போகர் சப்தகாண்டம் 4011 - 4015 of 7000 பாடல்கள்
4011. காணேணே சீனபதி தேசம்போலே
கண்டதில்லை ஒருதேசம் யானுமப்பா
பாலமுடன் சீனபதி கடலோரத்தில்
பண்பான மலையொன்று குகைதானுண்டு
வானர்முதல் வந்திறங்கும்
பொய்கையுண்டு வளமான மண்டபந்தான் அங்கொன்றுண்டு
தோணவே குளிகையது
பூண்டுகொண்டு தொல்லுலகை யான்மறந்து சென்றேன்பாரே
விளக்கவுரை :
4012. சென்றேனே மலையிட்டு
மண்டபத்தில் சேனநெடுங்காத வழிபோனேன்யானும்
நின்றதொரு இடிமலையாம்
அங்கொன்றுண்டு நிலையான சப்தரிஷி மலைதானாகும்
குன்றான
மலையோரங்குளிகைகொண்டு கொற்றவனார் காலாங்கி தனைநினைத்து
தென்திசையில் பொதிகைமுனி
கார்த்தார்ப்போல தேர்வேந்தே யெந்தனையுங் காரென்றாரே
விளக்கவுரை :
[ads-post]
4013. காரென்று சொல்லுகையில்
காலாங்கிதம்மை கருத்திலே தான்நினைத்து நமஸ்கரித்து
ஆரென்று நினையாமல் ஐயர்பாதம்
வப்பனே வணங்கினேன் கார்க்கவென்று
பாரென்னைக் காத்தருள
வேண்டுமென்று பட்சமுடன் ஆதரிக்க மனமுவந்து
சீரென்ற நாமமது பேர்விளங்கி
சிறப்புடனே யான்தொழுதேன் போகர்தாமே
விளக்கவுரை :
4014. தாமான அதிசயங்கள்
யின்னஞ்சொல்வேன் தாக்கான மலைகளிலே ரிஷிகளப்பா
கோமானகள் தாமறியார்
ரிஷியார்தம்மை குவலயத்தில் சத்தரிஷி யானுங்கண்டேன்
நாமான வரீசியென்ற
ரிஷியார்தாமும் நலமான முதல்வரையி லிருந்தாரப்பா
வேமானமாகவல்லோ
அத்திரியார்தாமும் வேகமுடன் இரண்டாங்கால் வரைமீதுண்டே
விளக்கவுரை :
4015. உண்டான அங்கீசுய
ரிஷியார்தாமும் வுத்தமனே மூன்றாங்கால் வரையிலப்பா
திண்டான
தவபதியிலிருந்துகொண்டு திறமான யோகநிஷ்டை செய்வாரப்பா
கண்டேனே நாலாங்கால்
வரையிலப்பா கனமான புலஸ்தியரைக் கண்டேன்யானும்
சண்டமாருதம்போல
ஐந்தாங்காலாம் சங்கநிதி மேல்வரையிலிருப்பார்பாரே
விளக்கவுரை :