3836. நவிலவே போகரென்ற
எந்தனைத்தான் நாதாந்த சித்தொளிவைத்தானழைத்து
புவிலமுடன் சித்தொளிவு
சொன்னநீதி புகழுடனே வண்ணமுடன் யானுரைப்பேன்
கவிலமதாய் காசினியி
லாசைவிட்டு கர்த்தரிட பதிதேடிபோரேனப்பா
தவிலமுடன் எப்போதும்
புத்திமானாய் தாரணியில் எந்தன்பேர் கொள்ளென்றாரே
விளக்கவுரை :
3837. கொள்ளவே சன்மார்க்க
புத்திவேண்டும் குவலயத்தில் மதிப்புள்ள சீஷனாக
எள்ளளவும் பிசகின்றி
நடக்காவண்ணம் எழிலான சீஷனுக்கு கந்தனாவாய்
கள்ளமின்றி பொய்சூது
கபடுதந்திரங் காசினியிலற்றதொரு பூமானாக
விள்ளவே யாவருக்கு மன்பனாக
மேதினியி லிருப்பதுவே புத்தியாமே
விளக்கவுரை :
[ads-post]
3838. புத்தியுடன் தானிருந்து
சாயுச்சியகாலம் புகழாகத் தாரிணியில் கீர்த்திபெற்று
சத்தியத்துக் கோர்நாளுந்
தவறில்லாமல் சட்டமுடன் மேதினியி லிருந்துகொண்டு
நித்தியமுஞ் சதாகாலம்
குருவைப்போற்றி நீதியுட னிஷ்டையிலே தானிருந்து
முத்தியுடன் நாற்பதவி பெறவே
வேண்டும் மூதுலகில் இருக்கவென வரைந்திட்டாரே
விளக்கவுரை :
3839. அறையவே காலாங்கிதானுரைத்த
அன்பான வார்த்தைக்கு வடியேன்தானும்
குறைகளுந்தான் நேராமல்
அடியேன்தானும் குற்றமற நடப்பேன்நான் என்றுசொல்லி
திறையகத்தி லவர்பாதம்
தொழுதுபோற்றி சிந்தனையாம் மெய்மறந்து நமஸ்கரித்து
முறையோடு சோடசவுபசாரத்தோடு
முடிவணங்கி தொழுதிட்டேன் காலர்தாமே
விளக்கவுரை :
3840. காலராயென்மீதில்
பட்சம்வைத்து கவனமுடன் நடப்பதற்கு மிகவாய்க்கூறி
பாலமுடன் நேசர்கள்
மிகக்கொள்ளாதே பாரினிலே கர்மிகளும் பாவியுண்டு
கோலமுடன்
நல்லவர்போலிருப்பாரப்பா பொங்கமுடன் அவர்களைத்தான் நம்பவேண்டாம்
சீலமுடன் யாருக்கு நண்பனாக
சிறப்புடனே வாழ்கவென்று வரந்தந்தாரே
விளக்கவுரை :