போகர் சப்தகாண்டம் 3736 - 3740 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3736. சவமாகி பிணமாகி மண்ணிற்றானும் சட்டமுடன் சிலகாலமிருந்துமேதான்
தவமொழிந்து காயாதிகற்பமுண்டு சங்கமுடன் பூவுலகி லிருந்துகொண்டு
பவமகற்றி எந்நாளும் வுறுதிபூண்டு பாரினிலே சித்தரைப்போல் நியமம்பூண்டு
நிதமுடனே பவமகற்றி தேகந்தன்னை நிட்சயமாய் மறந்திட்டார் சிலதுபேரே

விளக்கவுரை :


3737. பேரான வாழ்வதுவும் பொய்யேவாழ்வு பாருலகில் பொய்யல்லால் மெய்யொன்றில்லை
நேரான சாஸ்திரமும் இப்படியேயாச்சு நிட்சயங்க ளொன்றில்லை பூலோகத்தில்
கூரான மண்ணுக்குள் எல்லாம்போவார் கொற்றவர்கள் ஆருந்தானில்லையப்பா
தாரான சாத்திரங்கள் பொய்யல்லாது தாரணியிலிருப்பார்கள் இல்லையாமே

விளக்கவுரை :

[ads-post]

3738. ஆமேதானின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் அப்பனே சட்டமுனியென்ற சித்து
தாமேதா னொருவரப்பா சித்துதாமும் தாரணியில் வெகுகாலமிருந்தாரப்பா  
போமேதான் காவனத்தே வெகுகாலந்தான் பொங்கமுடன் தானிருந்தார் தவத்தில்யாகம்
நாமேதான் சொன்னபடி கற்பமுண்டு நாதாந்த சித்தொளிவு மிருந்தார்தாமே

விளக்கவுரை :


3739. தாமான சித்தொளிவு சிலதுகாலம் திரினியில் சமுசார வாழ்க்கையற்று
காமான மானதொரு கற்பமுண்டு காயத்தை எந்நாளும்நிறுத்தவென்று
வேமான மின்றியேதான் சமாதிபூண வேகமுடன் கானகத்தை சென்றுதாமும்
பூமானா லோகமதிலிருக்கலாகா புகழ்பெறவே சமாதிக்கு இடங்கொண்டாரே

விளக்கவுரை :


3740. கொண்டதொரு இடமேது என்னவென்றால் நெடுந்தூரங் காசிக்குமேற்கேயப்பா
அண்டமெனுஞ் சூரியனுங் காணாக்காடு அவ்விடமாம் டஅகினியாளிருக்குங்காடு
தொண்டருடன் சீஷர்களாயிரம்பேர் தொடர்ந்துமே பின்வரத்தாநடந்தார்  
தண்டுளப மாலையணி பாத்திரங்கள் சட்டமுள்ள கமண்டலமும் செயகண்டியாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3731 - 3735 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3731. வந்ததுவும் சமாதியது வெடித்துமேதான் வாகுடனே பிரசன்ன சொரூபமாக
அந்தமுடன் மச்சமுனி சித்துதாமும் அவனியிலே வந்தவுடன் சீஷவர்க்கம்
சொந்தமுடன் ஆயிரம்பேர ஆடிவந்து சொரூபமென்ற சித்தொளிவைக்கண்டபோது
பந்தமுடன் மச்சமுனி ரிஷியார்தாமும் பருலகில் அனேகவித வளஞ்சொன்னாரே

விளக்கவுரை :


3732. சொன்னாரே பலபலவாஞ்சித்துதாமும் தோற்றமுடன் சீஷவர்க்கமனேகமாக
பன்னியே நாதாந்த சித்துதாமும் பாருலகில் அதிசயங்கள் கூறும் வண்ணம்
உன்னவே வாதிசேடனிலுமாகா வஉலகத்தில் கண்டறியவாகுமோசொல்  
மன்னவர்ல் முதலானோர் இப்படியே வாழ்வு மானிலத்தில் யாரேனும் இப்படிதான் பாரே

விளக்கவுரை :

[ads-post]

3733. பாரேதான் மச்சமுனி சித்துதாமும் பாருலகில் இரந்தாரோ மண்ணாகிப்போனார்
நேரேதான் சித்தொளிவு சிலதுகாலம் நேர்மையுடன் பூமிதனி லிருப்பதுண்டு
சீரேதான் சிலகால மிருந்துசென்று சிறப்புடனே மேதினிக்கு வருவதுண்டு
வேரேதான் தேகமது இறப்புமுண்டோ வித்தகனே நிட்சயந்தானில்லைதானே

விளக்கவுரை :


3734. தானேதான் வாக்கியங்கள் கட்டுமொழியுண்டு தாரிணியில் எல்லாநூல் பொய்யுமாகும்
தேனான எனதையர் காலாங்கிநாதர் திகழுடனே எந்தனுக்கு சொன்னநீதி
பானான முறைப்படியே சாத்திரம் பார்வையிட்டு ஜெனனமது பொய்யென்றெண்ணி
மானான நானிலத்தில் குளிகைபூண்டு மார்க்கமுடன் சீனபதி போனேன்பாரே

விளக்கவுரை :


3735. பார்த்தேனே சீனபதிதன்னின் மார்க்கம் பாங்குடனே யவ்விடத்தில் சித்துதாமும்
தீர்க்கமுடன் நதிமலைகள் சித்துவாடி சென்றுமே சீனபதி கடலோரந்தான்
ஏர்க்கவே சமாதியது பூண்டுகொண்டு எழிலாகத்தாமிருந்தார் அனேகம்பேர்கள்
மூர்க்கமுடன் ரிஷிதேவர் தேகந்தன்னை மூதுலகில் விட்டுமல்லோ சவமானாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3726 - 3730 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3726. படுத்தாbரெ மச்சமுனி ரிஷியார்தாமும் பாருலகில் சீஷரெல்லாந்திடுக்கிட்டேங்க
தொடுத்தாரே சகபூரணத்தைத்தானும் தோற்றமுடன் லாகிரியிலகித்துக்கொண்டு
விடுத்தாரே காவிகஷாயந்தன்னை விட்டெறிந்தார் மேதினியில் பலரும்பார்க்க
கொடுத்தாரே இதிகாச புராணமெல்லாம் கொற்றவனார் சீஷருடன் கொடுத்தார்தாமே

விளக்கவுரை :


3727. தாமான சாஸ்திரத்தை கொடுத்துவிட்டு தகமையுடன் சித்தரவர் கண்ணைமூடி
பாமான பராபரியை மனதிலுண்ணி பாகமுடன் கையிரண்டு மேந்திக்கொண்டு
சீமான லோகமது வாழ்வுமறந்து சிறப்புடனே சின்மயத்தி லிருந்துகொண்டு
கோமான சீஷவர்க்கந்தனையழைத்து கொப்பெனவே தாமுரைத்தார் வதீதந்தானே

விளக்கவுரை :

[ads-post]

3728. தானான வதீதமது என்னவென்றால் சாற்றினார் சீஷவர்க்கமெல்லாருக்கும்
தேனான மொழியதுவு மென்னவென்றால் தெளிந்த நல்லசீஷர்களெ எந்தனுக்கு
கோனான குருசொன்னபடியாகத்தான்குறிப்புடனே பாறையது மேலேமூடி
பானான ஈஸ்பரியாள் கடாட்சத்தாலே பாரினிலே கீர்த்தியது பிறப்பிப்பீரே

விளக்கவுரை :


3729. பிறக்கவே காயமது சமாதிபூண்டு பேருலகில் பேரின்பந் தன்னைக்கொண்டு
இறங்குகிறேன் சமாதியது தன்னிலப்பா எழிலான தேகமது மூச்சடங்கி
உறக்கமுடன் படுத்திடவே மச்சர்தாமும் வுத்தமர்கள் கற்பாறை கொண்டுமூடி
திறக்கவே பனிரெண்டு வாண்டுதானும் தீர்க்கமுடன் கட்டளைகள் பிறக்கலாச்சே

விளக்கவுரை :


3730. ஆச்சப்பா பனிரண்டுங் கடந்துபோச்சு அப்பனே மச்சமுனி சித்துதாமும்
மூச்சடங்கி யிருந்தாரே சித்துதாமும் மூதுலகில் வருவதற்கு நாளுமாச்சே
பாச்சலுடன் மச்சமுனி ரிஷியார்தாமும் பாங்குடனே வருவதற்கு முன்னதாக
மாச்சலுடன் சீஷவர்க்கமாயிரம்பேர் மதிப்புடனே சமாதிக்கு வந்திட்டாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3721 - 3725 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3721. தாமான வாழ்வதுவும் பொய்யுமாகும் தாரிணியி லிருந்ததொரு சித்துமில்லை
நாமான சொன்னதொரு மார்க்கம்போகும் நாடெல்லா மிப்படியே பொய்யேவாழ்வு
தாமான வாழ்வுக்கு வெகுகோடிகாலம் தகைமையுன் ஆசையது மிகவுமாகி
பூமான்கள் எல்லவரும் மண்ணாய்ப்போனார் பூதலத்தில் வாழ்வெல்லா மிப்படிதானாச்சே

விளக்கவுரை :


3722. ஆச்சப்பா வாழ்வெல்லாம் பொய்யேயல்லாமல் அப்பனே யாதொன்றுமில்லைகண்டீர்
மூச்சப்பா போய்விடும் கடிகைதன்னில் முதலான பாக்கியமும் ஒழிந்துபோகும்
ஏச்சப்பா தேகமிது இருந்தாலுந்தான் எப்படியும் லாபமென்ன ஒன்றுமில்லை
கூச்சமன்றி தேகத்தை மறைந்தாயானால் குவலயத்தில் மெய்யான சித்தென்பாரே

விளக்கவுரை :

[ads-post]

3723. சித்தனா மின்னமொரு மார்க்கம்பாரு சீரான என்மகனே சொல்லக்கேளு
சுத்தமுடன் மச்சமென்ற முனிவர்தாமும் சொருபராமென்றொருவர் சித்துவுண்டு
புத்தியுள்ள சித்தனப்பா மச்சர்தாமும் புகழாக சமாதிக்கு இடமுங்காண
முத்தியுடன் பெறுவதற்கு காவனத்தைநோக்கி முயன்றுமே வராககிரி வந்திட்டாரே

விளக்கவுரை :


3724. வந்திட்ட போதுமல்லோ சித்துதாமும் வளமுடனே வராககிரி தன்னைக்கண்டு
பந்திட்ட மாகவல்லோ சமாதிபூண பாங்குடனே சீஷவர்க்கமனேகம்பேர்கள்
தந்திட்ட மாகவல்லோ கூட்டங்கூடித் தமதடியார் வாசீர்மம் விட்டுவந்து
முந்திட்டுக் குழியது மிகவாய்ச்செய்து மூதுலகில் யோகமது நீந்திட்டாரே

விளக்கவுரை :


3725. நீங்கியே சமாதியது போகவென்று நீனிலத்தில் மச்சமுனிரிஷியார்தானும்
நோக்கமுடன் குழிதோண்ட விடையுந்தந்து நுணுக்கமுடன் சீஷருக்கு வுபதேசித்து
நார்க்கமலம் வீற்றிருக்கும் மனோன்மணியாள்தம்மை நயமுடனே காணுதற்கு எண்ணங்கொண்டு
தூக்கமுடன் சிவயோகந் தன்னில்நின்று சத்தமுடன் குழிதனிலே படுத்தார்தாமே

விளக்கவுரை :


Powered by Blogger.