போகர் சப்தகாண்டம் 3846 - 3850 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3846. பாரப்பா புலிப்பாணி மைந்தாகேளு பாங்குடனே காலாங்கி நாதர்தாமும்
நேருடனே சமாதிக்கு சென்றபோது நேர்மையுடன் வுபதேசம் பின்னுஞ்சொல்வார்
சீருடனே எந்தன்மேல் பட்சம்வைத்து சீவியகாலமது வுள்ளமட்டும்
பாருடனே எந்தனையும் சித்தர்தாமும் பட்சமுடன் கார்க்கவென்று பதஞ்சொல்வாரே

விளக்கவுரை :


3847. சொல்வாரே எந்தனது போகநாதா தொல்லுலகில் ரிஷிமுனிவரனேகருண்டு
வெல்லவே யவர்களிடம் வாய்பேசாதே வீணாகசித்தர்முனி கருமியுண்டு 
நல்லவர் போலுந்தனிடம் வுறவுபேசி நாதாந்த சித்தொளிவு நான்தானென்று
கொல்லவே மனந்தனிலே வினயம்பேசி கூடிருந்து வுந்தனுக்கு வினைசெய்வாரே

விளக்கவுரை :

[ads-post]

3848. வினையான நல்வினையு முனக்கிருக்க விட்டகுறை தீவினைக்கியாளதாக்கி
தினையளவு பொன்னதுவும் வுனக்குக்கூறார் தீங்கினையே விளைவிப்பார் கருமிமாண்பர்
சினங்கொண்டு வலியவே வாதுபேசி சீரான வுபதேசம் கிடைப்பதற்கு
மனங்கொண்டு தொடருவார் உந்தன்பக்கல் மர்மத்தைக்காட்டாதே மன்னாகேளு

விளக்கவுரை :


3849. காட்டாதே நாநில்லாக் காலமாச்சு கண்மணியே கலியுகமும் பிறக்கலாச்சு
வாட்டமுடன் வாதனுக்கு யிதவுரைத்து வாகுடனே நல்லவன்போலிருந்துகொண்டு
தேட்டமுடன் சிவயோகந் தன்னிற்சென்று தெளிவான சித்தர்முனி தம்மைக்கண்டு
நாட்டமுட னவர்பாதந் தொழுதுபோற்றி நலம்பெறவே பூமிதனிலிருப்பாய்தானே

விளக்கவுரை :


3850. தானான எந்தனிட போகநாதா தன்மையுள்ள கண்மணியே யின்னஞ்சொல்வேன்
தேனான தெள்ளமுர்த சிவராஜயோகா சீனபதிக்கரசுள்ளதீரா
பானான மனோன்மணியாள் குகந்தநற்பாலா பாருலகில் சித்தரமெச்சும் பண்புடையதேகா
மானான வையகத்தில் எனக்குகந்த சீஷா மாட்சியுடன் நானுரைப்பேன் யின்னுமிகக்கேளே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3841 - 3845 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3841. வரமுடனே தான்கொடுத்து காலாங்கிநாதர் வண்மையுடன் சமாதிக்குப் போகவென்று
கரமெடுத்து கண்ணதனில் ஒத்திக்கொண்டு கருத்துடனே காலாங்கிநாதர்தாமும்
சிரங்குனிந்து தண்ணீருந்தான் கலக்கிசிறப்புடனே எந்தனுக்கு புத்திகூறி
மரம்போலத் தானிருந்து காலாங்கிநாதர் மயக்கமுடன் விடைகொடுத்தார் எனக்குத்தானே

விளக்கவுரை :


3842. தானேதான் மனந்தளர்ந்து வடியேன்தானும் தகமையுடன் மறுபடியுங் கூறலுற்றார்
தேனான என்சீஷர் போகநாதா தேற்றமுடன் வுந்தனுக்குப் பின்னுஞ்சொல்வேன்
மானான வையகத்தில் கோடிசித்து மகத்தான நாதாக்களிருப்பார்பாரு
பானான மனோன்மணியாள் பாதம்பெற்ற பட்சமுள்ள சித்துகளுமிருப்பார்தாமே

விளக்கவுரை :

[ads-post]

3843. இருப்பாரே குவலயத்தில் கோடிசித்து எதிர்த்துமிகப் பேசாதே ஏந்தன்சீஷா
பொருப்புடனே யவர்களுக்குப் பணிவாய்நில்லு பொங்கமுடன் அவர்களுமே வணக்கஞ்சொல்லி
தருப்புடனே யுந்தனுக்கு வுபதேசங்கள் சாத்துவார் வபிமானந்தன்னதான
விருப்புடனே சாபமது சொல்வாரானால் வீரமுடன் எந்தனையும் நினைத்திடாயே

விளக்கவுரை :


3844. நினைக்கையிலே சாபமது சுவர்ந்துபோகும் நீனிலத்தி லுந்தனையு மதிப்புகொண்டு
பனைப்புடனே காலாங்கி சீஷனென்று பட்சம்வைத்து ஞானோபம் பின்னுஞ்சொல்வார்
தினையளவு கோபமது வாராதப்பா திறமையுடன் நீயுமொரு சித்தனாவாய்
மனையுடனே சமுசார வாழ்க்கையற்று மானிலத்தில் வாழ்கவென்று வசனித்தாரே

விளக்கவுரை :


3845. வசனித்த சொற்கேட்டு வடியேன்தானும் வையகத்தில் வெகுகோடிசித்துவாடி
தசமுடனே பத்துயுக மிருக்கவென்று தாரிணியில் காலாங்கி தம்மிடத்தில்
நிசமான குளிகையது பெற்றுக்கொண்டு நேர்மையுடன் உபதேசம் மிகவுங்கேட்டு
குசமுடனே யட்டதிசை சொல்லவென்று கொப்பெனவே வுபதேசம் பெற்றேன்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3836 - 3840 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3836. நவிலவே போகரென்ற எந்தனைத்தான் நாதாந்த சித்தொளிவைத்தானழைத்து
புவிலமுடன் சித்தொளிவு சொன்னநீதி புகழுடனே வண்ணமுடன் யானுரைப்பேன்
கவிலமதாய் காசினியி லாசைவிட்டு கர்த்தரிட பதிதேடிபோரேனப்பா 
தவிலமுடன் எப்போதும் புத்திமானாய் தாரணியில் எந்தன்பேர் கொள்ளென்றாரே

விளக்கவுரை :


3837. கொள்ளவே சன்மார்க்க புத்திவேண்டும் குவலயத்தில் மதிப்புள்ள சீஷனாக
எள்ளளவும் பிசகின்றி நடக்காவண்ணம் எழிலான சீஷனுக்கு கந்தனாவாய்
கள்ளமின்றி பொய்சூது கபடுதந்திரங் காசினியிலற்றதொரு பூமானாக
விள்ளவே யாவருக்கு மன்பனாக மேதினியி லிருப்பதுவே புத்தியாமே

விளக்கவுரை :

[ads-post]

3838. புத்தியுடன் தானிருந்து சாயுச்சியகாலம் புகழாகத் தாரிணியில் கீர்த்திபெற்று
சத்தியத்துக் கோர்நாளுந் தவறில்லாமல் சட்டமுடன் மேதினியி லிருந்துகொண்டு
நித்தியமுஞ் சதாகாலம் குருவைப்போற்றி நீதியுட னிஷ்டையிலே தானிருந்து
முத்தியுடன் நாற்பதவி பெறவே வேண்டும் மூதுலகில் இருக்கவென வரைந்திட்டாரே

விளக்கவுரை :


3839. அறையவே காலாங்கிதானுரைத்த அன்பான வார்த்தைக்கு வடியேன்தானும்
குறைகளுந்தான் நேராமல் அடியேன்தானும் குற்றமற நடப்பேன்நான் என்றுசொல்லி
திறையகத்தி லவர்பாதம் தொழுதுபோற்றி சிந்தனையாம் மெய்மறந்து நமஸ்கரித்து
முறையோடு சோடசவுபசாரத்தோடு முடிவணங்கி தொழுதிட்டேன் காலர்தாமே

விளக்கவுரை :


3840. காலராயென்மீதில் பட்சம்வைத்து கவனமுடன் நடப்பதற்கு மிகவாய்க்கூறி
பாலமுடன் நேசர்கள் மிகக்கொள்ளாதே பாரினிலே கர்மிகளும் பாவியுண்டு
கோலமுடன் நல்லவர்போலிருப்பாரப்பா பொங்கமுடன் அவர்களைத்தான் நம்பவேண்டாம்
சீலமுடன் யாருக்கு நண்பனாக சிறப்புடனே வாழ்கவென்று வரந்தந்தாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3831 - 3835 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3831. மறந்திட்ட காலாங்கி போகர்தம்மை மாற்றமுடன் தானழைத்துக் கூறலுற்றார்
சிறந்திடவே சமாதிக்குப் போறேனப்பா சீருள்ள காயாதிகற்பங்கொண்டு  
திறமுடனே வையகத்தி லிருந்துமென்ன தீர்க்கமுடன் தேகமது நிலைநில்லாது
அறந்தழைக்க எப்போதும் புனிதனாவாய் அவனியிலே வாக்குரைத்தார் காலந்தானே

விளக்கவுரை :


3832. தானான காலாங்கிநாதர்தாமும் தாரிணியில் வெகுகோடி காலமப்பா
தேனான கற்பமதுவுண்டுமல்லோ தேசத்தில் வெகுகால மிருந்தசித்து
ஊனான சடலமது வெறுத்தசித்து வுலகுதனில் மாய்கையனை தீண்டாசித்து
கோனான எனதையர் காலாங்கிசித்து கொற்றவனார் கதையுரைப்பேன் பண்பாய்த்தானே

விளக்கவுரை :

[ads-post]

3833. பண்பான காலாங்கிநாதர்தாமும் பாருலகில் மூவாசையற்றசித்து
தண்மையுடன் சினமதுவுமில்லாச்சித்து தாரிணியில் வேதமதைத் துறந்தசித்து
வண்பான வையகத்தோர் துதிக்குஞ்சித்து வளமையுடன் சீனபதியமருஞ்சித்து
நண்பான சாத்திரங்கள் யாவுங்கண்டு கரைகண்ட காலாங்கி சித்துதாமே

விளக்கவுரை :


3834. சித்தான காலாங்கி யென்றசித்து திறமுடைய காயாதி கற்பங்கொண்டு
முத்தான கூடுவிட்டு கூடுபாய்ந்து முனையாக நன்மறையுஞ்சித்துதாமும்
சத்தான சாகரமுங்கரைகண்டசித்து சாங்கமுடன் சமாதிக்குச்செல்லும்சித்து
கத்தனென்றுங் கைலங்கிரிநாதர்தம்மை காட்சியுடன் கண்டதொரு சித்துதாமே

விளக்கவுரை :


3835. தாமான ராஜாங்க சித்துவப்பா தாரணியில் யாரேனும் பணியுஞ்சித்து
சாமான மானதொரு சித்துதாமும் சதாகாலம் வையகத்திலிருந்த சித்து
கோமானகள் கொண்டாடுஞ் சித்துவப்பா குவலயத்தில் ரிஷிகள்முதல் போற்றுஞ்சித்து
நாமான கண்டமட்டும் சொல்வோம்பாரீர் நாதாக்கள் பிழைக்கவென்று நவிலத்தானே

விளக்கவுரை :


Powered by Blogger.