4136. இறங்கியே மோனகுரு
யெதிர்முன்பாக எழிலாக குளிகைகொண்டு நின்றேனங்கே
திறமுடைய சித்தர்களோ
வாயிரம்பேர் தீரமுடன் எந்தனை யேசிக்கவந்தார்
நிற்மான பச்சையென்ற
சித்துதாமும் நீராக்கி எந்தனையும் சபிக்கவந்தார்
மாய்போலே நின்றுவிட்டேன்
போகர்யானும் மார்க்கமுடன் தள்பணிந்து தரிசித்தேனே
விளக்கவுரை :
4137. தெரிசித்தேன்
மோனமகாரிஷியைத்தானும் தீரமுடன் வடகோடிகானகத்தில்
பரிசித்து ரிஷியாரும்
பச்சைமீதில் பாங்குடனே வீற்றிருந்த வாசீர்மந்தான்
வரிசையுடன்
மோனமகாரிஷியாசீர்மம் வண்மைதனைக் காணவென்று வந்தேன்யானும்
குளிகையென்ற மோனகுரு
வாசீர்மத்தை குறிப்புடனே யான்கண்டு வணங்கினேனே
விளக்கவுரை :
[ads-post]
4138. வணங்கவே ரிஷியாரும்
என்னைப்பார்த்து வாகுடனே யாரப்பாயென்றுகேட்க
இணங்கவே காலாங்கி
சீடனென்றேன் எழிலான மோனகுருரிஷியாசீர்மம்
சுணங்கமது வாராமல்
அடியேன்தன்னை சூட்சமுடன் தன்னருகில் வரவழைத்து
மனமுடனே எந்தனுக்கு
ஞானோபதேசம் மார்க்கமுடன் வரமதுவுங் கொடுத்தார்பாரே
விளக்கவுரை :
4139. பாரேதான் வெகுகோடி காலமப்பா
பட்சமுடன் பச்சையென்ற மலைதான்மீதில்
நேரேதான் அக்கினியும்
நவதாதோடு நேர்மையுடன் தானறிந்து இருந்தேனங்கே
சீரேதான் சிலகாலஞ்
சென்றபின்பு திகழுடனே மோனமகரிஷியையானும்
சாரமுடன் ஞானோபதேசம்பெற்று
சட்டமுடன் சீனபதியேகினேனே
விளக்கவுரை :
4140. ஏகவே சீனபதிப்போகவென்று எழிலான குளிகைதனைப்பூண்டுகொண்டு
வேகமுடன்
சீனபதிவந்தேன்யானும் வெட்டவெளி ஆகாயங்கோட்டைதன்னில்
சாகமுடன் குளிகையிட்டு
இறங்கியேதான் சட்டமுடன் மாண்பரெல்லாங் கண்டேன்யானும்
சோகமுடன்
சீஷவர்க்கங்கண்டபோது சுத்தியெனை வந்துமல்லோ சூழ்ந்தார்பாரே
விளக்கவுரை :