போகர் சப்தகாண்டம் 3826 - 3830 of 7000 பாடல்கள்
3826. காணலா மென்றதுமே கமலர்தாமுங்
காசினியில் தாமுரைத்து சமாதிபூண்டார்
தோணவே தொல்லுலகைத்தான்மறந்து
துறையோடு முறையோடும் சமாதிபூண்டு
வேணவே இதிகாசபுராணகற்பை
விருப்பமுடன் தாமறிந்த சித்துதாமும்
பூணவே மிகவறிந்து சீஷருக்கு
பத்திமதி சொல்லியல்லோ மறைந்திட்டாரே
விளக்கவுரை :
3827. மறைத்தாரே
சீனபதிக்கடலோரந்தான் மகத்தான கமலமுனி நாதர்தாமும்
இருந்தாரே புஜண்டருட
சமாதிபக்கல் எழிலான கடலோரந்தன்னிலப்பா
துறந்துமே சீஷவர்க்கந்
தனைப்பிரிந்து தொல்லுலகில் சமுசார வாழ்க்கையற்று
திறமுடனே சமாதிதனி
லிறங்கியேதான் தீரமுடன் பூமியில் ஐக்கியமானாரே
விளக்கவுரை :
[ads-post]
3828. ஆனாரே காலாங்கிநாதரப்பா
அப்பனே சமாதியது சொல்வேன்பாரு
தேனமிர்த முண்டுமல்லோ
பூமிதன்னில் தெளிவுடனே சிலகால மிருந்தார்தாமும்
கோனான எனதையர் சாமிதானும்
குவலயத்தி லதிசயங்கள் மிகவும்பார்த்து
பானான சாத்திரத்தின்
படியாகத்தான் பதனமுடன் சமாதிக்கு நண்ணனாரே
விளக்கவுரை :
3829. நண்ணவே லோகமெல்லாஞ்
சுத்திவந்து நலமான கானாறு மலைகள்தாண்டி
குண்ணதனில் வெகுபேர்கள்
சித்துதம்மை குறிப்புடனே கண்டுமல்லோ மிகவாதித்து
எண்ணமுடன் சீனபதி
கடலோரந்தான் எழிலாகச் சமாதியது மிகவேபூண
வண்ணமுடன் நாதாந்த
சித்துதாமும் வளமையுடன் சமாதியிடம் வந்திட்டாரே
விளக்கவுரை :
3830. வந்திட்ட
காலாங்கிநாதர்தாமும் வண்மையுடன் சமாதிக்குப் போரேனென்று
நொந்திட்ட தன்மனது
வுறுதிகொண்டு நொடிக்குள்ளே சமாதிக்குப்போரேனென்று
வெந்திட்ட தன்மனது
கருகிவேறாம் வேதாந்த சற்குருவை மனதிலெண்ணி
அந்தமுடன் அவனிதனி
லாசையற்றேன் அன்பான தோழனைத்தான் மறந்திட்டாரே
விளக்கவுரை :