போகர் சப்தகாண்டம் 4141 - 4145 of 7000 பாடல்கள்
4141. சூழ்ந்தாரே யெனையும்
சீஷவர்க்கம் சூட்சாதியானதொரு மார்க்கமெல்லாம்
தாழ்ந்துமே எந்தனையும்
கேட்கும்போது சட்டமுடன் யானுரைத்தேன் பச்சைதன்னை
ஆழ்ந்ததொரு கடல்தனிலே
மலைதானுண்டு அப்பனே வடகோடியாழிதன்னில்
வாழ்ந்துமே பச்சைமலை
தன்னிலப்பா வாகுடனே வெகுகால மிருந்தேன்பாரே
விளக்கவுரை :
4142. இருந்தேனே யின்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் எழிலான மாண்பர்களே கேளும்கேளும்
திருத்தமுடன்
வடகோடியாழிதன்னில் தீரமுடன் பச்சையது எடுக்கவென்றால்
பொருந்தவே நீராவிக்கப்பல்
தானும்போகாது கடலுக்குத்தடந்தானில்லை
வருந்தியே
சுழலதுவும்மெத்தவுண்டு வாகான பட்சிமுதல் மடிந்துபோமே
விளக்கவுரை :
[ads-post]
4143. மடியுமே கடலுக்கு
மேற்பாகத்தில் வளமுடனே ஆகாயம்பறக்கும்பட்சி
துடியுமே தான்பறந்து
சுழலுமாழி துப்புறவாய் சலமதிலே விழுகும்பாரு
அடியில்
கற்பாறைதனிமெத்தவுண்டு அலைகடலில் தடமதுவுங் காணப்போமோ
நொடியான
வாகாயக்கூண்டுதன்னில் நோக்கமுடன் தீவுக்குசெல்லலாமே
விளக்கவுரை :
4144. செல்லலாம் யானுரைத்த
கூண்டினாலே சிறப்புடனே தீவுக்குப்போகலாகும்
வெல்லவே
ஆகாயமார்க்கந்தன்னில் விருப்பமுடன் கூண்டைவிட்டு இறங்கியல்லோ
புல்லவே
யான்சொன்னவாசீர்மத்தில் புகழான வடகோடி கடலில்தானும்
நல்லதொரு பச்சையென்ற
மலையைக்கண்டு நலமுடனே இறங்கியல்லோ யெடுக்கலாமே
விளக்கவுரை :
4145. எடுக்கலாம் பச்சையென்ற
களஞ்சியத்தை எழிலான வடகோடியாருதன்னில்
தொடுக்கவே
கூண்டுவழிமார்க்கமாக தோராமல் பச்சைதனை எடுக்கவேண்டும்
விடுக்கவே
யாகாயந்தனிலெழும்பி விடுபட்டுச் சுழலதனைதாண்டியேதான்
ஒடுக்கமுடன்
சீனபதிகோட்டைக்குள்ளே வுத்தமனே இறங்கவென்று வுரைத்திட்டேனே
விளக்கவுரை :