3831. மறந்திட்ட காலாங்கி
போகர்தம்மை மாற்றமுடன் தானழைத்துக் கூறலுற்றார்
சிறந்திடவே சமாதிக்குப்
போறேனப்பா சீருள்ள காயாதிகற்பங்கொண்டு
திறமுடனே வையகத்தி
லிருந்துமென்ன தீர்க்கமுடன் தேகமது நிலைநில்லாது
அறந்தழைக்க எப்போதும்
புனிதனாவாய் அவனியிலே வாக்குரைத்தார் காலந்தானே
விளக்கவுரை :
3832. தானான காலாங்கிநாதர்தாமும்
தாரிணியில் வெகுகோடி காலமப்பா
தேனான கற்பமதுவுண்டுமல்லோ
தேசத்தில் வெகுகால மிருந்தசித்து
ஊனான சடலமது வெறுத்தசித்து
வுலகுதனில் மாய்கையனை தீண்டாசித்து
கோனான எனதையர்
காலாங்கிசித்து கொற்றவனார் கதையுரைப்பேன் பண்பாய்த்தானே
விளக்கவுரை :
[ads-post]
3833. பண்பான காலாங்கிநாதர்தாமும் பாருலகில் மூவாசையற்றசித்து
தண்மையுடன்
சினமதுவுமில்லாச்சித்து தாரிணியில் வேதமதைத் துறந்தசித்து
வண்பான வையகத்தோர்
துதிக்குஞ்சித்து வளமையுடன் சீனபதியமருஞ்சித்து
நண்பான சாத்திரங்கள்
யாவுங்கண்டு கரைகண்ட காலாங்கி சித்துதாமே
விளக்கவுரை :
3834. சித்தான காலாங்கி
யென்றசித்து திறமுடைய காயாதி கற்பங்கொண்டு
முத்தான கூடுவிட்டு
கூடுபாய்ந்து முனையாக நன்மறையுஞ்சித்துதாமும்
சத்தான சாகரமுங்கரைகண்டசித்து
சாங்கமுடன் சமாதிக்குச்செல்லும்சித்து
கத்தனென்றுங்
கைலங்கிரிநாதர்தம்மை காட்சியுடன் கண்டதொரு சித்துதாமே
விளக்கவுரை :
3835. தாமான ராஜாங்க சித்துவப்பா
தாரணியில் யாரேனும் பணியுஞ்சித்து
சாமான மானதொரு சித்துதாமும்
சதாகாலம் வையகத்திலிருந்த சித்து
கோமானகள் கொண்டாடுஞ்
சித்துவப்பா குவலயத்தில் ரிஷிகள்முதல் போற்றுஞ்சித்து
நாமான கண்டமட்டும்
சொல்வோம்பாரீர் நாதாக்கள் பிழைக்கவென்று நவிலத்தானே
விளக்கவுரை :