போகர் சப்தகாண்டம் 4006 - 4010 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 4006 - 4010 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4006. கடலான ஏழுவரை கோடிமட்டும் காசினியில் குளிகைகொண்டு சுத்திவந்தேன்
மடலான சீனபதிகடலும்விட்டு மகத்தான திருப்பாலின் கடலுங்கண்டேன்
அடவர்க வஷ்டதிசை சுத்திவந்தேன் அப்பனே மற்றசாகரமும் கண்டேன்
திடலான நெய்க்கடலும் நானும்கண்டேன் தீர்க்கமுடன் வுவர்கடலுங் கண்டேன்நானே

விளக்கவுரை :


4007. கண்டேனே யுவர்கடலை கடந்தபின்பு கடிதானன தயிர்க்கடலை யானுங்கண்டேன்
விண்டேனே மதுபானக்கடலுங்கண்டேன் விரிவான கறுப்பன் சாகரமும் கண்டேன்
அண்டமெலாம்புகழும் நன்னீரான வழகான சாகரமும் கண்ணிற்கண்டேன்
தண்டுலவ மாலையணிகிருஷ்ணன்கொண்ட சாகரமாம் மத்திபத்தில் இறங்கினேனே

விளக்கவுரை :

[ads-post]

4008. இறங்கினேன் கிருஷ்ணனவர் பள்ளிகொண்ட எழிலான கடலினது நடுமையத்தில்
அறங்குடைய ஆவிலையைக்கண்டேனங்கே வப்பனே குளிகைகொண்டு வதின்மேல் நின்றேன்
திறமுடைய குளிகையது வலுவினாலே தீர்க்கமுடன் சென்றேறி வந்தேனப்பா
சிறகில்லாப் பட்சியது போலேநானும் கீர்த்தியுடன் குளிகையினால் பறந்திட்டேனே

விளக்கவுரை :


4009. இட்டேனே சத்தசாகரமுங்கண்டேன் எழிலான சத்ததீவுகளுங்கண்டேன்
திட்டமுடன் சம்புவென்ற தீவதங்கண்டேன் திகழான இலட்சமார் தீவுகண்டேன்
சட்டமுடன் செத்தீவு யானுங்கண்டேன் சார்பான கிரவுஞ்சத்தீவு கண்டேன்
வட்டமாஞ் சாகரத்தின் தீவுகண்டேன் மளமான சான்மலியுங் கண்டேன்பாரே

விளக்கவுரை :


4010. பாரேதான் சான்மலிவு தீவுகண்டேன் பாங்கான புஷ்கரத் தீவுகண்டேன்
நேரேதான் சத்ததீவுகளுங்கண்டேன் நேரான குளிகையது பூண்டுகொண்டு
சீரேதான் காலாங்கி புஜபலத்தால் சிறப்புடனே லோகமெலாம் சுத்திவந்தேன்
கூரேதான் சீனபதி யானுஞ்சென்றேன் குவலயத்தி லிதுபோல ஒன்றுங்காணே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar