3821. பாரேதான் கமலமுனி
சொன்னவாக்கு பாரினிலே பொய்யல்லால் மெய்யொன்றில்லை
சீரேதான் சொன்னபடி
நடக்கலாச்சு சிறப்பான வுபதேசம் மெய்யுமாச்சு
நேரேதான் வேதமுறை
தப்பாவண்ணம் நேர்மையுடன் ஞானோபம் பெறுவதற்கு
தேரேதான் நாளாச்சு
என்றுசொல்லி தெளிவுடனே கமலமுனி வுரைத்தார்தாமே
விளக்கவுரை :
3822. தாமான சீஷவர்க்கந்
தன்னைப்பார்த்து தகமையுடன் ஞானோபம் சொல்லும்போது
பூமானம் சீஷவர்க்கம்
அனைத்தும்பார்த்து பூவுலகில் அதிசயங்கள் எல்லாந்தேர்ந்து
நாமான கபிலமுனி சொன்னவாக்கு
நளினமுடன் நடந்தேறிப் போச்சுதென்று
ஆமெனவே
சீஷவர்க்கமொன்றாய்க்கூடி அடிவணங்கி முடிவணங்கி தொழுதிட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
3823. இட்டதொரு கமலமுனி
சொன்னவாக்கு எழிலுடனே பின்னும்யான் சமாதிபூண
சட்டமுடன் தாரிணியி
நிற்கேனென்றும் சாங்கமுடன் தாமுரைத்தார் கமலர்தாமும்
திட்டமுடன் சமாதிக்குப்
போரேனென்றும் தீரமுடன் கோடிவரையிருப்பேனென்றும்
வட்டமுடன் காயாதிகொண்டதாலே
வாகான தேகமது வழியாதன்றே
விளக்கவுரை :
3824. அன்றான காயாதி கற்பந்தன்னால்
அழியாது தந்தேகமழியாதென்றும்
குன்றான மலைபோலே
யிருப்பேனென்றும் குவலயத்தி லின்னும்வெகுவதிசயங்கள்
வென்றிடவே சமாதிதனி
லிருப்பேனென்று வீரமுடன் தாமுரைத்தார் சீஷருக்கு
சென்றிடவே இனிதிரும்பி
வருவதில்லை சேர்வையது வுலகுநாள் முடிவுமாச்சே
விளக்கவுரை :
3825. ஆச்சப்பா வுலகுதன்னில் முடிவுகாலம் அவனியிலே யாவரையுங் காணலாகும்
பேச்சப்பா இறந்தவர்கள்
வருவதில்லை பேரான வுலகுதனில் மொழிபொய்யாகும்
மூச்சடங்கிப் போனதொரு
தேகந்தானும் மூதுலகில் மறுபடியஉம் வருவதுண்டோ
பாச்சலுடன் தேகமது
முடிவுகாலம் பாரினிலே யாவரையுங்காணலாமே
விளக்கவுரை :