4131. தானான மலைவளத்தை
கண்டேன்யானும் தகமையுள்ள சித்தர்களோ சொல்லொண்ணாது
கோனான சித்தரென்னைக்
கண்டபோது குவலயத்து மனிதரப்பா குளிகைகொண்டு
ஏனோதான் இம்மலையில்
வந்தீரென்றார் எழிலான சித்தரெனைக் கேட்டபோது
நாமேதான் காலாங்கி
சீடனென்றேன் நாதாக்கள் காணவல்லோ வந்திட்டாரே
விளக்கவுரை :
4132. வந்தேனே குருவினது பதாம்புயத்தை வணக்கமுடன் காணுதற்கு குளிகைகொண்டேன்
அந்தமுடன் பச்சையென்ற
மலையைக்காண வன்புடனே யானுமல்லோ வந்தேனென்றேன்
சொந்தமுடன் யானுரைக்கும்
வார்த்தைகேட்டு சுந்தரனார் சித்தர்முனிரிஷிகள்யாவும்
எந்தன்மேல் பட்சமது
மிகவும்வைத்து எழிலாக கூறறுற்றார் சித்தர்தாமே
விளக்கவுரை :
[ads-post]
4133. சித்தான சித்துமுனி
ரிஷிதானப்பா சிறப்புடனே எந்தனையும் போர்த்துமேதான்
பத்தியுடன்
காலாங்கிபாதம்போற்றி பாலகனே யிம்மலையில் வந்ததாலே
வெத்திபெற எந்தனையும்
சபிக்கவந்த வேதாந்த சித்தரெல்லாம் மனமிதங்கி
சுத்தியுடன் இதிகாசப்புராணமெல்லாம்
சூட்சாதி சூட்சமுடன் சொன்னார்பாரே
விளக்கவுரை :
4134. சொன்னாரே எந்தனுக்கு
வேகஞானம் சொரூபமென்ற சுடரொளியைக் காணவென்று
மன்னாகேள் காலாங்கி போகநாதர்
மகிமையுள்ள ஆசீர்மம் இங்கொன்றுண்டு
தென்பாறை பச்சையென்ற
மீதிலப்பா தேர்வேந்தர் அறியாரும் ஒருவருண்டு
முன்னேதான் பெரியார்கள்
சொன்னாப்போல மோனமென்ற ஞானகுரு சித்துவுண்டே
விளக்கவுரை :
4135. உண்டான சித்துமகா
ரிஷியார்தாமும் ஓகோகோ நாதாக்கள்
ஆசீர்மந்தான்
கண்டேனே பச்சையென்ற
மலையின்மீதில் காவலர்கள் ஆயிரம்பேர் சூழ்ந்திருக்க
திண்டான வாசீர்மங்
கிண்டியேதான் தீரமுடன் குளிகைதனை பூண்டுகொண்டு
அண்டமதில் தான்பரந்து
மேலேநின்று வப்பனே குளிகைகொண்டு இறங்கினேனே
விளக்கவுரை :