3816. காண்பாரே
லோகவதிசயங்களெல்லாம் காசினியில் வெகுகோடி சித்துவித்தை
வீண்பாக குருவில்லா
சீஷன்முன்னே வித்தையன்னும் கவிதனையே கற்றாப்போல
மாண்பமைந்த வதிசயங்க
ளெல்லாந்தோன்றும் மானிலத்தில் அசரீரிவாக்குதோன்றும்
ஆண்மையுள்ள சீஷரெல்லாங்
காதாற்கேட்டு அவனியிலே தானடுங்கி மயங்குவாரே
விளக்கவுரை :
3817. மயங்கியே நிற்கையிலே அசரீரிவாக்கு மானிலத்திலதிகமதாய் கேட்கலாகும்
தியங்கியே சப்தமது
வடங்கிப்போச்சு திறமான கூட்டத்தார் சிலதுகாலம்
புயங்கமுடன் அங்கிருந்தார்
சீஷவர்க்கம் புகழான சித்தொளிவு வருகுமட்டும்
தயங்கியே கார்த்திருந்தார்
சமாதிதன்னில் தாரணியில் சித்துவரும் நாளுமாச்சே
விளக்கவுரை :
[ads-post]
3818. ஆச்சப்பா சித்துவரும்
காலமாச்சு அங்கிருந்த சீஷரெல்லாம் சமாதிமுன்னே
மூச்சடங்கிப் போனதொரு
சித்துதாமும் மூதுலகில் வருகின்ற நாளுமாச்சு
பாச்சலுடன்
மனதில்நினைக்கும்போது பளிச்சென்று பாறையது வெடித்ததங்கே
கூச்சலுடன் தேவதா கோஷ்டந்தானும்
கொப்பெனவே சீஷருக்கு கேட்கலாச்சு
விளக்கவுரை :
3819. கேட்டுமே சித்தொளிவை
வெளியிற்காண கவனமுடன் சீஷரெல்லாம் பயந்துயேங்கி
நீட்டமுடன் மேதினியில்
வந்தபோது நேர்மையுடன் சீஷவர்க்கந்தாள்பணிந்து
கோட்டமுடன் சித்தொளிவைச்
சூழ்ந்துகொண்டு கொப்பெனவே யாசீர்மம் மிகவுஞ்செய்ய
தேட்டமுடன் கமலமுனி
சித்துதாமும் தேற்றமுடன் ஞானோயமோதுவாரே
விளக்கவுரை :
3820. ஓதியே
சீஷவர்க்கந்தன்னைக்கேட்டார் வுத்தமரே வதிசயங்கள் நடந்ததென்ன
நீதமுடன் அசரீரிவாக்குவண்ணம்
நிலைதப்பிப்போகாமல் நடந்ததுண்டோ
வேதமொழி தப்பாதுயானுரைத்தேன்
மேதினியி லதிசயங்க ளுள்ளதெல்லாம்
சோதனையின் பிரகாரம்
சூட்சாதாரம் சொரூபமாகத் தானறிந்து சொன்னேன்பாரே
விளக்கவுரை :