போகர் சப்தகாண்டம் 3721 - 3725 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3721 - 3725 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3721. தாமான வாழ்வதுவும் பொய்யுமாகும் தாரிணியி லிருந்ததொரு சித்துமில்லை
நாமான சொன்னதொரு மார்க்கம்போகும் நாடெல்லா மிப்படியே பொய்யேவாழ்வு
தாமான வாழ்வுக்கு வெகுகோடிகாலம் தகைமையுன் ஆசையது மிகவுமாகி
பூமான்கள் எல்லவரும் மண்ணாய்ப்போனார் பூதலத்தில் வாழ்வெல்லா மிப்படிதானாச்சே

விளக்கவுரை :


3722. ஆச்சப்பா வாழ்வெல்லாம் பொய்யேயல்லாமல் அப்பனே யாதொன்றுமில்லைகண்டீர்
மூச்சப்பா போய்விடும் கடிகைதன்னில் முதலான பாக்கியமும் ஒழிந்துபோகும்
ஏச்சப்பா தேகமிது இருந்தாலுந்தான் எப்படியும் லாபமென்ன ஒன்றுமில்லை
கூச்சமன்றி தேகத்தை மறைந்தாயானால் குவலயத்தில் மெய்யான சித்தென்பாரே

விளக்கவுரை :

[ads-post]

3723. சித்தனா மின்னமொரு மார்க்கம்பாரு சீரான என்மகனே சொல்லக்கேளு
சுத்தமுடன் மச்சமென்ற முனிவர்தாமும் சொருபராமென்றொருவர் சித்துவுண்டு
புத்தியுள்ள சித்தனப்பா மச்சர்தாமும் புகழாக சமாதிக்கு இடமுங்காண
முத்தியுடன் பெறுவதற்கு காவனத்தைநோக்கி முயன்றுமே வராககிரி வந்திட்டாரே

விளக்கவுரை :


3724. வந்திட்ட போதுமல்லோ சித்துதாமும் வளமுடனே வராககிரி தன்னைக்கண்டு
பந்திட்ட மாகவல்லோ சமாதிபூண பாங்குடனே சீஷவர்க்கமனேகம்பேர்கள்
தந்திட்ட மாகவல்லோ கூட்டங்கூடித் தமதடியார் வாசீர்மம் விட்டுவந்து
முந்திட்டுக் குழியது மிகவாய்ச்செய்து மூதுலகில் யோகமது நீந்திட்டாரே

விளக்கவுரை :


3725. நீங்கியே சமாதியது போகவென்று நீனிலத்தில் மச்சமுனிரிஷியார்தானும்
நோக்கமுடன் குழிதோண்ட விடையுந்தந்து நுணுக்கமுடன் சீஷருக்கு வுபதேசித்து
நார்க்கமலம் வீற்றிருக்கும் மனோன்மணியாள்தம்மை நயமுடனே காணுதற்கு எண்ணங்கொண்டு
தூக்கமுடன் சிவயோகந் தன்னில்நின்று சத்தமுடன் குழிதனிலே படுத்தார்தாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar