போகர் சப்தகாண்டம் 4161 - 4165 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4161. சொன்னவுடன் அடியேனும் கால்நடுங்கி சித்தமுடன் தலைகுனிந்து சாஷ்டாங்கித்தேன்
நன்னயமாய் காலாங்கிநாதர்தம்மால் நாடிவந்தேன் ஆசீர்மம் தன்னையென்றே
வுன்னிதமாய் கெம்புநதி காணவென்று உகந்ததொரு குளிகைதனைக் கொண்டுவந்து
மன்னவே யாசீர்மம் கிட்டிவந்தேன் பட்சமுடன் எந்தனுக்கு அருள்செய்வீரே

விளக்கவுரை :


4162. அருளென்று சொல்லுகையில் வடியேன்மீது வன்புடனே கிருபையது மிகப்புரிந்து
தெருள்கலையிற் தெள்ளமுதே தேனேமானே தெவிட்டாத கண்மணியே போகர்பாலா
இருளகற்றஞ் செந்தேனே சிங்கவெறே எழிலான குணக்குன்றே யோகவானே
பொருளான ஞானோபதேசங்கேட்கும் பொன்னவனே யுந்தனுக்கு யருள்சொல்வேனே

விளக்கவுரை :

[ads-post]

4163. சொல்வேனே ஞானோபதேசந்தன்னை சூட்சாதி சூட்சமத்தை யுனக்குரைப்பேன்
வல்லதொரு காலாங்கிநாதர்பாலா வளமையெல்லா முந்தனுக்கு யோதுவேன்யான்
வெல்லவே ஞானோபதேசமெல்லாம் விருப்பமுடன் உனக்களிப்பேன் என்றுசொல்லி
புல்லவே பூதலத்தின் மகிமையெல்லாம் புகழ்ச்சியுடன் எந்தனுக்கு ஓதுவாரே

விளக்கவுரை :


4164. ஓதுவார் கெம்பாறு நதியுஞ்சொன்னார் ஓகோகோ நாதாக்கள் கண்டதில்லை
வாதுரைத்த எந்தனுக்கு ரிஷியார்தாமும் வண்மையுள்ள ஞானோபமுரைத்தாரப்பா
மாதுமனோன்மணியாள் கிருபையாலே மகத்தான மகிமைகளும் சொன்னாரப்பா
சேதுபந்த மானதொரு கடலின்நேர்மை செப்பினார் எந்தனுக்கு செப்பினாரே

விளக்கவுரை :


4165. செப்பினார் கெம்புதனை எடுக்கவல்லோ சேதுபந்தம் அயோத்திக்கு மேற்கேயப்பா
ஒப்பவே கெம்பாறு வடமுகத்தில் ஓங்கியதோர் வோடையுண்டு குகைதானுண்டு
வெப்புடனே வடகோடி யாற்றையப்பா விண்ணுலகில் கண்டவர்கள் யாருமில்லை
நெப்பமுடன் எந்தனுக்கு வுளவுசொல்லி நேர்மையுடன் ஓடைதனை காண்பித்தாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4156 - 4160 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4156. கொள்ளவென்று சொல்லுகையில் அடியேன்தானும் கொப்பெனவே கெம்புந்தி எங்கேயென்றேன்
விள்ளவே எந்தனுக்கு சொன்னாரப்பா விருப்பமுடன் வடகோடிகானகத்தில்
அள்ளவே அயோத்திநகர் மேற்பாகத்தில் அழகான கெம்புந்தி என்றுரைத்தார்
மெல்லவே கெம்புந்திக் காணவென்று மேன்மையுடன் குளிகைகொண்டு விடைபெற்றேனே

விளக்கவுரை :


4157. பெற்றேனே சித்தரிடம் விடைகள்பெற்று பேரான குளிகைதனை பூண்டுகொண்டு
சுற்றமுடன் அயோத்திநகர் தன்னைநோக்கி சூட்சமுடன் மேற்பாகந்தன்னிற்சென்றேன்
வுற்றதொரு குளிகைகொண்டு மேற்பாகத்தில் ஓகோகோ நாதாக்கள் இருக்கும்ஸ்தானம்
வெற்றியுடன் காலாங்கிதனைநினைத்து விருதுடனே அடியேனும் இறங்கினேனே

விளக்கவுரை :

[ads-post]

4158. இறங்கினேன் அயோத்திநகர் மேற்பாகத்தில் எழிலான கெம்பாறு நடுமையத்தில்
திறமுடனே கெம்புகல் மண்டபந்தான் தெளிவான பதியென்று குகைதானுண்டு
நிறமான கெம்பென்ற சித்தர்தானும் நீலவர்ணன் முகம்போல சித்தொன்றுண்டு
உறமான மண்டபத்தில் தவசியாரும் வுற்பனமாய்த் தானிருக்கக் கண்டிட்டேனே

விளக்கவுரை :


4159. கண்டிட்டேன் குளிகையது பூண்டுகொண்டு கடிதான கெம்பாறு நடுமையத்தில்
தண்டுளமாலையணி கிருஷ்ணன்போலே தவமுடைய சித்தொருவர் அங்கேயுண்டு
மண்டனுகர் தானறியா தீவுதானும் மகத்தான கெம்பாறு மண்டபந்தான்
அண்டமெலாம் தான்புகழும் நதிதானப்பா வப்பனே கெம்பாறு பார்த்திட்டேனே

விளக்கவுரை :


4160. பார்த்தேனே ரிஷியாரை யடியேன்தானும் பட்சமுடன் பக்கல்தனில் யானுஞ்சென்றேன்
தீர்த்தமுடன் கெங்காநதிபானத்தோடு திறமுடனே வஞ்சலிகள் மிகவுஞ்செய்தேன்
சேர்ந்ததுமே எந்தனையுங் கொண்டனைத்து சிறுபாலா எங்குவந்தீர் என்றுரைத்தார்
ஏர்க்கவே எந்தன்மேல் பட்சம்வைத்து எழிலான வாசீர்மம் சொன்னார்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4151 - 4155 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4151. செப்பவென்றால் அவர்களிடம் கிட்டிநின்றேன் செங்கதிரோன் போல்வீசும் சடலமப்பா
ஒப்பவே தேகமது ரோமந்தானும் உத்தமனே கரடியென்றே செப்பலாகும்
இப்புவியில் யாரேனுங்கண்டதில்லை எழிலான கரடிமயிர்சித்தரப்பா  
அப்பதியில் ஆசீர்மம் யாருங்காணார் அலைகடலில் வழிகாணார் மாண்பர்தாமே

விளக்கவுரை :


4152. மாண்பான வையகத்தில் யானுமல்லோ வளமுடனே குளிகைகொண்டு சென்றேனப்பா
வீண்போகாக் காலமதுயான்கடந்து விருப்பமுடன் அட்டதிசை காணவென்று
காண்பான வடகோடித் தாண்டியல்லோ கையிலைபதிக்கொப்பான தீவுதன்னில்
ஆண்மையுடன் சென்றுமல்லோ சித்துதம்மை வன்புடனே யான்கண்ட வளஞ்சொன்னேனே

விளக்கவுரை :

[ads-post]

4153. சொல்லவே யாசீர்மம் தன்னில்நின்று சுடரான சித்தர்முனி தன்னைக்கண்டு
வல்லதொரு ரோமமுள்ள சித்தரப்பா வண்மையுடன் எந்தனையாரென்றுகேட்க
புல்லறிவானதொரு வடியேன்தானும் புகழுடனே காலாங்கி சீஷனென்றேன்
மெல்லவே எந்தனையு மாசீர்மித்து மேன்மையுடன் பட்சமது கொண்டார்தாமே

விளக்கவுரை :


4154. கொண்டாரே காலாங்கி பேருரைக்க கொப்பெனவே ரோமமென்ற கரடிசித்து
சண்டமாருதம் போலக்கோபங்கொண்ட சகலருமே யென்பேரி லாசீர்மித்து
கண்டுமே யுதேசஞ் செய்வதற்கு கருத்திலே மனதுவந்து வடியேனுக்கு
விண்டதொரு ஞானோபதேசமெல்லாம் விருப்பமுடன் போதித்தார் சித்தர்தாமே

விளக்கவுரை :


4155. சித்தான சித்துமுனி ரிஷிதானப்பா சிறப்புடனே எந்தனுக்கு யாவுஞ்சொல்லி
முத்தான வாசீர்மம் பெருமைசொல்லி மூதுலகில் மகிமையெல்லாம் தானுரைத்து
எத்தலமுங் கண்டுவந்த சிறுபாலா எழிலான யாசீர்ம் மகிமையெல்லாம்  
சுத்தமுடன் உந்தனுக்கு யாமுரைத்தோம் சூட்சாதி சூட்சமெல்லா மறிந்துகொள்ளே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4146 - 4150 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4146. உரைத்தேனே யின்னமொரு மார்க்கங்கேளு வகமையுள்ள புலிப்பாணி மைந்தாசொல்வேன்
நிரைப்படியே எனதையர் காலாங்கிநாதர் நேராகயெந்தனுக்குச் சொன்னமார்க்கம்
திரையான வடகோடி யாழிதன்னில் தீர்க்கமுடன் ஆசீர்மம் அங்கொன்றுண்டு
வடகோடி கானகந்தான் சொல்லொண்ணாது வாகான குளிகைகொண்டு சென்றேன்பாரே

விளக்கவுரை :


4147. பாரேதானாழி தடகும்யான்கடந்தேன் பாங்கான வாசீர்மம்தன்னிற்செல்ல
நேரேதான் குளிகையது கொண்டுமல்லோ நேரான வடகோடி கானகத்தில்
தீரேதான் குளிகையது கொண்டுமல்லோ நேரான வடகோடி கானகத்தில்
ஊரேதா னொன்றில்லை கடல்தானப்பா வுத்தமனே யாசீர்மம் நதியாருண்டே

விளக்கவுரை :

[ads-post]

4148. உண்டான வாசீர்மம் தன்னிற்சென்று ஓகோகோ நாதாக்கள் பெருமைதன்னை
கண்டேனே வடகோடி யாசீர்மத்தில் கனமான சித்தர்முனி ரிஷிகள்யாவும்
தொண்டருடன் வாசீர்மந்தன்னைச்சுற்றி சொரூபமென்ற சித்தொளிவு சொல்லொண்ணாது
அண்டர்முனி ராட்சதர்கள் காணாநாடு வப்பனே குளிகைகொண்டு சென்றேன்தானே

விளக்கவுரை :


4149. தானான குருபதத்தைக் காணவென்று தாக்கான மனோன்மணியாள் அருளும்பெற்று
கோனான யெனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் குருமொழிசொற்படிக்கி
தேனான குளிகைகொண்டு சென்றுமல்லோ தெளிவுடனே யாசீர்மம் தன்னில்நின்றேன்
பானான கமபிளியாஞ் சித்தர்தாமும் பாற்கடலில் எந்தனையும் பார்திட்டாரே

விளக்கவுரை :


4150. பார்தாரே நடுக்கடல் ஆசீர்மத்தில் பாங்கான சித்துமுனி ரிஷிகளெல்லாம்
வேர்த்துமுகமாயிருக்க யானுங்கண்டேன் வீரான தேகமெல்லாம் ரோமமப்பா
கீர்த்தியுள்ள சித்தரப்பா வையகத்தில் சிறப்பான லோகமதிற்கண்டதில்லை
பூர்த்தியா மகிமையது சொல்லொண்ணாது பொன்னுலகு சித்தரென்று செப்பலாமே

விளக்கவுரை :


Powered by Blogger.