போகர் சப்தகாண்டம் 3751 - 3755 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3751. சித்தான சட்டமுனி நாதர்தாமும் ஜெகஜோதி காயமது வுலகிற்றுன்ன
பத்தியுடன் காயாதி கற்பங்கொண்ட பாங்கான தேகமது ஜோதிமின்ன
வெத்தியுடன் மேதினியில் வந்துதாமும் விருப்பமுடன் சீஷர்களை யாசீர்மஇத்து
புத்தியது மிகவாகச்சீஷருக்கு போதித்தார் சட்டமுனி நாதர்தாமே

விளக்கவுரை :


3752. போதித்த வசரீரிவாக்குதன்னை பொங்கமுடன் தாள்கேட்டு தாள்பணிந்து
ஆதித்தன் போலுதித்த சித்துதம்மை அடியார்கள் கூட்டமெல்லாம் சிரங்குனிந்து
சோதித்த சட்டமுனி நாதர்தம்மை சொரூபமுடன் முன்னின்று வினயங்கேட்க
பேதித்த கைலாசநாதர்தாமும் பேரான சீஷருக்கு வுறைப்பார்தானே

விளக்கவுரை :

[ads-post]

3753. தானேதான் சீஷவர்க்கந் தனையழைத்து தகமையுள்ள லேகாவதிசயங்களெல்லாம்
மானேதான் யான்கண்ட வரைக்குஞ்சொல்வேன் மகத்தான வாழ்வதுவும் பொய்யேவாழ்வு
தேனான சீஷர்களே யின்னஞ்சொல்வேன் தேகமது வுலகுதனில் நிலைநில்லாது
போனவர்கள் மண்தனிலே மடிந்தபேர்கள் பொங்கமுடன் பூமிதனில் வருவார்தாமே  

விளக்கவுரை :


3754. வருவாரே காயாதி கற்பங்கொண்ட வரமுடைய ரிஷியாரும் வருவாருண்டோ
குருவான எனதையர் கடாட்சத்தாலே கொற்றவனே வுபதேசம் பெற்றேன்யானும்
அருளான வுபதேசங் கொண்டதாலே அவனியிலே மறுபடியும் வந்தேனென்று
திருவான மனோன்மணியாள் கடாட்சம்பெற்று திரும்பி வந்தேன் மாணாக்காள் என்றிட்டாரே

விளக்கவுரை :


3755. என்றுமே சட்டமுனி நாதர்தாமும் எழிலாகத்தாமுரைப்பார் சீஷருக்கு
தென்றிசைக்கு சிலகாலம் போரேனென்று தேர்வேந்த சீஷருக்கு விடையுஞ்சொல்ல
நன்றதென்று சீஷவர்க்க மாயிரம்பேர் நலமுடனே யாம்கூட வருவோமென்று
அன்றலுடன் பின்தொடர்ந்தார் மாய்கைவிட்டு அடர்ந்துமே பின்தொடர்ந்தார் சீஷர்தாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3746 - 3750 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3746. சென்றாராம் சட்டமுனி ரிஷியார்தாமும் சிறப்புடனே சமாதிதனிலிருக்கும்போது
நின்றதொரு சீஷவர்க்கமாயிரம்பேர் நிலையான சமாதிதனிற் பாதுகாக்க
வென்றிடவே அசரீரிவாக்குதானும் விருப்பமுடன் சீஷவர்க்கங் கேட்கலாச்சு
இன்றுமுதல் முப்பத்திரண்டு வாண்டு முனிவரும் இருக்கவென்ற வாக்குண்டாச்சே

விளக்கவுரை :


3747. ஆச்சப்பா சித்துமுனி சொரூபர்தாமும் அங்ஙனவே சீஷர்கட்கு வாக்குரைத்தார்
மூச்சப்பா தேகமது வடங்கிப்போச்சு மூதுலகங் காண்பதற்கு வெகுநாட்செல்லும்
போச்சப்பா தேகமது வொடுங்கிப்போச்சு பேரான சடலமது மண்ணுள்ளாச்சு
ஏச்சப்பா தேகமது வழியாதென்று எழிலுடனே சப்தமது பிறக்கலாச்சே

விளக்கவுரை :

[ads-post]

3748. பிறந்ததொரு சப்தமதை சீஷவர்க்கம் பேரான வாயிரம்பேர் கேட்டபின்பு
இறந்ததொரு சட்டமுனி மடிவதில்லை யினிதிரும்பி வருவதற்கு ஐயமில்லை
திறமுடனே நமமையர் சட்டநாதர் தீரமுடன் பூவுலகில் வருவாரென்று
உறமுடனே மாணாக்களாயிரம்பேர் வுற்றதொரு சமாதியிடங் காத்தார்பாரே

விளக்கவுரை :


3749. பாரேதான் சமாதியிடங் கார்த்தபோது பாருலகில் நெடுங்காலந்தானுமாச்சு
சீரேதான் சித்துவருங்காலமாச்சு சீரான வாயிரம்பேர் சீஷவர்க்கம்
ஊரோடு கூடியல்லோ கும்பலாக வுத்தமர்கள் சீஷவர்க்கம் சமாதிசென்று
தேரான சமாதியிடம் நின்றுகொண்டு தோற்றமுடன் வேதங்கள் ஓதுவாரே

விளக்கவுரை :


3750. ஓதவே சமாதியிடங் கெடுவுமாச்சு வுத்தமர்கள் வேதபாராயணங்கள்
நீதமுடன் அர்ச்சனைகள் சமாதிபூசை நித்திலங்கும் பூமுடியா ரோதும்போது
வேதமுடன் கைலாச சட்டநாதர் வேதாந்த சித்தொளிவின் சமாதிதானும்
தீதமுடன் சமாதியது வெடித்தபோது திரளுடனே புறப்பட்டார் சித்துதாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3741 - 3745 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3741. செயமுடனே வீரமணி வீரசங்கு செம்மையுடன் கமண்டலமும் திருவோடுதானும்
பயமில்லாக் குளிகையது கையிலேந்தி பாரினிலே தானடந்தார் கூட்டத்தோடு
தயவுடனே சீஷவர்க்க மனேகம்பேர்கள் தாரிணியில் பின்னடந்து தயவாய்சென்று
வயலுடனே குன்றொன்று இருக்கப்பார்த்து வளமுடைய சுனையென்று தங்கிட்டாரே

விளக்கவுரை :


3742. தங்கியே குகையாறு நதியுங்கண்டு தகைமையுடன் குன்றருகே வநதுசென்று
மங்கியே மனம்வாடி சித்துதாமும் மார்க்கமுடன் சமாதிக்கு இடமுங்கொண்டு
அங்கமுடன் இவ்வூறு நல்லவூறாம் அத்வான கானகமாம் சித்துதாமும்
ஆங்கமுடன் சீஷர்களை தானழைத்து துறையான குழியதுவும் தோண்டென்றாரே

விளக்கவுரை :

[ads-post]

3743. தோண்டியே சமாதியது கட்டுமென்றார் தொல்லுலகில் ஆசையது விட்டேனென்றார்
வேண்டியதோருடைமானம் மறந்தேனென்றார் வேகமுடன் மனைவியைத் துறந்தேனென்றார்
தூண்டியதோர் மண்ணாசை அற்றேனென்றார் துனையான சோதரருமிழந்தேனென்றார்
பூண்டிருந்த வாபரணபிட்டேனென்றார் பூதலத்தில் தனயர்களை மறந்திட்டேனே

விளக்கவுரை :


3744. மறந்தேனே வையகத்து வாசையெல்லாம் மார்க்கமுடன் தானிழந்து மண்ணிற்சாய
துறந்தேனே காவிகஷாயந்தன்னை துப்புறவாய் விட்டெறிந்தேன் மண்ணின்மேலே
கறந்ததொரு பால்போல வாசையற்று கயிலாசங் காணுகிற இடமுங்கண்டு
பறந்திடவே எண்ணமது கொண்டுமல்லோ பட்சமுடன் சமாதிக்கு போறேன்தானே

விளக்கவுரை :


3745. தானேதான் சமாதியிலே சென்றபின்பு தகமையுள்ள சட்டமுனி நாதர்தாமும்
கோனான தமதையர் தட்சணாயன் குருபரனைத் தானினைந்து மனதிலுன்னி
வேனான எனதையர் சாமிநாதன் விட்டேனே விண்ணுலகில் ஆசையெல்லாம்
போனேனே சமாதியிட வந்தரங்கம் பொன்னுலகு நாட்டுக்குச் சென்றேன்நானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3736 - 3740 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3736. சவமாகி பிணமாகி மண்ணிற்றானும் சட்டமுடன் சிலகாலமிருந்துமேதான்
தவமொழிந்து காயாதிகற்பமுண்டு சங்கமுடன் பூவுலகி லிருந்துகொண்டு
பவமகற்றி எந்நாளும் வுறுதிபூண்டு பாரினிலே சித்தரைப்போல் நியமம்பூண்டு
நிதமுடனே பவமகற்றி தேகந்தன்னை நிட்சயமாய் மறந்திட்டார் சிலதுபேரே

விளக்கவுரை :


3737. பேரான வாழ்வதுவும் பொய்யேவாழ்வு பாருலகில் பொய்யல்லால் மெய்யொன்றில்லை
நேரான சாஸ்திரமும் இப்படியேயாச்சு நிட்சயங்க ளொன்றில்லை பூலோகத்தில்
கூரான மண்ணுக்குள் எல்லாம்போவார் கொற்றவர்கள் ஆருந்தானில்லையப்பா
தாரான சாத்திரங்கள் பொய்யல்லாது தாரணியிலிருப்பார்கள் இல்லையாமே

விளக்கவுரை :

[ads-post]

3738. ஆமேதானின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் அப்பனே சட்டமுனியென்ற சித்து
தாமேதா னொருவரப்பா சித்துதாமும் தாரணியில் வெகுகாலமிருந்தாரப்பா  
போமேதான் காவனத்தே வெகுகாலந்தான் பொங்கமுடன் தானிருந்தார் தவத்தில்யாகம்
நாமேதான் சொன்னபடி கற்பமுண்டு நாதாந்த சித்தொளிவு மிருந்தார்தாமே

விளக்கவுரை :


3739. தாமான சித்தொளிவு சிலதுகாலம் திரினியில் சமுசார வாழ்க்கையற்று
காமான மானதொரு கற்பமுண்டு காயத்தை எந்நாளும்நிறுத்தவென்று
வேமான மின்றியேதான் சமாதிபூண வேகமுடன் கானகத்தை சென்றுதாமும்
பூமானா லோகமதிலிருக்கலாகா புகழ்பெறவே சமாதிக்கு இடங்கொண்டாரே

விளக்கவுரை :


3740. கொண்டதொரு இடமேது என்னவென்றால் நெடுந்தூரங் காசிக்குமேற்கேயப்பா
அண்டமெனுஞ் சூரியனுங் காணாக்காடு அவ்விடமாம் டஅகினியாளிருக்குங்காடு
தொண்டருடன் சீஷர்களாயிரம்பேர் தொடர்ந்துமே பின்வரத்தாநடந்தார்  
தண்டுளப மாலையணி பாத்திரங்கள் சட்டமுள்ள கமண்டலமும் செயகண்டியாமே

விளக்கவுரை :


Powered by Blogger.