுனி நாதர்தாமும்
கோனான தமதையர் தட்சணாயன்
குருபரனைத் தானினைந்து மனதிலுன்னி
வேனான எனதையர் சாமிநாதன்
விட்டேனே விண்ணுலகில் ஆசையெல்லாம்
போனேனே சமாதியிட வந்தரங்கம்
பொன்னுலகு நாட்டுக்குச் சென்றேன்நானே
விளக்கவுரை :