போகர் சப்தகாண்டம் 4001 - 4005 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 4001 - 4005 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4001. ஆதியென்ற சத்தி பராபரமேகாப்பு அகிலமெலாம் பேர்படைத்த வுமையாள் காப்பு
நீதியெனும் பரஞ்சோதி சுடரேகாப்பு நீடாழி யுலகனைத்தும் கொண்டோன்காப்பு
பாதிமதி சடையணிந்த பரமன்காப்பு பாதாளந்தனில் வாழும் சேடன்காப்பு
ஜோதியெனும் காலாங்கி பாதங்காப்பு சுத்தமுடன் தான்பணிந்தேன் பாதங்காப்பே

விளக்கவுரை :


4002. பணிந்தேனே காலாங்கிநாயர்பாதம் பாங்கான திருவடிக்கி நமஸ்கரித்தேன்
துணிந்bதெனே காண்டமது ஏழுஞ்சொன்னேன் துறையான வாயிரத்துக்கு ஒருகாண்டந்தான்
மணிபோன்ற போகர்யேழாயிரந்தான் மகத்தான நூலிதுகாண் பெருநூலப்பா
கணிதமுடன் காண்டமிது வைந்துமாகும் காசினியில் வெகுமதியை யறியலாமே

விளக்கவுரை :

[ads-post]

4003. அறியவே ஐந்தாவதானகாண்டம் வவனிதனில் அதிசயங்கள் இதிலடக்கம்
குறியான காண்டமது வைந்துக்குள்ளே குவலயத்தில் மலைகுகைகள் சாகரங்கள்
தெரியாத கானாறு குன்றுதானும் தெளிவான சத்தநதி யிதிலடக்கம்
சரியான சீனபதிமார்க்கமெல்லாம் சட்டமுடன் கூறுவேன் போகர்தானே

விளக்கவுரை :


4004. தானான காண்டமது வைந்துக்குள்ளே சாகரத்தின் பெருமையெலாம் சாற்றலாகும்
கோனான யெனதையர் காலாங்கிநாதர் குருபாதந்தனை வணங்கி யானுஞ்சொல்வேன்
பானான மனோன்மணியாள் முன்னேநிற்க பாடிவைத்தேன் போகரேழாயிரந்தான்
மானான நாதாக்கள் என்பேரிற்தான் மனங்கோபங் கொள்ளாமல் மன்னிப்பீரே

விளக்கவுரை :


4005. கொள்ளவே பிரிதிவென்ற பூமிதானும் குவலயத்தில் நான்கிலோர் பங்குமாகும்
விள்ளவே சத்தசாகரமுமப்பா மிக்கான மூன்றுபங்கென்னலாகும்
உள்ளவே காலாங்கி கிருபையாலே உத்தமனார் அடியேனும் குளிகைபூண்டு
தெள்ளமிர்தமானதொரு சாகரந்தான் தேற்றமுடன் திருப்பாலின் கடலுமாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar